2023 உ.கோ’யில் வாசிங்டன் சுந்தர் கண்டிப்பாக விளையாட வேண்டும் என சொல்லக்கூடிய 4 முடியாத காரணங்கள் இதோ

Sundar-1
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 2022 டி20 உலக கோப்பையில் ஏமாற்ற தோல்வியை சந்தித்த இந்தியா அடுத்ததாக சொந்த மண்ணில் நடைபெறும் 2023 50 ஓவர் உலகக் கோப்பையை வெல்லும் பயணத்தை தொடங்கியுள்ளது. பொதுவாகவே சொந்த மண்ணில் வலுவான அணியாக கருதப்படும் இந்தியா கடைசியாக கடந்த 2011ஆம் ஆண்டு எம்எஸ் தோனி தலைமையில் 28 வருடங்கள் கழித்து கோப்பை வென்று சரித்திரம் படைத்தது. எனவே இம்முறை எப்படியாவது கோப்பையை வெல்ல ஆயத்தமாகும் இந்தியா அதற்கு தேவையான கிரிக்கெட் வீரர்களை கண்டறியும் வேலைகளையும் தொடங்கியுள்ளது.

sundar

- Advertisement -

அந்த வகையில் அந்த உலகக் கோப்பையில் தமிழகத்திலிருந்து அஷ்வின் போன்றவர்கள் வயது காரணமாக பங்கேற்க மாட்டார்கள் என்பது உறுதியாகியுள்ள நிலையில் தற்போதைய நிலைமையில் வாஷிங்டன் சுந்தர் மட்டுமே இந்திய அணியில் நெருங்கியுள்ளார். இருப்பினும் முதன்மை வீரர்களுக்கு மத்தியில் அவருக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பது சந்தேகமாக பார்க்கப்படுகிறது. ஆனால் அவர் 2023 உலக கோப்பையில் விளையாட வேண்டும் என்று சொல்வதற்கான சில காரணங்களை பற்றி பார்ப்போம்:

1. டாப் ஆல்-ரவுண்டருக்கான திறமை: 18 வயதிலேயே கடந்த 2017ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் காயத்தால் வெளியேறிய நிலையில் 2வது போட்டியை 5 வருடங்கள் கழித்து கடந்த பிப்ரவரியில் 23 வயதில் விளையாடினார். அப்போது முதல் கிடைத்த வாய்ப்புகளில் பேட்டிங்கிலும் பந்து வீச்சிலும் அசத்தலாக செயல்பட்டு வரும் அவர் இதுவரை 12 போட்டிகளில் 212 ரன்களை 35.3 என்ற நல்ல சராசரியிலும் 14 விக்கெட்களை 4.7 என்ற அற்புதமான எக்கனாமியிலும் எடுத்துள்ளார்.

Washington Sundar.jpeg

ஐபிஎல் தொடரிலேயே முரட்டுத்தனமான பேட்ஸ்மேன்கள் அடித்து நொறுக்கும் பவர் பிளே ஓவர்களில் தைரியமாக பந்து வீசும் அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் அனைத்து நேரங்களிலும் பந்து வீசும் திறமை கொண்டவர். அத்துடன் உள்ளூர் கிரிக்கெட்டில் டாப் ஆர்டரின் விளையாடிய அனுபவம் கொண்ட சுந்தர் போட்டியின் சூழ்நிலைக்கேற்ப அனைத்து பேட்டிங் இடத்திலும் களமிறங்கும் திறமை கொண்டவர்.

- Advertisement -

அதற்கு எடுத்துக்காட்டாக சமீபத்திய நியூசிலாந்து தொடரின் ஒரு போட்டியில் கடைசி நேரத்தில் 37* (16) ரன்களை 231.25 என்ற அதிரடியான ஸ்ட்ரைக் ரேட்டில் விளாசி இந்தியா 300 ரன்களை தொடுவதற்கு உதவிய அவர் மற்றொரு போட்டியில் இந்தியா தடுமாறிய போது 51 (64) ரன்களை விளாசி 200 ரன்களை தொடுவதற்கு உதவி மானத்தை காப்பாற்றினார். அந்த வகையில் அதிரடியாகவும் நிதானமாகவும் விளையாடும் திறமை கொண்ட அவர் ஹர்டிக் பாண்டியாவை போலவே நல்ல ஆல் ரவுண்டராக வெற்றியில் தாக்கத்தை ஏற்படுத்தும் தன்மை கொண்டவர் என்று முன்னாள் வீரர் லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன் பாராட்டியிருந்தார்.

Sundar-1

2. இடது கை பேட்ஸ்மேன்: இந்திய அணியில் இடது கை பேட்ஸ்மன்களுக்கு பஞ்சாமாக இருப்பதை பயன்படுத்தி ரிஷப் பண்ட் ராஜா வீட்டுப் பிள்ளையை போல் வாய்ப்புகளை பெற்று வருகிறார். ஆனால் அவருக்கு பதில் ராகுலை விக்கெட் கீப்பராக விளையாட வைக்கும் முயற்சியை அணி நிர்வாகம் கையிலெடுத்துள்ளது. எனவே அவர் விளையாடிய 5வது இடத்தில் வாஷிங்டன் சுந்தர் கச்சிதமாக பொருந்துவார்.

- Advertisement -

ஏனெனில் ஆஸ்திரேலிய மண்ணில் பதிவு செய்த காபா வெற்றி உட்பட கிடைத்த வாய்ப்புகளில் மிடில் ஆர்டரில் மிகச்சிறந்த இடது கை பேட்ஸ்மேனாக அசத்தியுள்ள வாஷிங்டன் சுந்தர் உலகக்கோப்பை போன்ற அழுத்தமான தொடரில் சாதிக்க முடியும் என்பதையும் நிரூபித்துள்ளார்.

Washington-Sundar

3. முக்கிய தீர்வு: ஒரு காலத்தில் சச்சின் முதல் ரெய்னா வரை முதன்மை பவுலர்கள் தடுமாறும் போது பேட்ஸ்மேன்கள் பந்து வீசி விக்கெட்களை எடுத்து கொடுப்பார்கள். ஆனால் அவர்களைப் போன்ற வீரர்கள் தற்போதைய அணியில் இல்லாத காரணத்தாலேயே சமீபகாலங்களில் இந்தியா உலகக் கோப்பை வெல்ல முடியாமல் தவிப்பதாக அனில் கும்ப்ளே ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

- Advertisement -

அந்த நிலையில் நியூசிலாந்து தொடரில் அசத்திய வாஷிங்டன் சுந்தர் அதற்கு தீர்வாக வந்துள்ளதாக பாராட்டிய மற்றொரு முன்னாள் வீரர் வாஷிங் ஜாபர் அவர் நிச்சயம் உலகக்கோப்பையில் விளையாட வேண்டும் என்று கூறியிருந்தார். அந்த வகையில் 2023 உலக கோப்பையை வெல்வதற்கு பேட்டிங் மற்றும் பவுலிங் ஆகிய இரண்டிலும் அசத்தக்கூடிய வாஷிங்டன் சுந்தர் விளையாடுவது அவசியமாகும்.

Sundar 2

4. ஜடேஜா பேக்-அப்: இருப்பினும் முதன்மை வீரராக வாய்ப்பு பெறுவார் என்று எதிர்பார்க்கப்படும் ரவீந்திர ஜடேஜா அடிக்கடி காயமடைபவராக உள்ளார்.

இதையும் படிங்க: வீடியோ : நடு வானத்தில் ஒலித்த ரசிகர்களின் சச்சின் சச்சின் குரல் – அவருடைய அன்பு ரியாக்சன் இதோ

எனவே குறைந்தபட்சம் ஜடேஜாவின் பேக் அப் வீரராக இவரை உலகக்கோப்பை அணியில் இந்தியா தேர்ந்தெடுக்க வேண்டும். அப்போது தான் கடைசி நேரத்தில் அவர் காயமடைந்தால் 2022 டி20 உலகக்கோப்பை போல இந்திய அணி எந்த பின்னடைவையும் சந்திக்காது.

Advertisement