வீடியோ : இதுக்கு இல்லையா சார் எண்டு? மீண்டும் ஸ்டுவர்ட் ப்ராட் வேகத்தில் சிக்கிய வார்னர் – நம்பர் ஒன் பேட்ஸ்மேனும் காலி

David Warner Stuart Broad
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் துவங்கியுள்ள வரலாற்று சிறப்புமிக்க ஆஷஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஜூன் 16ஆம் தேதி பர்மிங்கம் நகரில் துவங்கிய முதல் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானித்து அதிரடியாக விளையாடி 393/8 ரன்கள் குவித்து வரலாற்றில் இல்லாத அளவுக்கு முதல் நாளிலேயே டிக்ளர் செய்து ஆச்சரியப்படுத்தியது. அந்த அணிக்கு அதிகபட்சமாக ஜாக் கிராவ்லி 61, ஓலி போப் 31, ஜானி பேர்ஸ்டோ 78 என முக்கிய பேட்ஸ்மேன்கள் நல்ல ரன்களை எடுக்க நம்பிக்கை நட்சத்திரம் ஜோ ரூட் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி தன்னுடைய 30வது சதமடித்து 118* ரன்கள் குவித்தார்.

குறிப்பாக தரமான பவுலிங்கை கொண்ட ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒருநாள் போட்டியை போன்ற ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களை மகிழ்வித்த அந்த அணியின் தைரியமான டிக்ளர் முடிவு அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. மறுபுறம் எங்களிடம் உங்களது ஆட்டம் செல்லுபடியாகாது என்று எச்சரித்தும் சுமாராகவே செயல்பட்ட ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக நேத்தன் லயன் 4 விக்கெட்டுகளை எடுத்தார்.

- Advertisement -

இல்லையா சார் எண்டு:
அதைத்தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியாவுக்கு முதல் நாளில் விக்கெட்டை விடாத போதிலும் இன்று துவங்கிய 2வது நாளில் ஸ்டுவர்ட் பிராட் 11வது ஓவரின் முதல் பந்திலேயே இழுத்து அடிக்க முயற்சித்த டேவிட் வார்னர் பெரிய எட்ஜ் கொடுத்து 9 ரன்களில் கிளீன் போல்ட்டாகி ஏமாற்றத்துடன் சென்றார். குறிப்பாக கடந்த ஆஷஸ் தொடர் உட்பட சமீப காலங்களாகவே அவரிடம் திண்டாடி வரும் டேவிட் வார்னர் விரைவில் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள நிலையில் இந்த கடைசி வாய்ப்பில் அனுபவத்தை பயன்படுத்தி பதிலடி கொடுப்பாரா என்று எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருந்தது.

ஏனெனில் 2019 முதல் 10 முறை அவரிடம் அவுட்டான வார்னர் இங்கிலாந்து மண்ணில் மட்டும் 8 முறை அவுட்டாகி சுமாராக செயல்பட்டு கிண்டல்களுக்கு உள்ளனர். ஆனால் எப்போதுமே சில விஷயங்கள் மாறாது என்பது போல் மீண்டும் அவரை அவுட்டாக்கிய ப்ராட் டெஸ்ட் கிரிக்கெட்டில் டேவிட் வார்னரை அதிக முறை அவுட்டாக்கிய (15) பவுலர் என்ற பெருமையை தொடர்ந்து வைத்துள்ளார். 2வது இடத்தில் இந்தியாவின் ரவிச்சந்திரன் அஸ்வின் 11 முறை வார்னரை அவுட்டாக்கிய பெருமையை கொண்டுள்ளார்.

- Advertisement -

அப்படி ஸ்டுவர்ட் பிராடை சமாளிக்க முடியாமல் மீண்டும் அவுட்டான டேவிட் வார்னரை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர். அதனால் இதற்கு இல்லையா சார் ஒரு எண்டு என்ற வகையில் ஏமாற்றத்துடன் அவுட்டாகி சென்ற வார்னருக்கு பின் ஐசிசி தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக இருக்கும் மார்னஸ் லபுஸ்ஷேன் களமிறங்கினார்.

ஆனால் மேகமூட்டத்துடன் கூடிய சூழ்நிலையில் பந்தை நன்றாக ஸ்விங் செய்த ப்ராட் அவரையும் முதல் பந்திலே கோல்டன் டக் அவுட்டாக்கி தன்னுடைய தரத்தை நிரூபித்தது இங்கிலாந்து ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தினார். அதனால் 29/2 என சரிந்த ஆஸ்திரேலியாவை அடுத்ததாக வந்து நங்கூரமாக நின்று காப்பாற்ற முயற்சித்த ஸ்டீவ் ஸ்மித் 16 ரன்களில் பென் ஸ்டோக்ஸ் வேகத்தில் பெவிலியன் திரும்பிய நிலையில் மறுபுறம் தொடர்ந்து நங்கூரமாக விளையாடி வரும் மற்றொரு தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோர் நிதான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:ஜாம்பவான் சச்சின் எனக்கு கத்துக்குட்டி மாதிரி, நிறைய டைம் அவுட் பண்ணிருக்கேன் – முன்னாள் பாக் வீரர் தடாலடி பேட்டி

அதில் கவாஜா அரை சதமடித்து அசத்திய நிலையில் சமீபத்திய ஃபைனலில் இந்தியாவுக்கு எதிராக அதிரடியாக விளையாடிய ஹெட் இப்போட்டியில் இங்கிலாந்திடம் தடுமாற்றமாக அடக்கமான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகிறார். அதனால் சற்று முன் வரை ஆஸ்திரேலியா 93/3 ரன்களை எடுத்து இங்கிலாந்து அளவுக்கு அதிரடி காட்ட முடியாமல் தடுமாற்றமான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகிறது.

Advertisement