ஆஸ்திரேலிய டி20 தொடரில் அதிர்ஷ்டமின்மையால்.. கழற்றி விடப்பட்ட 3 தரமான இந்திய வீரர்கள்

Indian Players
Advertisement

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெறும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய கிரிக்கெட் அணி விளையாட உள்ளது. 2023 உலகக் கோப்பை தோல்விக்கு பின் நடைபெறும் இந்த தொடரில் ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற சீனியர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது அதனால் சூரியகுமார் யாதவ் தலைமையில் இசான் கிசான், ஜெய்ஸ்வால் போன்ற இளம் வீரர்கள் களமிறங்க இத்தொடரில் உள்ளனர். குறிப்பாக 2024 டி20 உலகக் கோப்பைக்கு தேவையான வீரர்களை கண்டறியும் பயணம் இத்தொடரிலிருந்து துவங்குகிறது.

இருப்பினும் இந்த தொடரில் சில நட்சத்திர வீரர்கள் அதிர்ஷ்டமின்மை மற்றும் வருங்கால காரணங்களுக்காக கழற்றி விடப்பட்டுள்ளது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. அவர்களை பற்றி பார்ப்போம்:
1. சஞ்சு சாம்சன்: இத்தொடருக்கான அணி அறிவிக்கப்பட்டதுமே இவரது பெயர் ஏன் இடம் பெறவில்லை என்பதை பெரும்பாலான ரசிகர்களின் கேள்வியாக இருந்தது. ஏனெனில் 2015 – 2021 நிலையற்ற வாய்ப்புகளை பெற்ற அவர் கடந்த வருடம் கிடைத்த வாய்ப்புகளில் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தினார்.

- Advertisement -

ஆனாலும் கடந்த வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் சுமாராக செயல்பட்டதால் அவரை 2023 ஆசிய மற்றும் உலகக்கோப்பையில் தேர்வுக்குழு கழற்றி விட்டது. அந்த நிலைமையில் இத்தொடரிலும் அவரை கழற்றி விட்டுள்ள தேர்வுக்குழு விக்கெட் கீப்பராக ஜிதேஷ் சர்மாவை தேர்வு செய்துள்ளது.

2. யுஸ்வேந்திர சஹால்: 2016இல் அறிமுகமாகி வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்திய இவர் 2017 சாம்பியன்ஸ் டிராபி, 2019 உலகக்கோப்பை தொடர்களில் முதன்மை ஸ்பின்னராக விளையாடினார். ஆனாலும் அதன் பின் சற்று தடுமாறியதால் 2021 டி20 உலகக் கோப்பையில் கழற்றி விடப்பட்ட இவர் கடந்த வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் சொதப்பியதால் 2023 ஆசிய மற்றும் உலகக் கோப்பை இந்திய அணிகளில் தேர்வு செய்யப்படவில்லை.

- Advertisement -

இருப்பினும் அவரை போன்ற மணிக்கட்டு ஸ்பின்னரை தேர்வு செய்யாமல் இந்தியா தவறு செய்து விட்டதாக ஏபி டீ வில்லியர்ஸ் முதல் ஹர்பஜன் சிங் வரை நிறைய முன்னாள் வீரர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர். அந்த சூழ்நிலையில் இம்முறையும் அவரை கழட்டி விட்டுள்ள தேர்வுக்குழு ரவி பிஸ்னோய் போன்ற இளம் ஸ்பின்னரை நோக்கி சென்றுள்ளது.

3. புவனேஸ்வர் குமார்: 2012இல் அறிமுகமாகி புதிய பந்தில் ஸ்விங் செய்து துல்லியமாக பந்து வீசுவதற்கு பெயர் போன இவர் 3 வகையான கிரிக்கெட்டிலும் முதன்மை பவுலராக உருவெடுத்தார். இருப்பினும் 2019 உலகக்கோப்பைக்கு பின் சந்தித்த காயத்தால் தடுமாறிய அவர் மீண்டும் கம்பேக் கொடுத்த போதிலும் 2021, 2022 டி20 உலகக் கோப்பையில் தாக்கத்தை ஏற்படுத்தும் அளவுக்கு பந்து வீசவில்லை.

இதையும் படிங்க: அதை மட்டும் ஏத்துக்கவே முடியல.. நீங்க 150க்கு ஆல் அவுட்டாகிருந்தா கூட மனசு ஆறிருக்கும்.. கம்பீர் விமர்சனம்

அதனால் கழற்றி விடப்பட்ட அவர் சமீபத்திய உள்ளூர் தொடரில் ஓரளவு நன்றாக விளையாடியதால் மறு வாய்ப்பு கிடைக்கும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மீண்டும் அவரை கண்டுகொள்ளாமல் ஆவேஷ் கான், பிரசித்தி கிருஷ்ணா போன்ற இளம் வீரர்களை நோக்கி தேர்வுக்குழு நகர்ந்துள்ளது.

Advertisement