பாகிஸ்தானுக்கு வந்த நீங்க உயிரோட திரும்பி போகமாட்டீங்க – ஆஸி வீரருக்கு வந்த கொலை மிரட்டல்

ashton agar 2
- Advertisement -

பாகிஸ்தான் நாட்டில் கடந்த பல ஆண்டுகளாகவே நிலவிவரும் பதட்டமான பாதுகாப்பற்ற சூழல் காரணமாகவும் மேலும் சில அரசியல் பிரச்சினைகள் காரணமாகவும் எந்த ஒரு கிரிக்கெட் அணியும் அங்கு சென்று கிரிக்கெட் விளையாடுவதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. பாகிஸ்தான் அணியுடன் எந்த அணி மோதுவதாக இருந்தாலும் இரு அணிகளுக்கும் பொதுவான ஒரு நாட்டில் கிரிக்கெட் தொடர்கள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் படிப்படியாக பாகிஸ்தானில் இயல்பு நிலை திரும்பி ஒரு சில அணிகள் அங்கு சென்று விளையாட சம்மதித்து வருகின்றன.

ashton agar 1

- Advertisement -

அந்த வகையில் ஏற்கனவே சில அணிகள் பாகிஸ்தான் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வெற்றிகரமாக விளையாடிய நிலையில் தற்போது 22 ஆண்டுகள் கழித்து பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி தற்போது பாகிஸ்தான் சென்று கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளது. இதற்கான ஆஸ்திரேலிய அணியும் ஏற்கனவே தனி விமானம் மூலம் புறப்பட்டு பாகிஸ்தான் நாட்டிலுள்ள இஸ்லாமாபாத் நகரில் தற்போது தங்கி குவாரன்டைனில் இருந்து வருகிறது.

இவ்விரு அணிகளுக்கும் இடையே 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் ஒரேயொரு டி20 போட்டி கொண்ட தொடரானது நடைபெற உள்ளது. இந்த தொடரானது இம்மாதம் 4-ஆம் தேதி துவங்கி ஏப்ரல் 5 வரை நடைபெற உள்ளது. இதன் காரணமாக தற்போது ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் அந்நாட்டு அரசாங்கமும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.

Ashton agar

இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் இடதுகை சுழற்பந்துவீச்சு ஆல்ரவுண்டரான ஆஷ்டன் அகருக்கு பகிரங்கமாக கொலை மிரட்டல் வந்துள்ளதாக சில தகவல்கள் இணையத்தில் வைரலாகின. மேலும் அவரின் மனைவிக்கு வந்த அந்த மிரட்டலில் : உங்கள் கணவர் பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் விளையாட வந்தால் அவர் உயிருடன் நாடு திரும்ப மாட்டார் என்று மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் இது குறித்த பதிவுகளை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் என இருநாட்டு கிரிக்கெட் வாரியங்களும் அரசாங்கங்களும் விசாரித்து வருகின்றனர்.

- Advertisement -

ஆனால் இது ஒரு மர்ம நபரால் விடுக்கப்பட்ட வதந்தியான மிரட்டல் மட்டும்தான் இதில் எந்தவித முக்கிய காரணம் இல்லை. அதனால் யாரும் அச்சப்பட தேவையில்லை என்று இரு நாட்டு கிரிக்கெட் நிர்வாகங்களும் தெரிவித்துள்ளன.

இதையும் படிங்க : தமிழக இளைஞர்களுக்காக புதிய முயற்சியை கையில் எடுத்த சி.எஸ்.கே – சேலம் மாவட்டமா நீங்க அப்போ ரெடியா இருங்க

மேலும் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் இந்த பாகிஸ்தான் பயணம் குறித்து பேசுகையில் : நாங்கள் இப்போது இஸ்லாமாபாத்தில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளோம். எங்களுக்கான பாதுகாப்பு திருப்தி அளிக்கும் விதமாக சிறப்பாக உள்ளதாகவும், தாங்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும் பேட் கம்மின்ஸ் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement