ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக பண்ண தவறை வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராவும் பண்ணாதீங்க – வாசிம் ஜாபர் அட்வைஸ்

Wasim-Jaffer
- Advertisement -

இந்திய அணியானது தற்போது ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் விளையாடி முடித்த கையோடு இந்தியா திரும்பியுள்ளது. அடுத்ததாக அடுத்த மாதம் வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணியானது அங்கு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் என மிகப் பெரிய கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது.

IND

- Advertisement -

இந்நிலையில் அடுத்த மாதம் ஜூலை 12-ஆம் தேதி துவங்கும் இந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான ஏற்பாடுகளை தற்போதிலிருந்தே இந்திய அணி மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்த கருத்துக்களை பல்வேறு முன்னாள் வீரர்களும், கிரிக்கெட் நிபுணர்களும் பகிர்ந்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான வாசிம் ஜாபர் வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் இந்திய அணிக்கு போதுமான பயிற்சி நேரம் கிடைக்காதது பெரிய பின்னடைவாக அமையலாம் என்று எச்சரித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் :

INDvsWI

இந்தியாவில் மே மாதம் இறுதியில் தான் ஐபிஎல் தொடரை முடிவடைந்தது. ஆனால் ஜூன் 7-ம் தேதியே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி இருந்ததால் எந்த ஒரு பயிற்சியும் இன்றி, தயாரிப்பும் இன்றி நாம் இங்கிலாந்து சென்று தோல்வியை சந்தித்துள்ளோம்.

- Advertisement -

அதேபோன்று வெஸ்ட் இண்டீஸ் தொடரிலும் அப்படி நடக்கக்கூடாது. ஐபிஎல் தொடரில் விளையாடிய பிறகு இந்திய பந்துவீச்சாளர்களின் லைன் அன்ட் லென்த் ஆகியவை தற்போது அவர்கள் விளையாடிய மைதானத்தை சார்ந்தே இருக்கும். எனவே வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு முன்பதாக சரியான பயிற்சிகளை இந்திய பவுலர்கள் எடுத்துக் கொள்ள வேண்டும்.

இதையும் படிங்க : வீடியோ : இதுக்கு இல்லையா சார் எண்டு? மீண்டும் ஸ்டுவர்ட் ப்ராட் வேகத்தில் சிக்கிய வார்னர் – நம்பர் ஒன் பேட்ஸ்மேனும் காலி

அப்போதுதான் டெஸ்ட் தொடரில் அவர்களால் தொடர்ச்சியாக சிறப்பாக பந்துவீச முடியும். நிச்சயம் இந்த வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு முன்னதாக சரியான பயிற்சிகளை எடுத்த பிறகே அங்கு செல்ல வேண்டும். இல்லையெனில் முன்கூட்டியே அங்கு சென்று பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என வாசிம் ஜாபர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement