ரஹானே மற்றும் புஜாராவிற்கு பதிலாக டெஸ்ட் தொடரில் விளையாடப்போகும் அந்த 2 இளம்வீரர்கள் – யார் தெரியுமா?

pujara 1
- Advertisement -

இந்தியா – இலங்கை அணிகள் மோதும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் மார்ச் 4ஆம் தேதி முதல் மொஹாலியில் துவங்க உள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் ஒரு அங்கமாக நடைபெறும் இந்த தொடரின் 2வது போட்டி வரும் மார்ச் 12ம் தேதி பெங்களூருவில் பகலிரவு டெஸ்ட் போட்டியாக இளஞ்சிவப்பு நிற பந்தில் நடைபெற உள்ளது. முன்னதாக இந்த தொடரில் பங்கேற்பதற்காக 18 பேர் கொண்ட இந்திய அணி கடந்த சில வாரங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது.

IND

- Advertisement -

அதில் சமீபத்தில் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் வெற்றிகரமான இந்திய கேப்டனாக சாதனைப் படைத்த விராட் கோலி திடீரென பதவி விலகியதை அடுத்து அவருக்கு பதில் புதிய கேப்டனாக அனுபவ வீரர் ரோகித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். அவருடன் துணை கேப்டனாக நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா நியமிக்கப்பட்டார்.

ஓரங்கப்பட்ட புஜாரா – ரகானே:
மேலும் கடந்த சில வருடங்களாக ஒரு சதம் கூட அடிக்க முடியாமல் மோசமான பார்மல் திண்டாடி வந்த அனுபவ வீரர்கள் புஜாரா மற்றும் அஜிங்கிய ரஹானே ஆகியோர் நீண்ட நாட்களுக்கு பின் முதல் முறையாக இந்திய அணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்கள். அவர்களுடன் சஹா, இஷாந்த் சர்மா போன்ற மூத்த வீரர்களும் கழற்றி விடப்பட்டார்கள்.

Pujara

ஏற்கனவே 35 வயதை கடந்து விட்ட காரணத்தால் இந்தியாவின் வருங்காலத்தை கருத்தில் கொண்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க இந்த முடிவை இந்திய தேர்வு குழு எடுத்துள்ளது. சொல்லப்போனால் ரஞ்சி கோப்பை போன்ற உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டால் கூட இவர்களுக்கு இனி இந்திய அணியில் இடமில்லை என தேர்வுக் குழுவினர் வெளிப்படையாகவே அறிவித்துள்ளார்கள்.

- Advertisement -

உதயமாகும் புதிய மிடில் ஆர்டர்:
கடந்த 2013 முதல் சுமார் 10 வருடங்களாக இந்திய மிடில் ஆர்டர் பேட்டிங்கில் தூண்களாக விளையாடி வந்த இவர்கள் தற்போது ஓரங்கட்டப்பட்டுள்ளதை அடுத்து இலங்கை டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் புதிய மிடில் ஆர்டர் உதயமாக உள்ளது. சீனியர் வீரர்கள் இல்லாத காரணத்தால் இவர்களுக்கு நீண்டகால வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதை பற்றி பார்ப்போம்.

gill

1. சுப்மன் கில் : வளர்ந்து வரும் இளம் வீரராகக் கருதப்படும் சுப்மன் கில் ஓபனிங் வீரராகவும் களமிறங்கும் திறமை பெற்றுள்ளார். இருப்பினும் அந்த இடத்தில் ரோகித் சர்மா, கேஎல் ராகுல், மயங்க் அகர்வால் போன்ற வீரர்கள் இருப்பதால் இவரை வரும் காலங்களில் மிடில் ஆர்டரில் களமிறக்கி சோதிக்க இருப்பதாக பயிற்சியாளர் ராகுல் டிராவிட் சமீபத்தில் தெரிவித்திருந்தார். அந்த வகையில் தற்போது காயத்திலிருந்து குணமடைந்துள்ள இவர் விரைவில் துவங்கும் இலங்கை தொடரில் புஜாரா விளையாடிய 3வது இடத்தில் பேட்டிங் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இளம் வீரர் என்பதால் இவர் அடுத்த பல ஆண்டுகளுக்கு இந்திய மிடில் ஆர்டரில் விளையாடுவார் என நம்பப்படுகிறது.

- Advertisement -

2. ஷ்ரேயஸ் ஐயர்: 4வது இடத்தில் எந்தவித கேள்வியும் இல்லாமல் முன்னாள் கேப்டன் மற்றும் நட்சத்திர வீரர் விராட் கோலி விளையாட உள்ளார். இருப்பினும் ஒரு சில நேரங்களில் அவர் காயத்தால் விலகும் நிலை ஏற்படும் பட்சத்தில் அந்த இடத்தில் மற்றொரு இளம் வீரர் ஸ்ரேயாஸ் அய்யர் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

shreyas iyer

ஏற்கனவே கடந்த நவம்பர் மாதம் நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் நடந்த டெஸ்ட் தொடரில் கான்பூர் போட்டியில் அறிமுகமான இவர் முதல் போட்டியிலேயே சதம் மற்றும் அரைசதம் விளாசி சாதனை படைத்தார். அத்துடன் தற்போது நடந்த இலங்கை டி20 தொடரில் 204 ரன்கள் விளாசி நல்ல பார்மில் உள்ளார். எனவே இவர் சூழ்நிலைக்கு ஏற்றார்போல் இந்திய அணியில் வரும் காலங்களில் 4, 5, 6 ஆகிய மிடில் ஆர்டர் இடங்களில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

3. ஹனுமா விஹாரி: 5வது இடத்தில் அதிரடியாக விளையாடக்கூடிய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் தொடர்ந்து விளையாடுவார் என நம்பலாம். எனவே 6வது இடத்தில் நீண்ட நாட்களாக தொடர்ச்சியான வாய்ப்புகள் கிடைக்காமல் தவித்து வந்த ஹனுமா விஹாரி விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2018முதல் இந்திய டெஸ்ட் அணியில் விளையாடி வரும் இவருக்கு ரகானே இருந்த காரணத்தால் தொடர்ச்சியான வாய்ப்பு கிடைக்காமல் இருந்தது. ஆனால் தற்போது ரகானே இல்லாத காரணத்தால் 28 வயது நிரம்பிய இவர் இனிமேல் இந்திய மிடில் ஆர்டரில் நீண்ட காலம் விளையாடுவார் என எதிர்பார்க்கலாம்.

Vihari-1

மொத்தத்தில் வரும் இலங்கை டெஸ்ட் தொடர் முதல் இந்திய மிடில் ஆர்டரில் சுப்மன் கில், ஷ்ரேயஸ் ஐயர், ஹனுமா விஹாரி போன்ற இளம் வீரர்கள் உதயமாக உள்ளார்கள். இவர்களுடன் சூரியகுமார் யாதவ் போன்ற ஒரு சில வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விராட் கோலி, ரிஷப் பண்ட் ஆகிய நட்சத்திரங்களும் இந்த மிடில் ஆர்டரில் இடம் வகிக்கப் போகிறார்கள்.

இதையும் படிங்க : பாகிஸ்தானுக்கு வந்த நீங்க உயிரோட திரும்பி போகமாட்டீங்க – ஆஸி வீரருக்கு வந்த கொலை மிரட்டல்

சமீப காலங்களாக ரகானே மற்றும் புஜாரா ஆகியோரால் இந்திய மிடில் ஆர்டர் பேட்டிங் பலவீனமாக இருந்து பல வெற்றிகளை கோட்டை விட்டது. எனவே தற்போது இந்த இளம் வீரர்கள் விளையாட உள்ளதை அடுத்து இந்திய மிடில் ஆர்டர் பேட்டிங் பிரச்சனை விரைவில் தீரும் என இந்திய ரசிகர்கள் நம்பலாம்.

Advertisement