தமிழக இளைஞர்களுக்காக புதிய முயற்சியை கையில் எடுத்த சி.எஸ்.கே – சேலம் மாவட்டமா நீங்க அப்போ ரெடியா இருங்க

Balaji
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடர் வரும் மார்ச் 26ம் தேதி முதல் துவங்கி மே 29ம் தேதி வரை மும்பை, புனே மற்றும் அகமதாபாத் ஆகிய நகரங்களில் நடைபெறவுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்த தொடரில் 4 முறை சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ள எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் குரூப் பி பிரிவில் இடம் பிடித்துள்ளது. மேலும் கடந்த ஐபிஎல் 2021 தொடரின் கோப்பையை வென்று சாம்பியன் பட்டத்தை வென்ற சென்னை அணி நடப்பு சாம்பியனாக இருப்பதால் இந்த முறை வரும் மார்ச் 26ஆம் தேதி துவங்கும் ஐபிஎல் 2022 சீஸனின் முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை சென்னை எதிர்கொள்ள உள்ளது.

csk 1

- Advertisement -

கடந்த 2008ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையை மையமாகக் கொண்டு தோற்றுவிக்கப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுவதிலும் உள்ள பல்வேறு மாநிலங்களில் பல கோடி ரசிகர்களை கொண்ட ஒரு அணியாக விளங்குகிறது. இந்தியாவிற்காக 3 விதமான உலகக் கோப்பைகளை வென்று கொடுத்து மின்னல் வேக விக்கெட் கீப்பிங் செய்து தோற்க இருந்த பல போட்டிகளில் தனி ஒருவனாக நின்று வெற்றி பெற்றுக்கொடுத்து பினிசெர் என பெயர் எடுத்த நட்சத்திர வீரர் எம்எஸ் தோனி சென்னை அணியின் கேப்டனாக செயல்படுவதே ரசிகர்கள் மத்தியில் அந்த அணி இவ்வளவு புகழ் பெறுவதற்கு ஒரு முக்கிய காரணமாகும்.

சூப்பர் கிங்ஸ் அகாடமி:
பொதுவாகவே தமிழ்நாட்டு மக்கள் தமக்கு ஒருவரை பிடித்து விட்டால் அவரை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவார்கள். அந்த வகையில் எம்எஸ் தோனி “தல” என அழைக்கும் தமிழ்நாட்டு மக்கள் சென்னை அணிக்கு கடந்த 15 வருடங்களாக தங்களின் முழு ஆதரவை கொடுத்து வருகிறார்கள். அப்படிப்பட்ட தமிழ்நாட்டு மக்களுக்கு ஏதாவது நன்மை அளிக்கும் வகையில் திருப்பி செய்ய வேண்டும் நினைத்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தற்போது தமிழ்நாட்டில் உள்ள இளம் வீரர்களை கண்டறிந்து அவர்களின் வளர்ச்சிக்கு உதவும் வண்ணம் புதிய கிரிக்கெட் அகாடமியை துவங்கியுள்ளது..

csk fans

“சூப்பர் கிங்ஸ் அகாடமி” என பெயரிடப்பட்டுள்ள இந்த அகெடமி சென்னையில் உள்ள துரைப்பாக்கம் மற்றும் சேலம் ஆகிய 2 இடங்களில் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக தமிழகத்தில் உள்ள கிரிக்கெட் விளையாடும் பல இளம் வீரர்களும் வீராங்கனைகளும் தங்களின் எதிர்கால கிரிக்கெட் வாழ்க்கையை சிறந்த வகையில் அமைத்துக் கொள்ள இந்த சூப்பர் கிங்ஸ் அகடமி உதவும் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாக இயக்குனர் காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “கடந்த 5 தசாப்தங்களாக கிரிக்கெட்டில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம். இளைஞர்களுக்கு திருப்பி செய்ய இது ஒரு வழியாக கருதுகிறோம். மேலும் இதன் வாயிலாக அடுத்த தலைமுறை வீரர்களுக்கு உதவ இதை ஒரு வாய்ப்பாக நினைக்கிறோம்” என கூறினார். இதுபற்றி சென்னை அணியின் பேட்டிங் கோச் மற்றும் ஆஸ்திரேலிய ஜாம்பவான் மைக் ஹஸி கூறியது பின்வருமாறு.

fans csk

” இளைஞர்களுக்கு கிரிக்கெட் சம்பந்தமான பல வசதிகளை செய்து கொடுக்க இந்த வாய்ப்பு உதவும். மேலும் இந்த அகாடமியில் கிடைக்கும் பயிற்சி ஒருநாள் அவர்களின் வாழ்வில் மிகப்பெரிய முன்னேற்றத்தை கொடுக்கும் என நம்புகிறேன். மேலும் இதில் விளையாடும் வீரர்கள் வருங்காலங்களில் சென்னை அணிக்காக விளையாடுவதை பார்க்க விரும்புகிறேன்” என கூறியுள்ளார்.

- Advertisement -

பாசமா – வேசமா:
இதை பல சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் வரவேற்றுள்ள நிலையில் ஒரு சில ரசிகர்கள் இது பாசமா அல்லது வேஷமா என கருத்து தெரிவிக்கிறார்கள். ஏனெனில் கடந்த பல வருடங்களாக ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தமிழக வீரர்களுக்கு பெரும்பாலும் வாய்ப்பு அளிக்கப்படுவதில்லை. சொல்லப்போனால் ரவிச்சந்திரன் அஸ்வின், சுப்ரமணியம் பத்ரிநாத், முரளி விஜய் என சென்னை அணியில் விளையாடிய தமிழ்நாட்டு வீரர்கள் என்று பார்த்தால் கைவிட்டு எண்ணக்கூடிய அளவில்தான் இருந்துள்ளார்கள்.

vijay

அத்துடன் ஐபிஎல் 2022 தொடரில் கூட ஷாருக்கான், வாசிங்டன் சுந்தர், நடராஜன், ரவிச்சந்திரன் அஸ்வின், தினேஷ் கார்த்திக் என முக்கிய தமிழக வீரர்களை இதர அணிகள் போட்டி போட்டு பல கோடி கணக்கில் வாங்கிய நிலையில் சென்னை அணி தமிழக வீரர்களை வாங்க பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை. கடைசியில் ஜெகதீசன், ஹரி நிஷாந்த் போன்ற வீரர்களை பெயருக்காக மட்டும் பெஞ்சில் அமர வைப்பதற்காக வாங்கியுள்ளது.

- Advertisement -

கடந்த காலங்களில் சாய் கிசோர், அபராஜித் போன்ற இளம் வீரர்களை வாங்கிய போதிலும் அவர்களுக்கு வாய்ப்பளிக்காமல் நீண்ட நாட்கள் பெஞ்சில் அமர வைத்த சென்னை அணி நிர்வாகம் மீது ஏற்கனவே சில ரசிகர்கள் கடுப்பில் உள்ளார்கள். எனவே அதேபோல இந்த சூப்பர் கிங்ஸ் அகடமி ஒரு வேசமாக இருந்துவிடக் கூடாது என்று அவர்கள் வலியுறுத்துகிறார்கள். எது எப்படியோ இதற்கு முன் நடந்ததை விட்டுவிடுவோம்.

இதையும் படிங்க : கே.எல் ராகுலும் வேணாம். இஷான் கிஷனும் வேணாம். டி20 ல இவரை ஓபனராக இறக்குங்க – பிராட் ஹாக் ஓபன்டாக்

இனிவரும் காலத்தில் இந்த சூப்பர் கிங்ஸ் அகாடமி பல நல்ல திறமையான இளம் வீரர்களை கண்டறிந்து அவர்களுக்கு வாய்ப்பளித்து வளர்த்து உலக கிரிக்கெட் அரங்கில் இந்தியாவிற்கு பெருமை அளவுக்கு உயர்த்தும் என எவ்வித தயக்கமும் இல்லாமல் நம்பலாம்.

Advertisement