இன்றைய போட்டியில் கோலியை பின்னுக்கு தள்ள காத்திருக்கும் ரோஹித் சர்மா – மாபெரும் சாதனைக்கான வாய்ப்பு

Rohit-and-Kohli
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் தற்போது பதினைந்தாவது ஆசியக் கோப்பை தொடரானது நடைபெற்று வருகிறது. கடந்த 2018 ஆம் ஆண்டு ஆசிய கோப்பை நடைபெற்ற போது இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் கோப்பையை கைப்பற்றி தற்போது நடப்பு சாம்பியனாக இந்த ஆசியக் கோப்பை தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. கடந்த 27-ஆம் தேதி நடைபெற்ற துவக்க ஆட்டத்தில் இலங்கை அணியை ஆப்கானிஸ்தான் அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

INDvsPAK

- Advertisement -

அதனை தொடர்ந்து இரண்டாவது ஆட்டத்தில் ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இந்திய அணி தங்களது முதல் வெற்றியை பதிவு செய்திருந்தது. அதனைத்தொடர்ந்து மூன்றாவது ஆட்டமான பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியிலும் பங்களாதேஷ் அணியை வீழ்த்தி தற்போது ஆப்கானிஸ்தான் அணியானது சூப்பர் 4 சுற்று முன்னேறி உள்ளது.

இந்நிலையில் இன்று நான்காவது ஆட்டமாக இன்று இந்தியா மற்றும் ஹாங்காங் அணிகளுக்கு இடையேயான போட்டி இரவு 7:30 மணிக்கு துபாயில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெறும் பட்சத்தில் இந்திய அணியும் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறும். தற்போது இந்திய அணியில் உள்ள அனைத்து வீரர்களின் செயல்பாடும் மிக அற்புதமாக இருந்து வருவதால் எளிதில் ஹாங்காங் அணியை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு இந்திய அணி முன்னேற உள்ளது.

Rohith

இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இன்று ஹாங்காங் அணியை வீழ்த்துவதன் மூலம் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான விராட் கோலியின் மிகப்பெரிய சாதனையை முறியடிக்க காத்திருக்கிறார். அதன்படி விராட் கோலி இதுவரை சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக 50 போட்டிகளில் கேப்டனாக இருந்து 30 வெற்றியை பெற்றுக் கொடுத்துள்ளார். அதோடு 16 போட்டியில் தோல்வியும், இரண்டு ஆட்டங்கள் முடிவில்லாமலும், இரண்டு ஆட்டங்கள் சமநிலையிலும் முடிந்துள்ளன.

- Advertisement -

அதே வேளையில் இந்திய அணிக்காக இதுவரை 36 டி20 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டுள்ள ரோஹித் சர்மா 30 வெற்றிகளைப் பெற்று கொடுத்து விராட் கோலியுடன் சமநிலை உள்ளார். இந்நிலையில் இன்று நடைபெற இருக்கும் ஹாங்காங் அணிக்கு எதிரான போட்டியில் ரோகித் சர்மா கேப்டனாக வெற்றி பெறும் பட்சத்தில் அதிக வெற்றிகளை பெற்றுக் கொடுத்த கேப்டன் என்ற பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறுவார்.

இதையும் படிங்க : இன்றைய போட்டியிலும் சொதப்பினா அவ்ளோதான். இக்கட்டான நிலையில் இந்திய வீரர் – தேர்வுக்குழு எச்சரிக்கை

இந்த பட்டியலில் தோனி 72 சர்வதேச டி20 போட்டிகளை இந்திய அணியை வழிநடத்தி 41 வெற்றிகளுடன் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. தோனி மற்றும் விராட் கோலி ஆகியோரை காட்டிலும் ரோகித் சர்மா அதிக வெற்றிகளை அதிக சராசரியுடன் பெற்றுத் தந்த கேப்டனாக (83.33%) முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement