கே.எல் ராகுலும் வேணாம். இஷான் கிஷனும் வேணாம். டி20 ல இவரை ஓபனராக இறக்குங்க – பிராட் ஹாக் ஓபன்டாக்

Hogg
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பையில் இந்திய அணி லீக் சுற்றோடு வெளியேறிய நிலையில் கேப்டன் விராட் கோலி தனது கேப்டன் பதவியில் இருந்து விலகியிருந்தார். அதனை தொடர்ந்து ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை தொடருக்கான அணியை தீவிரமாக தயார் செய்து வருகிறது. அந்த வகையில் இந்திய அணியில் இருக்கும் சீனியர் வீரர்களுக்கு இணையாக இளம் வீரர்களுக்கும் வாய்ப்பினை வழங்கி தற்போது பலமான அணியாக கட்டமைத்து வருகிறது.

IND

- Advertisement -

அந்த வகையில் நடைபெற்று முடிந்த மூன்று போட்டிகள் கொண்ட இலங்கை தொடருக்கான அணியில் சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இளம் வீரர்கள் வாய்ப்பு அளிக்கப்பட்டது. அப்படி தனக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பை சரியாக பயன்படுத்தி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷ்ரேயாஸ் அய்யர் விராத் கோலியின் 3-வது இடத்தை கெட்டியாக பிடித்துக் கொண்டார் என்றே கூறலாம்.

இலங்கை அணிக்கெதிரான நடைபெற்ற இந்த 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மூன்று போட்டிகளிலுமே தொடர்ச்சியாக அரை சதம் அடித்த ஷ்ரேயாஸ் அய்யர் எந்த போட்டியிலும் அவுட்டாகாமல் 204 ரன்கள் குவித்து தொடர் நாயகன் விருதை பெற்றுள்ளார். இதன் காரணமாக இனிவரும் போட்டிகளிலும் அவரையே மூன்றாவது வீரராக களம் இறக்க வேண்டும் என்ற குரல்கள் வலுத்து வருகின்றன. இந்நிலையில் எதிர்வரும் உலகக் கோப்பை தொடரில் ரோகித் சர்மாவுடன் எந்த வீரர் துவக்க வீரராக களமிறங்க வேண்டும் என்பது குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரான பிராட் ஹாக் தனது கருத்தினைத் தெரிவித்துள்ளார்.

Rohith

இதுகுறித்து அவர் கூறுகையில் : என்னை பொருத்தவரை இந்திய அணியில் தற்போது தொடக்க வீரராக களம் இறங்கி வரும் கேப்டன் ரோகித் சர்மாவுடன் விராட் கோலி ஓப்பனிங்கில் களம் இறங்கினால் அது நன்றாக இருக்கும். ஏனெனில் மூன்றாவது இடத்தில் ஷ்ரேயாஸ் ஐயரும், நான்காவது இடத்தில் ரிஷப் பண்ட்டும் பேட்டிங் செய்யலாம். அதே போன்று 5-ஆவது இடத்தில் சூர்யகுமார் யாதவ் அல்லது கேஎல் ராகுல் ஆகிய இருவரில் ஒருவரை விளையாட வைக்கலாம். அப்படி விளையாடும்போது இந்திய அணியில் டாப் ஆர்டர் முதல் மிடில் ஆர்டர் அவரை இந்திய அணி பலமாக இருக்கும்.

- Advertisement -

அதே போன்று 6 மற்றும் 7வது இடங்களில் ஆல் ரவுண்டர்களாக ஜடேஜா உடன் பாண்டியா அல்லது வெங்கடேஷ் ஐயர் ஆகியோர் களமிறங்கும் போது முற்றிலுமாக பேட்டிங் யூனிட் வலுப்பெறும். அதுமட்டுமின்றி இந்திய அணியில் ஆறாவது பந்துவீச்சாளர் இருக்கும் பட்சத்தில் மீதமுள்ள ஐந்து பந்து வீச்சாளர்களில் யாராவது ஒருவர் சொதப்பும் வேளையில் கூட நிச்சயம் ஆறாவது பவுலர் அவர்களுக்கு கை கொடுப்பார்.

இதையும் படிங்க : விராட் கோலியை பிசிசிஐ இப்படி பழிவாங்கியிருக்க கூடாது. அதிருப்தியை தெரிவித்து – சுனில் கவாஸ்கர் வருத்தம்

இப்படி அணியை கட்டமைத்தால் இந்திய அணி உலக கோப்பை தொடரில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும் என பிராட் ஹாக் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. சமீபகாலமாகவே இந்திய அணியில் தொடர்ச்சியாக பல மாற்றங்கள் செய்யப்பட்டு அனைவரும் சிறப்பாக விளையாடி வருவதால் எந்த வீரரை அணியில் தேர்வு செய்வது என்ற குழப்பம் ஏற்படுவதாக ரோகித் சர்மா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement