இந்திய டி20 அணியில் ரிஷப் பண்ட்டை விட தினேஷ் கார்த்திக் தொடர வேண்டும் என்று கூறுவதற்கான 3 காரணங்கள்

RIshabh Pant Dinesh Karthik
- Advertisement -

வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பையை வெல்வதற்காக 5 ஐபிஎல் கோப்பைகளை வென்ற கேப்டன்ஷிப் அனுபவம் நிறைந்த ரோகித் சர்மா தலைமையில் இந்தியா தயாராகி வருகிறது. கடந்த உலகக்கோப்பைக்கு பின் அவரது தலைமையில் பங்கேற்ற அத்தனை தொடர்களிலும் வெற்றி நடை போட்டு வரும் இந்தியா தற்போது துபாயில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரிலிருந்து இறுதிக்கட்ட உலகக்கோப்பை அணி தேர்வு செய்யப்பட உள்ள நிலையில் பாகிஸ்தானுக்கு எதிரான முக்கிய போட்டியில் 37 வயதான தினேஷ் கார்த்திக்க்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது நிறைய விமர்சனங்களை எழுப்பியுள்ளது.

Dinesh Karthik 1

- Advertisement -

ஒரு கட்டத்தில் கேரியர் முடிந்தது என்று கருதப்பட்ட தினேஷ் கார்த்திக் தம்மால் டி20 உலகக் கோப்பையை வென்று கொடுக்க முடியும் என்ற நம்பிக்கையுடன் ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்காக லோயர் ஆர்டரில் அதிரடியாக பேட்டிங் செய்து 3 – 4 வெற்றிகளை தனி ஒருவனாக பெற்றுக்கொடுத்து மிகச் சிறந்த பினிஷர் என்று நிரூபித்தார். அதனால் 3 வருடங்கள் கழித்து கம்பேக் கொடுத்து அவர் அதன்பின் நடந்த தென்ஆப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இந்தியாவின் வெற்றிகளில் முக்கிய பங்காற்றினார்.

விமர்சனத்துக்கு பதில்கள்:
குறிப்பாக 37 வயதுக்கு பின் 2 ஆட்டநாயகன் விருதுகளையும் அதிக ரன்களையும் குவித்து வரும் இந்திய வீரராக சாதனை படைத்து வரும் அவரது திறமையின் மீது நம்பிக்கை வைத்து கேப்டன் ரோகித் சர்மாவும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டும் ஆதரவு கொடுத்து வருகின்றனர். ஆனால் வருங்காலத்தை கருத்தில்கொண்டு ஏற்கனவே டெஸ்ட் கிரிக்கெட்டில் நிலையான இடத்தைப் பிடித்துள்ள ரிஷப் பண்ட்டுக்கு இப்போது முதலே வாய்ப்பளித்து வெள்ளைப் பந்து கிரிக்கெட்டிலும் வளர்த்து டி20 உலக கோப்பையில் வாய்ப்பளிக்க வேண்டும் என்று ஏராளமான விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. ஆனால் அதற்கு செவி சாய்க்காமல் இந்திய அணி தினேஷ் கார்த்திக்கை தொடர வேண்டும் என்பதற்கான 3 காரணங்களை பற்றி பார்ப்போம்:

DInesh Karthik

3. அனுபவமே ஆசான்: முதலில் 37 வயது என்பதை குறை கூறுபவர்கள் அனுபவமே ஆசான் என்ற பழமொழியை உணரவேண்டும். ஏனெனில் 2006இல் இந்தியா விளையாடிய முதல் டி20 போட்டியில் இடம் பிடித்திருந்த அணியில் இப்போதும் விளையாடும் ஒரே வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ள தினேஷ் கார்த்திக் ஏகப்பட்ட அனுபவத்தைக் கொண்டுள்ளார். ஆரம்ப காலங்களில் தடுமாறினாலும் அனுபவத்தால் இப்போது அசத்தும் அவர் 2018 நிதஹாஸ் கோப்பை பைனல் உட்பட கணிசமான சரித்திர வெற்றிகளை இந்தியாவுக்கு பெற்றுக் கொடுத்துள்ளார்.

- Advertisement -

மறுபுறம் சஞ்சு சாம்சன் போன்ற வீரர்களை புறக்கணித்துவிட்டு ஏற்கனவே ஏகப்பட்ட வாய்ப்பை பெற்றுள்ள ரிஷப் பண்ட் இதுவரை டி20 கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு ஒரு போட்டியை கூட வென்று கொடுத்ததில்லை. அத்துடன் டி20 கிரிக்கெட்டில் குருட்டுத்தனமான ஷாட்களை அடித்து ரிஷப் பண்ட் அவுட்டாகிறார். மறுபுறம் கடைசி நேரத்தில் களமிறங்கினாலும் கச்சிதமான ஷாட்டுகளை அடித்து வெற்றியை தீர்மானிக்கும் முக்கிய ரன்களை எடுப்பதே தினேஷ் கார்த்திக்கின் அனுபவத்துக்கு சான்றாகும். மேலும் ஏற்கனவே 37 வயதை கடந்துவிட்ட தினேஷ் கார்த்திக் அடுத்த உலகக் கோப்பையில் விளையாடுவது சந்தேகம் என்ற நிலைமையில் தனது கேரியரில் உச்சத்தில் இருக்கும் அவரை இப்போது இந்தியா பயன்படுத்துவதே சரியான நேரமாகும்.

2. உச்சக்கட்ட பார்ம்: ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன் போன்ற இதர விக்கெட் கீப்பர்களைவிட குறிப்பாக டி20 கிரிக்கெட்டில் தற்சமயத்தில் தினேஷ் கார்த்திக் தனது வாழ்நாளின் உச்சகட்ட பார்மில் இருக்கிறார் என்று கூறலாம். நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்காக டுப்லஸ்ஸிஸ், விராட் கோலி போன்ற நம்பிக்கை நட்சத்திரங்கள் கைவிட்ட நிறைய போட்டிகளில் கடைசி நேரத்தில் களமிறங்கி அதிரடி சரவெடியாக பேட்டிங் செய்த அவர் 330 ரன்களை 183.33 என்ற ஆண்ட்ரே ரசல், பொல்லார்ட் போன்ற வெளிநாட்டு காட்டடி மன்னர்களைக் காட்டிலும் அதிரடியான ஸ்டிரைக் ரேட்டில் வெளுத்து வாங்கினார்.

- Advertisement -

அதனால் சூப்பர் ஸ்ட்ரைக்கர் என்ற ஸ்பெஷல் விருதையும் வென்ற அவர் 3 – 4 வெற்றிகளை பெங்களூருவுக்கு தனி ஒருவனாக பெற்றுக் கொடுத்தார். டி20 கிரிக்கெட்டில் ரன்களை விட ஸ்ட்ரைக் ரேட் முக்கியம் என்பதால் அவரை தாராளமாக டி20 அணியில் தொடரலாம். அவரும் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் வாய்ப்பை கேட்கவில்லை.

Dinesh Karthik

3. வேகத்தில் அதிரடி: டி20 கிரிக்கெட்டில் 90% போட்டிகளின் கடைசி கட்ட ஓவர்களில் தரமான வேகப்பந்து வீச்சாளர்கள் தான் பந்து வீசுவார்கள். அந்த வகையில் ஐபிஎல் தொடரில் 14 இன்னிங்ஸ்ஸில் கடைசி கட்ட ஓவர்களில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக தினேஷ் கார்த்திக் 258 ரன்களை 86 என்ற சராசரியில் 224 என்ற மிரட்டலான ஸ்டிரைக் ரேட்டில் வெளுத்து வாங்கியுள்ளார்.

இதையும் படிங்க : அவர் காயமாகாமல் இருந்திருந்தா ஜெயிச்சுருப்போம் – பாக் ரசிகர்களின் உருட்டல்களுக்கு ஜடேஜா பதிலடி

அதில் 3 முறை மட்டுமே வேகப்பந்து வீச்சாளர்களிடம் அவுட்டாகியுள்ளார். எனவே வேகத்துக்கு கைகொடுக்கும் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலக கோப்பையில் அவர் விளையாடுவது இந்தியாவுக்கு மிகப்பெரிய சாதகமாக அமையும்.

Advertisement