ரோஹித் சர்மாவுக்கு பதிலாக இந்தியாவின் டெஸ்ட் கேப்டனாக தகுதியான – 3 தரமான அனுபவ வீரர்களின் லிஸ்ட் இதோ

Rohit-Sharma
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இங்கிலாந்தில் நடைபெற்ற 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் உலக கோப்பையில் கொஞ்சம் கூட போராடாமல் 209 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா படுதோல்வியை சந்தித்தது. இத்தனைக்கும் உலகின் நம்பர் ஒன் கிரிக்கெட் அணியாக இருந்தும் ஐபிஎல் தொடரில் விளையாடி விட்டு முழுமையாக தயாராகாமல் பேட்டிங், பவுலிங் துறைகளில் சொதப்பிய இந்தியா 2013க்குப்பின் தொடர்ந்து 10வது வருடமாக ஐசிசி தொடரில் தோற்றது ரசிகர்களிடம் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. அதை விட டாஸ் அதிர்ஷ்டத்தை பெற்ற கேப்டன் ரோகித் சர்மா தரவரிசையில் நம்பர் ஒன் பவுலராக இருக்கும் அஸ்வினை தேர்வு செய்யாமல் சுமாராக கேப்டன்ஷிப் செய்தது தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

TEam India Rohit Sharma

- Advertisement -

மேலும் 5 ஐபிஎல் கோப்பைகளை வென்றதால் ஐசிசி தொடரில் வெற்றியை பெற்றுக் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவரது தலைமையில் 2022 ஆசிய மற்றும் டி20 உலக கோப்பையில் தோற்ற இந்தியா இப்போட்டியிலும் தோற்று எந்த மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் சந்திக்கவில்லை என்பதை நிரூபித்துள்ளது. ஒரு காலத்தில் ஹிட்மேன் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் அளவுக்கு அசத்திய அவர் சமீப காலங்களாகவே பேட்டிங்கில் தடுமாறுவதுடன் சுமாரான ஃபிட்னஸ் காரணமாக அடிக்கடி காயம் மற்றும் ஓய்வெடுப்பதை வழக்கமாக வைத்துள்ளார்.

அதனால் ஏமாற்றமடைந்துள்ள ரசிகர்களைப் போலவே வரும் டிசம்பரில் நடைபெறும் தென்னாப்பிரிக்க தொடரில் அவருக்கு பதில் புதிய கேப்டனை நியமிக்க பிசிசிஐ முடிவெடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அந்த நிலையில் அப்பதவிக்கு தகுதியான 3 வீரர்களை பற்றி பார்ப்போம்:

ashwin 1

3. ரவிச்சந்திரன் அஸ்வின்: ஜாம்பவான் கபில் தேவுக்கு நிகராக 450+ விக்கெட்களையும் 3000+ ரன்களையும் எடுத்து டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக தொடர் நாயகன் விருது பெற்ற வீரராக சச்சினையே முந்தி உலகின் நம்பர் ஒன் பவுலராகவும் நம்பர் 2 ஆல் ரவுண்டராகவும் ஜொலிக்கும் இவர் ஃபைனலில் விளையாடியிருந்தால் இந்தியா வென்றிருக்கும் என்பதே ரசிகர்களின் ஆதங்கமாக இருக்கிறது. அந்தளவுக்கு தரமான இவர் இந்நேரம் வேறு நாட்டில் பிறந்திருந்தால் நிச்சயமாக கேப்டனாக இருந்திருப்பார்.

- Advertisement -

ஆனால் இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் பிறந்ததால் ஃபைனலில் கூல்ட்ரிங்க்ஸ் தூக்கிய அவர் இதுவரை துணை கேப்டனாக கூட நியமிக்கப்படவில்லை என்பது ரசிகர்களுக்கு புரியாத புதிராகும். இருப்பினும் சயின்டிஸ்ட் என்று முன்னாள் வீரர் சேவாக் பாராட்டும் அளவுக்கு கிரிக்கெட்டின் நுணுக்கங்களை ஆழமாக தெரிந்துள்ள அனுபவமிக்க இவர் பவுலராக இருப்பதால் 2008இல் ஜாம்பவான் அனில் கும்ப்ளேவை போல 36 வயதிலும் இந்தியாவை வழி நடத்துவதற்கு தகுதியானவர் என்றால் மிகையாகாது.

Kohli

2. விராட் கோலி: 2014இல் தோனி விடைபெற்ற பின் ஆக்ரோசமாக கேப்டன்ஷிப் செய்த இவர் 2016 – 2021 வரை தொடர்ந்து 5 வருடங்களாக இந்தியாவை தரவரிசையில் நம்பர் ஒன் அணியாக ஜொலிக்க வைத்து ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளில் சரித்திர வெற்றிகளை பெற்றுக் கொடுத்தார்

- Advertisement -

அந்த வகையில் சொந்த மண்ணில் மட்டும் வெல்லும் அணியாக தடுமாறிய இந்தியாவை வெளிநாடுகளில் எதிரணிகளை தெறிக்க விடும் அணியாகவும் தோல்வியின் விளிம்புக்கு சென்றாலும் மனம் தளராமல் வெற்றிக்காக போராடும் குணத்தை இந்திய அணியில் விதைத்த இவர் வெற்றிகரமான ஆசிய டெஸ்ட் கேப்டனாக சாதனை படைத்த போதிலும் சர்ச்சைக்குரிய முறையில் பதவியை ராஜினாமா செய்தார். எனவே டெஸ்ட் கிரிக்கெட்டில் மீண்டும் இந்தியா வெற்றி நடை போடுவதற்கு இவர் அவசியம் என்றே சொல்லலாம். ஆனாலும் அந்தப் பகுதியை மீண்டும் அவர் ஏற்பாரா என்பது சந்தேகமாகும்.

1. அஜிங்க்ய ரகானே: ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் உள்ளூர் தொடரில் மும்பை அணிகளின் கேப்டனாக செயல்பட்ட அனுபவமிக்க இவர் 2020/21 பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் 36க்கு ஆல் அவுட்டாகி இந்தியா தடுமாறிய போது நான் நாடு திரும்பிய விராட் கோலியின் இடத்தில் கேப்டனாக பொறுப்பேற்று மெல்போர்ன் போட்டியில் சதமடித்து வெற்றி பாதைக்கு திரும்பினார்.

இதையும் படிங்க:விராட், ரோஹித் அளவுக்கு கொண்டாடப்படலனாலும் அவர் சாம்பியன் தான் – சீனியர் வீரரை பாராட்டிய வெங்கடேஷ் பிரசாத்

அத்துடன் அடுத்தடுத்த போட்டிகளில் முக்கிய வீரர்கள் காயமடைந்து வெளியேறிய போது ரிஷப் பண்ட், நடராஜன், வாஷிங்டன் சுந்தர் போன்ற இளம் வீரர்களை வைத்து காபா கோட்டையை தகர்த்து மூவர்ண கொடியை பறக்க விட்டு 2 – 1 (4) என்ற கணக்கில் மீண்டும் ஆஸ்திரேலிய மண்ணில் சரித்திர வெற்றியை பெற்றுக் கொடுத்த இவர் தற்போது ஃபார்முக்கு திரும்பி இந்திய அணியில் கம்பேக் கொடுத்துள்ளார். எனவே நல்ல அனுபவத்தையும் தரத்தையும் கொண்டுள்ள இவர் தற்சமயத்தில் இந்தியாவை வழிநடத்த தகுதியானவர் என்பதில் சந்தேகமில்லை.

Advertisement