IND vs PAK : அருமை தெரியாமல் பேசாதீங்க, விராட் கோலியின் முன்னேறிய இன்னிங்ஸை பாராட்டும் முன்னாள் வீரர்

Virat Kohli IND vs PAK
- Advertisement -

ஐக்கிய அரபு நாடுகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 2022 ஆசிய கோப்பை தொடரில் 2-வது லீக் போட்டியில் பரம எதிரியான பாகிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் போராடி இந்தியா தோற்கடித்தது. துபாயில் விறுவிறுப்பாக நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் இந்தியாவின் சிறப்பான பந்துவீச்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 140 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக முஹம்மது ரிஸ்வான் 43 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக புவனேஸ்வர் குமார் 4 விக்கெட்டுகளை எடுத்தார். அதை துரத்திய இந்தியாவுக்கு முதல் ஓவரிலேயே கேஎல் ராகுல் கோல்டன் டக் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தாலும் கேப்டன் ரோகித் சர்மா 12, விராட் கோலி 35, சூர்யகுமார் யாதவ் 18 என முக்கிய வீரர்கள் கணிசமான ரன்கள் எடுத்தனர்.

IND vs PAK Hardik Pandya Dinesh Kathik Rizwan

- Advertisement -

இறுதியில் ரவீந்திர ஜடேஜா 35 ரன்களும் ஹர்திக் பாண்டியா அதிரடியாக 33* (17) ரன்களும் எடுத்து பினிஷிங் செய்து வெற்றி பெற வைத்தனர். இந்த வெற்றியால் ஆசிய கோப்பையை வெற்றியுடன் துவங்கியுள்ள நடப்புச் சாம்பியன் இந்தியா கடைசியாக இதே மைதானத்தில் மோதியபோது உலககோப்பையில் முதல் முறையாக வரலாற்று தோல்வியை பரிசளித்த பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுத்து நிம்மதியடைந்தது. முன்னதாக இந்த போட்டியில் 2019க்குப்பின் சதமடிக்கவில்லை என்பதால் கடுமையான விமர்சனங்களை சந்தித்து சமீபத்திய வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே தொடரில் ஓய்வெடுத்து புத்துணர்ச்சியுடன் களமிறங்கிய விராட் கோலி முக்கியமான 35 (34) ரன்கள் எடுத்தார்.

மெதுவான பேட்டிங்:
அணியிலிருந்து நீக்குமாறு கோரிக்கை வைக்கும் அளவுக்கு எழுந்துள்ள கடுமையான விமர்சனங்களை இந்த போட்டியில் பெரிய ரன்களை அதிரடியாக சேர்த்து அடித்து நொறுக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவர் டி20 கிரிக்கெட்டில் ஒருநாள் இன்னிங்ஸ் போல 34 பந்துகளில் 35 ரன்கள் மட்டுமே எடுத்தது நிறைய ரசிகர்களை அதிருப்தியடைய வைத்தது. அதிலும் 0 ரன்களில் கொடுத்த கேட்சை பகார் ஜமான் மட்டும் பிடித்திருந்தால் அந்த 35 ரன்களும் எடுக்காமல் இந்தியாவும் தோல்வியை சந்தித்திருக்கும் என்று நிறைய பேர் மீண்டும் விமர்சிப்பதை பார்க்க முடிகிறது.

Babar-Azam-and-Virat-Kohli

இருப்பினும் முதல் ஓவரிலேயே கேஎல் ராகுல் கோல்டன் டக் அவுட்டானதால் ஏற்பட்ட கடுமையான சரிவை ரோகித் சர்மாவுடன் 49 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து மீட்டெடுத்த அவருடைய 35 ரன்களும் வெற்றியில் முக்கிய பங்காற்றியதில் எந்த சந்தேகமும் இல்லை. மேலும் உலகத்தரம் வாய்ந்தவரான அவர் சமீப காலங்களில் அதிர்ஷ்டமில்லாமல் அவுட்டானதை பார்த்த நமக்கு இப்போட்டியில் 0 ரன்களில் அவருக்கு அதிர்ஷ்டம் கொடுத்ததை குறை சொல்லும் தகுதியுமில்லை.

- Advertisement -

மஞ்ரேக்கர் ஆதரவு:
இந்நிலையில் ஐபிஎல் 2022 தொடரில் 3 கோல்டன் டக் அவுட்டானது உட்பட சமீப காலங்களில் மோசமாக செயல்பட்டதற்கு இந்த போட்டியில் விராட் கோலி சிறப்பாகவே செயல்பட்டதாக தெரிவிக்கும் முன்னாள் இந்திய வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தற்போது முன்னங்கால்கள் பின்னங்கால்கள் ஆகியவற்றை நகர்த்தி ரன்களை சேர்ப்பதில் அவருடைய பேட்டிங் முன்னேறியுள்ளதாகவும் பாராட்டினார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “இங்கிலாந்தில் அதை நான் பார்த்தேன். ஆனால் அங்கு அவர் பெரும்பாலும் முன்னங்காலில் தான் விளையாடினார். இங்கும் முன்னங்காலில் (ப்ரண்ட் ஃபுட்) விளையாடிய போது அவர் கொடுத்த கேட்ச் எதிரணி கோட்டை விட்டது”

Sanjay

“ஆனால் அதன்பின் பின்னங்காலையும் (பேக் ஃபுட்) சேர்த்து இரண்டையும் கலந்து பேட்டிங் செய்யும்போது அவருடைய இன்னிங்சில் சிறப்பாக அமையத் தொடங்கியது. அந்த அறிகுறிகளை பாகிஸ்தானுக்கு எதிரான இன்னிங்சில் பார்த்தேன். அந்த வகையில் உடனடியாக ஏதேனும் வித்தியாசமாக முயற்சிக்க வேண்டும் என்று அவர் நினைப்பது என்னை மிகவும் ஆர்வமடையச் செய்தது. அவர் பந்து வீசுவதற்கு முன்பே டெக்னிக்கல் அளவில் தன்னை மாற்றிக் கொண்டார். அதிலும் இந்த இன்னிங்ஸ்சில 2 முறை பந்து வீசுவதற்கு முன்பே கிரீஸில் பின்னோக்கி சென்றார். அப்படியானால் தற்போது அவர் பின்னங்காலில் விளையாட முயற்சிப்பதை காட்டுகிறது”

- Advertisement -

“இதற்கு முந்தைய காலங்களில் நல்ல பார்மில் அவர் இருந்தபோது செய்தவற்றை இப்போட்டியில் நான் பார்த்தேன். உங்களுக்கு நினைவிருந்தால் இந்த இன்னிங்சில் அவர் 4 ஃபுல் ஷாட் அடிக்க முயற்சித்தது தெரியும். அதில் ஒரு ஹுக் ஷாட் சிக்சராக பறந்தது. எஞ்சிய புல் ஷாட்களையும் அவர் சிறப்பாக விளையாடினார்.

இதையும் படிங்க : தப்பு கணக்கு போட்டு அடிவாங்கிய வங்கதேசம், சாகிப் அல் ஹசனை கலாய்த்து தள்ளும் ரசிகர்கள் – நடந்தது இதோ

எனவே வல்லுனராக அவர் சிறப்பாக விளையாடினார் என்பதை நான் அறிவேன்” என பாராட்டினார். இதை தொடர்ந்து ஆகஸ்ட் 31ஆம் தேதியான இன்று நடைபெறும் ஹாங்காங்க்கு எதிரான போட்டியிலும் விராட் கோலி பெரிய ரன்கள் எடுக்க முயற்சிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement