தெ.ஆ அணிக்கெதிரான டி20 தொடரின் வாய்ப்பை காயத்தால் இழந்த 3 இந்திய வீரர்கள் – லிஸ்ட் இதோ

IND
- Advertisement -

இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் இறுதியில் துவங்கிய பதினைந்தாவது ஐபிஎல் தொடரானது 74 போட்டிகளுடன் இரண்டு மாதங்களாக நடைபெற்று நேற்று முன்தினம் மிகச்சிறப்பாக முடிவடைந்தது. கிரிக்கெட் ரசிகர்களை தொடர்ச்சியாக இரண்டு மாதம் குதூகலத்தில் ஆழ்த்திய இந்த ஐபிஎல் தொடருக்கு அடுத்து இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற உள்ள ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட இருக்கிறது. ஜூன் 9ஆம் தேதி துவங்கும் இந்த தொடரானது 19ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணியை ஏற்கனவே பிசிசிஐ அறிவித்துவிட்டது.

INDvsRSA toss

- Advertisement -

அதில் சீனியர் வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளதால் ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. அதே வேளையில் இந்திய அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்ட சில வீரர்களும் தங்களது சிறப்பான ஆட்டத்தை ஐபிஎல் தொடரில் வெளிப்படுத்தியதால் அவர்களுக்கும் இந்திய அணியில் விளையாட ஒரு கம்பேக் கிடைத்துள்ளது. அந்தவகையில் ஏகப்பட்ட வீரர்கள் இந்திய அணியில் இடம் பிடித்து இருந்தாலும் சில முக்கிய வீரர்கள் காயம் காரணமாக இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பை தவறவிட்டுள்ளனர்.

அந்தவகையில் காயத்தால் இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பை தவறவிட்ட மூன்று வீரர்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம். 1) ரவீந்திர ஜடேஜா : இந்த ஐ.பி.எல் 2022 தொடருக்கு முன்னர் தோனி கேப்டன் பதவியில் இருந்து விலகியதால் சென்னை அணியின் புதிய கேப்டனாக ஜடேஜா நியமிக்கப்பட்டார். ஆனால் கேப்டனாக மாறியதும் தொடர்ச்சியாக தோல்விகளை சந்தித்ததன் காரணமாக ஏற்பட்ட அழுத்தத்தினால் மீண்டும் தோனியிடமே கேப்டன்சியை வழங்கினார்.

Jadeja

அதோடு இந்த ஐ.பி.எல் தொடரின் லீக் சுற்று போட்டிகளின் போது காயம் அடைந்த அவர் எஞ்சியிருந்த போட்டிகளில் இருந்து வெளியேறியதோடு சேர்த்து தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 தொடரையும் காயம் காரணமாக ஜடேஜா தவறவிட்டுள்ளார்.

- Advertisement -

2) சூர்யகுமார் யாதவ் : இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் படு மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடித்து மும்பை அணி வெளியேறியது. இந்த தொடரில் மும்பை அணி பெற்ற சில வெற்றிகளும் சூர்யகுமார் யாதவ் சிறப்பாக விளையாடும் போது கிடைத்தவை தான். ஆனால் அவரும் ஐபிஎல் தொடரின் இறுதி கட்டத்தின் போது சூர்யகுமார் யாதவ் காயம் காரணமாக வெளியேறியதால் அந்த அணி மிகவும் தடுமாறியது.

Sky-1

அதோடு ஐபிஎல் தொடரில் ஏற்பட்ட காயம் காரணமாக தென்னாபிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் வாய்ப்பினையும் சூர்யகுமார் யாதவ் தவறவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

3) தீபக் சாஹர் : வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த டி20 தொடரின் போது ஏற்பட்ட காயம் காரணமாக சிகிச்சையிலிருந்த தீபக் சாஹர் அதனைத் தொடர்ந்து நடப்பு ஐபிஎல் தொடரினையும் முழுவதுமாக தவறவிட்டார். அவரது காயம் குணமடைய இன்னும் பல நாட்கள் ஆகும் என்பதால் அவரை தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியிலும் தேர்வு செய்யவில்லை.

இதையும் படிங்க : ஐபிஎல் 2022 : மைதானங்களுக்கு பரிசு தொகை அறிவித்த பிசிசிஐ, ஆனாலும் ரசிகர்கள் அதிருப்தி – காரணம் இதோ

மேலும் உலக கோப்பை நெருங்கி வரும் வேளையில் அவரது காயம் மிகவும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த மூவருமே தற்போது பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதோடு சிகிச்சை முடிந்த பின்னர் பயிற்சியை மேற்கொள்ளும் இவர்கள் விரைவில் இந்திய அணிக்கு திரும்ப வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement