இன்றைய போட்டியிலும் சொதப்பினா அவ்ளோதான். இக்கட்டான நிலையில் இந்திய வீரர் – தேர்வுக்குழு எச்சரிக்கை

India Dhawan
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த ஆகஸ்ட் 27-ஆம் தேதி துவங்கிய ஆசிய கோப்பை தொடரானது தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மொத்தம் ஆறு அணிகள் பங்கேற்று விளையாடி வரும் வேளையில் இந்திய அணி இந்த தொடரை கைப்பற்றும் அளவிற்கு பலமான ஒரு அணியாக பார்க்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 28-ஆம் தேதி நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தங்களது பலத்தை நிரூபித்துள்ளது.

IND vs PAK Babar Azam Rohit Sharma

- Advertisement -

அதோடு இன்று நடைபெற உள்ள ஹாங்காங் அணிக்கு எதிரான போட்டியில் விளையாட உள்ள இந்திய அணி எளிதில் வெற்றி பெறும் என்பதை இப்போதே உறுதியாக கூற முடியும். ஏனெனில் பலம் வாய்ந்த இந்திய அணி ஹாங்காங் அணியை நிச்சயம் வீழ்த்தும் என்பதே அனைவரது கருத்தாகவும் உள்ளது.

மேலும் எதிர்வரும் டி20 உலக கோப்பை தொடருக்கான வீரர்களை தேர்வு செய்யும் தொடராகவும் இந்த ஆசிய கோப்பை தொடரானது அமைந்துள்ளதால் இந்திய அணியில் உள்ள அனைத்து வீரர்களுக்குமே இந்த தொடர் மிக முக்கியமான ஒன்றாக மாறியுள்ளது.

KL Rahul

இந்நிலையில் தற்போது இந்திய அணியில் காயத்திற்கு பிறகு மீண்டும் பல மாதங்களுக்கு பின்னர் இடம் பிடித்த ராகுலின் ஆட்டம் மட்டும் தற்போது தேர்வுக்குழுவினரை வருத்தமடைய செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஏனெனில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் பெரிய அளவில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாத ராகுல் இந்த ஆசிய கோப்பை தொடரில் ரோஹித் சர்மாவுடன் களமிறங்கி அசத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது/

- Advertisement -

ஆனால் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியின் முதல் பந்திலேயே ஆட்டம் இழந்து அதிர்ச்சி அளித்தார். அந்த விடயம் தேர்வுக்குழுவினரை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. அதோடு இன்றைய ஹாங்காங் போட்டியிலும் அவர் தனது பார்மை நிரூபிக்கவில்லை என்றால் நிச்சயம் ராகுலின் இடத்திற்கு ஆபத்து ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : IND vs PAK : அருமை தெரியாமல் பேசாதீங்க, விராட் கோலியின் முன்னேறிய இன்னிங்ஸை பாராட்டும் முன்னாள் வீரர்

இதன் காரணமாக டிராவிட் கூடுதலாக ஒரு மணி நேரம் ராகுலுக்கு மட்டும் ஸ்பெஷல் பயிற்சி அளித்து வருகிறார். ராகுல் இப்படியே தொடர்ச்சியாக சொதப்பினால் அவருக்கு பதிலாக ரிஷப் பண்ட் அல்லது இஷான் கிஷன் ஆகிய இருவரில் ஒருவர் இடம் பிடிக்க வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement