சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற வரும் டெஸ்ட் போட்டியில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடர் முடிந்த கையோடு அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணியானது அங்கு நடைபெற இருக்கும் டி20 தொடர்களில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்த தொடருக்கான 16 பேர் கொண்ட இந்திய டி20 அணி பி.சி.சி.ஐ-யின் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
ஷ்ரேயாஸ் ஐயர் கேப்டனாக நியமிக்கப்பட என்ன காரணம்? : அகார்கர் விளக்கம்
அப்படி வெளியான அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து சுற்று பயணதுக்கான இந்திய டி20 அணியில் கேப்டன் சூரியகுமார் யாதவ் அதிரடியாக அணியிலிருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஐ.பி.எல் போட்டியில் சிறப்பாக செயல்பட்டு வரும் ஷ்ரேயாஸ் ஐயர் புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்டார். அதோடு வைபவ் சூர்யவன்ஷிக்கும் இந்த டி20 இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த ஆண்டு டி20 உலக கோப்பை சாம்பியன் பட்டத்தை கேப்டனாக வென்ற சூரியகுமார் யாதவை நீக்கிவிட்டு ஷ்ரேயாஸ் ஐயரை கேப்டன் பதவியில் நியமிக்க என்ன காரணம்? என்பது குறித்த தெளிவான தகவலை தேர்வுக்குழு தலைவர் அஜித் அகார்கர் பகிர்ந்துள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது : உலகக்கோப்பை வென்ற உடனே இது போன்ற ஒரு கடினமான முடிவு எப்போதுமே எடுக்கப்படுவது வழக்கம் தான்.
ஆனாலும் இது ஒரு கடினமான முடிவு. இனி முன்னேறுவதற்கான சிறந்த வழி எது என்பதை நாங்கள் மறு மதிப்பீடு செய்ய முயற்சி செய்துள்ளோம். அடுத்த இரண்டு ஆண்டுகளை கணக்கில் கொண்டும், அடுத்த உலகக் கோப்பையை கைப்பற்றும் சரியான நோக்கத்துடன் முன்னேறுவதற்கு சிறந்த வழி இது என்று நாங்கள் நினைத்தோம். ஷ்ரேயாஸ் ஐயர் இந்திய டி20 கேப்டன் பதவிக்கு தகுதியானவர்.
இதையும் படிங்க : இந்திய சீனியர் அணிக்கு தேர்வு செய்யப்பட்ட வைபவ் சூர்யவன்ஷிக்கு பி.சி.சி.ஐ வழங்கிய – சிறப்பு அனுமதி
ஏனெனில் கடந்த சில ஆண்டுகளாகவே அவரது செயல்பாடுகளை நாங்கள் கூர்மையாக கவனித்து வருகிறோம். நிச்சயம் அவர் இந்திய அணியை வழிநடத்த தகுதியானவர். கடந்த காலங்களில் அவரது செயல்பாடு கேப்டனாக திருப்பி அளித்ததாலும் அவருக்கு கேப்டன் பதவி வழங்கப்பட்டது என அஜித் அகார்கர் கூறியது குறிப்பிடத்தக்கது.



