விராட், ரோஹித் அளவுக்கு கொண்டாடப்படலனாலும் அவர் சாம்பியன் தான் – சீனியர் வீரரை பாராட்டிய வெங்கடேஷ் பிரசாத்

venkatesh-prasad
- Advertisement -

இங்கிலாந்தின் லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை ஃபைனலில் 209 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்த இந்தியா 2013க்குப்பின் தொடர்ந்து 10வது வருடமாக ஐசிசி தொடரில் மண்ணை கவ்வி வெறும் கையுடன் நாடு திரும்பியுள்ளது. இந்த தோல்விக்கு ஜாம்பவான்களாக போற்றப்படும் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் அரை சதம் கூட அடிக்காமல் சொதப்பியது முக்கிய காரணமானது. அதை விட இங்கிலாந்தில் இருக்கும் இதர மைதானங்களை காட்டிலும் ஓவல் சுழலுக்கு சாதகமாக இருக்கும் என்பதை அனைவரும் அறிவார்கள்.

அதனால் ஏற்கனவே அதிக இடது கை பேட்ஸ்மேன்களை அவுட்டாக்கி உலக சாதனை படைத்து தரவரிசையில் நம்பர் ஒன் பவுலராக இருக்கும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆஸ்திரேலிய பேட்டிங் வரிசையில் இருக்கும் 5 இடது கை வீரர்களுக்கு சவாலை கொடுப்பார் என்பதால் நிச்சயம் தேர்ந்தெடுங்கள் என்று சச்சின், டெண்டுல்கர், ரிக்கி பாண்டிங் சுனில் கவாஸ்கர் போன்ற ஜாம்பவான்கள் கேட்டுக் கொண்டனர். ஆனால் அதை கேட்காமல் கழற்றி விட்ட அவரை ரோகித் சர்மா – ராகுல் டிராவிட் முடிவு தோல்விக்கு நேரடி காரணமாக அமைந்தது.

- Advertisement -

சாம்பியன் அஸ்வின்:
தமிழகத்தைச் சேர்ந்த அவர் ஐபிஎல் தொடரில் சென்னைக்காக அசத்தியதால் ஹர்பஜன் போன்ற சீனியர்களை கழற்றி விட்டு தோனி கொடுத்த ஆதரவை கச்சிதமாக பயன்படுத்தி சுழலுக்கு சாதகமான மைதானங்களில் வெற்றிகளில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார். ஆனால் வெளிநாட்டு மண்ணில் சரிபட்டு வரமாட்டார் என்ற கோணத்தில் புதிதாக பொறுப்பேற்ற ரவி சாஸ்திரி – விராட் கோலி தலைமை கூட்டணி அவரை ஒதுக்கி வந்தது.

இருப்பினும் 2018க்குப்பின் அனுபவத்தால் முன்னேறி ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளில் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி அஸ்வின் 2019 – 2021, 2021 – 2023 ஆகிய அடுத்தடுத்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் அதிக விக்கெட்டுகளை எடுத்த பவுலராக உலக சாதனை படைத்து இந்தியா அடுத்தடுத்த ஃபைனலுக்கு தகுதி பெற கருப்பு குதிரையாக செயல்பட்டார். மேலும் கடந்த ஃபைனலில் பும்ரா போன்ற வேகப்பந்து வீச்சாளர்கள் திணறிய போது 4 விக்கெட்டுகள் எடுத்து போராடிய அவர் 5 சதங்களை அடித்து டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆல் ரவுண்டர்கள் தரவரிசையிலும் 2வது இடத்தில் ஜொலித்து வருகிறார்.

- Advertisement -

அது போக ஜாம்பவான் கபில் தேவுக்கு நிகராக 450+ விக்கெட்களையும் 3000+ ரன்களையும் அடித்த இந்திய வீரராக சாதனை படைத்து டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக தொடர் நாயகன் விருது வென்ற வீரராக சச்சினையே முந்தி சரித்திரம் படைத்துள்ள அவருக்கு இதுவரை இந்திய அணியில் நிலையான இடம் கிடைக்கவில்லை என்பது கசப்பான உண்மையாகும். ஆனால் இங்கே ஜாம்பவான்கள் என ரசிகர்களால் போற்றப்படும் விராட் கோலி, ரோஹித் சர்மா போன்றவர்கள் வருடக்கணக்கில் சதமடிக்காமல் இருந்தாலும் தொடர் வாய்ப்புகளைப் பெற்று சொதப்பினாலும் சூப்பர் ஸ்டார்களாக கொண்டாடப்படுகின்றனர்.

அந்த நிலையில் சுழலுக்கு சாதகமான மைதானத்தில் ரன்கள் அடித்தார் என்பதற்காக நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக இருப்பவரை ஃபைனலில் கழற்றி விடுவீர்களா? என்று இந்திய அணி நிர்வாகத்தை விமர்சித்த ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் நீங்கள் சரியான வாய்ப்பு கொடுத்திருந்தால் இந்நேரம் அஸ்வின் 100 டெஸ்ட் போட்டிகளுக்கு மேல் விளையாடியிருப்பார் என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். மேலும் இவ்வளவு சாதனைகள் படைத்த அவர் வெளிநாட்டில் பிறந்திருந்தால் இந்நேரம் கேப்டனாக இருந்திருப்பார்.

- Advertisement -

ஆனால் இந்தியாவில் பிறந்ததால் நம்பர் ஒன் பவுலராக ஃபைனலில் கூல்ட்ரிங்ஸ் தூக்கிய கொடுமை அரங்கேறியதாக ரசிகர்களும் வேதனையை வெளிப்படுத்தினர். இந்நிலையில் இந்திய அணியில் பேட்ஸ்மேன்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு கிடைப்பதும் தம்மைப் போன்ற பவுலர்களுக்கு ஓரிரு போட்டிகளுக்கு மேல் தொடர்ச்சியாக வாய்ப்புகள் கிடைக்காதது பற்றியும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் கழற்றி விடப்பட்டதையும் அஸ்வின் சமீபத்தில் விரிவான பேட்டி கொடுத்திருந்தார்.

இதையும் படிங்க:ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக பண்ண தவறை வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராவும் பண்ணாதீங்க – வாசிம் ஜாபர் அட்வைஸ்

அதில் யாரையும் குறை சொல்லாமல் தமக்கு வாய்ப்பு கிடைக்காத ஆதங்கத்தை வெளிப்படுத்திய அவர் ஓய்வுக்குப் பின் “பேட்ஸ்மேனாக வராமல் ஏன் பவுலராக வந்தோம்” என்று நினைத்து வருந்து போவதாக வேதனையை தெரிவித்தார். அதை பார்த்த முன்னாள் இந்திய வீரர் வெங்கடேஷ் பிரசாத் “இது மிகவும் ஆழம் பச்சாதாபம் மற்றும் விழிப்புணர்வு அடங்கிய பேட்டி. களத்திலும் களத்திற்கு வெளியே நீங்கள் எப்போதுமே சாம்பியன் அஸ்வின்” என்று மனதார பாராட்டியுள்ளார்.

Advertisement