அவர் காயமாகாமல் இருந்திருந்தா ஜெயிச்சுருப்போம் – பாக் ரசிகர்களின் உருட்டல்களுக்கு ஜடேஜா பதிலடி

Jadeja-1
- Advertisement -

ஐக்கிய அரபு நாடுகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஆசிய கோப்பை 2022 தொடரில் ஆகஸ்ட் 31-ம் தேதியான இன்று இந்தியா தனது 2வது லீக் போட்டியில் ஹாங்காங்கை எதிர்கொள்கிறது. இந்த தொடரில் நடப்பு சாம்பியனாக விளையாடி வரும் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய ஆகஸ்ட் 28ஆம் தேதியன்று நடைபெற்ற முதல் லீக் போட்டியில் பரம எதிரியான பாகிஸ்தானை போராடி 5 வித்தியாசத்தில் தோற்கடித்தது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் இந்திய பவுலர்களின் திறமையான பந்து வீச்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 147 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக முஹம்மது ரிஸ்வான் 43 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக புவனேஸ்வர் குமார் 4 விக்கெட்டுகள் எடுத்தார்.

IND vs PAK Asia Cup

அதை துரத்திய இந்தியாவுக்கு கேஎல் ராகுல் முதல் ஓவரிலேயே கோல்டன் டக் அவுட்டானதால் ஏற்பட்ட சரிவை 2வது விக்கெட்டுக்கு 49 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சரி செய்த கேப்டன் ரோகித் சர்மா 12 ரன்களும் விராட் கோலி 35 ரன்களும் எடுத்து அவுட்டானார்கள். அதன்பின் மிடில் ஆர்டரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சூர்யகுமார் யாதவ் 18 ரன்களில் நடையை கட்டினாலும் பொறுப்புடன் விளையாடிய ரவீந்திர ஜடேஜா 35 ரன்களும் அதிரடி காட்டிய ஹர்திக் பாண்டியா சிக்சருடன் 33* (17) ரன்களும் விளாசி பினிஷிங் செய்து வெற்றி பெற வைத்தனர்.

- Advertisement -

பாக் உருட்டல்கள்:
அதனால் தோல்வியடைந்தாலும் கடந்த வருடம் 152 ரன்களை நாங்கள் விக்கெட்டே விடாமல் அசால்ட்டாக சேசிங் செய்தோம் ஆனால் 148 ரன்களை துரத்துவதற்கு 5 விக்கெட்டுகளை இழந்து கடைசி ஓவர் வரை திணறினீர்களே என்ற வகையிலான கருத்துக்களுடன் பாகிஸ்தான் ரசிகர்கள் சமாளிக்கிறார்கள். அதுபோக ஏற்கனவே ஷாஹீன் அப்ரிடி இல்லாததால் தப்பிவிட்டதாக போட்டி துவங்குவதற்கு முன்பாகவே கிண்டலடித்த அவர்கள் இந்த போட்டியில் அறிமுகமாக களமிறங்கிய தங்களது வலது கை வேகப்பந்து வீச்சாளர் நாசிம் ஷா’விடம் முதல் போட்டியிலேயே உங்களுடைய பேட்டிங் மண்ணை கவ்வியதாகவும் பேசுகிறார்கள்.

Naseem Shah Pak

குறிப்பாக கேஎல் ராகுலை முதல் ஓவரிலேயே டக் அவுட் செய்து இந்தியாவின் மிஸ்டர் 360 டிகிரி பேட்ஸ்மேன் என்றழைக்கப்படும் நல்ல பார்மில் இருக்கும் சூர்யகுமார் யாதவை 18 ரன்களில் காலி செய்த அவர் மட்டும் ஆரம்பத்திலேயே காயத்தை சந்திக்காமல் இருந்திருந்தால் நிச்சயம் இந்தியாவை தோற்கடித்திருப்பார் என்றும் பாகிஸ்தான் ரசிகர்கள் உருட்டலான கருத்துக்களை தெரிவிக்கின்றனர். ஆனால் அவர் காயமடையாமல் இன்னும் அனலாக பந்துவீசியிருந்தாலும் தங்களுக்கு பின் தினேஷ் கார்த்திக் போன்றவர்கள் இருப்பதால் நிச்சயமாக வென்றிருப்போம் என்று இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா பாகிஸ்தான் ரசிகர்களின் உருட்டல்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

- Advertisement -

ஜடேஜாவின் பதிலடி:
இப்போட்டியில் 89/4 என தடுமாறியபோது 4 பவுண்டரி 1 சிக்சருடன் 35 (29) ரன்களை விளாசி வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “அந்த பாகிஸ்தான் பவுலருக்கு (நசீம் ஷா) காயம் ஏற்படாமல் இருந்திருந்தால் நாங்கள் தோற்றிருப்போம் என்று அர்த்தமல்ல. அதே போல் இலக்கு இன்னும் பெரிதாக இருந்திருந்தாலும் அல்லது அவரை விட அனுபவம் வாய்ந்த பவுலர் இருந்திருந்தாலும் அவர்களுக்கு நிச்சயம் கடைசி 2 – 3 ஓவர்களில் அழுத்தம் இருந்திருக்கும். நாங்கள் முடிந்தவரை 18 – 19 ஓவரில் அதிக ரன்களை எடுக்க முயற்சித்து அழுத்தமான கடைசி ஓவரில் அதிக ரன்கள் எடுப்பதை தவிர்க்க நினைத்தோம். அதிர்ஷ்டவசமாக எங்களது முயற்சியில் நாங்கள் சாதித்தோம்”

Jadeja-3

“நசீம் ஷா ஒரு நல்ல இளம் வேகப்பந்து வீச்சாளர். அவர் எந்த பேட்ஸ்மேனுக்கு எந்த லைன், லென்த் மற்றும் எந்த இடத்தில் பந்து வீச வேண்டும் என்பதை தெரிந்து வைத்துள்ளார். அவர்களுடைய 3 வேகப்பந்து வீச்சாளர்களும் சரியான இடங்களில் பந்து வீசியதால் எங்களுக்கு எளிதாக அமையவில்லை. மேலும் அதிகப்படியான வெப்பத்தை கொண்ட துபாய் கால சூழ்நிலை அனைத்து பவுலர்களுக்கும் பொதுவாக தானே இருந்தது. அது ஒரு அணிக்கு சாதகமாகவும் மற்றொரு அணிக்கு பாதகமாகவும் இல்லை”

- Advertisement -

“எனவே இவை அனைத்தும் அதை ஒரு தனி நபர் தேவையான தண்ணீர் மற்றும் ஆகாரங்களை எடுத்துக்கொண்டு எவ்வாறு சமாளித்து செயல்படுகிறார் என்பதை பொறுத்தது. கிரிக்கெட் வீரர்களாக அனைவரும் இதை பார்த்துக் கொள்வது அவசியமாகும். சில நேரங்களில் இது போன்ற அழுத்தமான போட்டிகளில் நீங்கள் பதற்றமடைந்தால் காயத்தை சந்திக்க நேரிடும்” என்று கூறினார்.

இதையும் படிங்க : இன்றைய போட்டியில் கோலியை பின்னுக்கு தள்ள காத்திருக்கும் ரோஹித் சர்மா – மாபெரும் சாதனைக்கான வாய்ப்பு

இந்த நிலைமையில் சூப்பர் 4 சுற்றில் மீண்டும் ஒரு முறை இந்தியா – பாகிஸ்தான் போட்டிக்கு வாய்ப்பிருப்பதால் அதை நோக்கி ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

Advertisement