IND vs SL : இலங்கை டி20 தொடரில் வாய்ப்பு கிடைக்காமல் பெஞ்சில் அமர வாய்ப்புள்ள 3 இந்திய வீரர்களின் பட்டியல்

INDvsSL
- Advertisement -

2023 புத்தாண்டில் இந்திய கிரிக்கெட் அணி சொந்த மண்ணில் இலங்கைக்கு எதிராக 3 டி20 மற்றும் 3 ஒருநாள் தொடரில் களமிறங்குகிறது. அதில் முதலாவதாக நடைபெறும் டி20 தொடரில் ரோஹித் சர்மா உள்ளிட்ட சீனியர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டு ஹர்திக் பாண்டியா தலைமையில் நிறைய இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் நிறைய சீனியர்கள் சுமாராக செயல்பட்டதால் 2024 டி20 உலக கோப்பைக்கு முன்பாக புதிய அணியை உருவாக்கும் முயற்சியில் பிசிசிஐ ஈடுபட்டுள்ளது.

INDvsSL

- Advertisement -

அதற்கான முன்னோட்டமாக நடைபெறும் இத்தொடரில் நிறைய இளம் வீரர்கள் விளையாடும் 11 பேர் அணிலும் வாய்ப்பு பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் எப்போதுமே போட்டி மிகுந்த இந்திய அணியில் இம்முறை 16 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ள இத்தொடரில் சிலருக்கு கடைசி வரை விளையாடும் 11 பேர் அணியில் வாய்ப்பு கிடைக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களைப் பற்றி பார்ப்போம்:

3. சிவம் மாவி: 2018 அண்டர்-19 உலகக் கோப்பை வென்ற இந்திய அணியில் இடம் பிடித்த வேகப்பந்து வீச்சாளரான இவர் சமீப காலங்களில் ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறார். ஆரம்பத்தில் அசத்தினாலும் இந்த வருடம் சுமாராக செயல்பட்ட அவர் 32 ஐபிஎல் போட்டிகளில் 30 விக்கெட்களை 8.71 என்ற எக்கனாமியில் எடுத்துள்ளார். இருப்பினும் 2022 விஜய் ஹசாரே ஒருநாள் கோப்பையில் 14 விக்கெட்களை 4.15 என்ற எக்கனாமியில் எடுத்து அசத்தியதால் இந்த இலங்கை தொடருக்கான இந்திய அணில் முதல் முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Hardik Pandya Shivam Mavi

ஆனால் டி20 கிரிக்கெட்டில் சமீப காலங்களில் சுமாராகவே செயல்பட்ட இவருக்கு பதில் அர்ஷிதீப் சிங், உம்ரான் மாலிக், ஹர்ஷல் படேல் ஆகியோர் தான் விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை அவர்களில் யாராவது காயமடைந்தாலும் இவரை விட சிறப்பான ஃபார்மில் இருக்கும் முகேஷ் குமார் வாய்ப்பு பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் காரணமாக இவருக்கு இந்த தொடரில் வாய்ப்பு கிடைப்பது கடினமாகவே பார்க்கப்படுகிறது.

- Advertisement -

2. ருதுராஜ் கைக்வாட்: சமீப காலங்களாக உள்ளூர் தொடரில் அபாரமாக செயல்பட்டு வரும் இவர் 72 லிஸ்ட் ஏ போட்டிகளில் 4034 ரன்களையும் ஐபிஎல் தொடரில் 1207 ரன்களை 130.35 என்ற ஸ்ட்ரைக் ரேட்டிலும் எடுத்துள்ளார். குறிப்பாக 2022 விஜய் ஹசாரே கோப்பையில் அனலாக செயல்பட்ட அவர் ஒரே ஓவரில் 7 சிக்ஸர்களை அடித்து உலக சாதனை படைத்தார். இருப்பினும் 2021 ஐபிஎல் தொடரில் ஆரஞ்சு தொப்பியை வென்றதால் இந்தியாவுக்காக அறிமுகமான அவர் இதுவரைப் பெற்ற எந்த வாய்ப்புகளிலும் அசத்தியதில்லை.

Ruturaj-Gaikwad

அதே சமயம் 2022 ஐபிஎல் தொடரிலும் சுமாராக செயல்பட்ட அவர் உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட்டில் தான் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி நல்ல ஃபார்மில் இருக்கிறார். எனவே டி20 கிரிக்கெட்டில் 2022இல் சுமாராக செயல்பட்ட ஓப்பனிங் பேட்ஸ்மேனாக அவரை விட சமீப காலங்களில் சிறப்பாக செயல்பட்டு அற்புதமான பார்மில் இருக்கும் சுப்மன் கில் – இஷான் கிசான் ஆகியோர் தான் இந்த இலங்கை தொடரில் தொடக்க வீரர்களாக களமிறங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் இந்த தொடர் முழுவதும் இவர் பெஞ்சில் அமர்வதற்கு அதிக வாய்ப்புள்ளது.

- Advertisement -

1. ராகுல் திரிபாதி: இந்தியாவுக்காக விளையாடும் கனவுடன் உள்ளூர் கிரிக்கெட்டில் போராடி வரும் இவர் 2022 ஐபிஎல் தொடரில் 413 ரன்களை 158.24 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் வெளுத்து வாங்கியதால் ஒரு வழியாக கடந்த ஜூன் மாதம் நடந்த அயர்லாந்து டி20 தொடரில் முதல் முறையாக தேர்வு செய்யப்பட்டார். ஆனால் ஹர்திக் பாண்டியா தலைமையில் 2 – 0 (2) என்ற கணக்கில் இந்தியா வென்ற அத்தொடரில் வாய்ப்பு பெறாத அவர் அதன் பின் ராகுல் தலைமையில் ஜிம்பாப்வேவில் நடைபெற்ற ஒருநாள் தொடரிலும் பெஞ்சிலேயே அமர்ந்திருந்தார்.

Rahul Tripathi and Rajat Patidar

இதையும் படிங்கயோ – யோ டெஸ்டோடு சேர்த்து டெக்ஸா என்கிற புதிய சோதனையையும் – நடைமுறைக்கு கொண்டுவந்துள்ள பி.சி.சி.ஐ

பொதுவாக டாப் ஆர்டரில் விளையாடும் அவருக்கு இத்தொடரிலும் வாய்ப்பு கிடைக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் இஷான் கிசான், சுப்மன் கில், சூரியகுமார் யாதவ் ஆகிய 3 முக்கிய வீரர்கள் டாப் ஆர்டரில் இத்தொடரில் விளையாட உள்ளனர்.

Advertisement