யோ – யோ டெஸ்டோடு சேர்த்து டெக்ஸா என்கிற புதிய சோதனையையும் – நடைமுறைக்கு கொண்டுவந்துள்ள பி.சி.சி.ஐ

IND
- Advertisement -

இந்திய அணி கடந்த 2011-ஆம் ஆண்டு தோனியின் தலைமையில் உலககோப்பையை வென்றிருந்தது. அதனைத்தொடர்ந்து எந்தவொரு கேப்டனாலும் ஐ.சி.சி கோப்பையை கைப்பற்ற முடியவில்லை. அதிலும் குறிப்பாக இந்திய அணிக்கு கடந்த ஆண்டு மிகவும் மோசமாக அமைந்தது. ஏனெனில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரில் இறுதிசுற்றுக்கு கூட முன்னேறாத இந்திய அணி டி20 உலககோப்பை தொடரிலும் அரையிறுதி சுற்றோடு வெளியேறியது.

IND vs BAN

- Advertisement -

இப்படி இந்திய அணி தொடர்ச்சியாக ஏமாற்றத்தை அளித்து வரும் வேளையில் இந்திய அணியின் எதிர்கால செயல்பாடுகள் குறித்து நேற்று இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பி.சி.சி.ஐ சார்பில் மும்பையில் மீட்டிங் ஒன்று நடத்தப்பட்டது. இதில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, பயிற்சியாளர் டிராவிட், தேசிய கிரிக்கெட் அகாடெமி தலைவர் வி.வி.எஸ் லக்ஷ்மணன் போன்ற முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் இந்திய அணியின் வீரர்கள் தேர்வு குறித்த பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அந்த வகையில் இனிவரும் எந்த தொடருக்கான இந்திய அணியிலும் வீரர்கள் யோ – யோ டெஸ்டில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று உறுதி செய்யபட்டுள்ளது. அதேபோன்று கூடுதலாக தற்போது டெக்ஸா என்ற பரிசோதனையும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த டெக்ஸா டெஸ்டிலும் தேர்ச்சி பெற்றால் தான் அணியில் இடம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Dexa Test

இந்நிலையில் பி.சி.சி.ஐ நடைமுறைக்கு கொண்டுவந்துள்ள இந்த டெக்ஸா சோதனை என்றால் என்ன? என்பது குறித்த தெளிவான தகவலை இங்கு காணலாம். அதன்படி டெக்ஸா டெஸ்ட் என்பது வீரர்களின் எலும்பு உறுதியாக உள்ளதா என்பதை ஸ்கேன் மூலம் அறியும் பரிசோதனையாகும். எக்ஸ்ரே-வை விட இந்த டெக்ஸா ஸ்கேன் என்பது சிறந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இந்த டெக்ஸா பரிசோதனையின் மூலம் எலும்பின் அடர்த்தியை அதாவது திண்ம அளவினை சரியாக கணிக்க முடியும். அதோடு எலும்பு முறிவு ஏற்படும் முன்னரே இந்த பரிசோதனையின் மூலம் கூறிவிடலாம். அந்த அளவிற்கு எலும்புகளின் திண்ம அளவினை இந்த பரிசோதனையின் மூலம் அறியலாம் என்பதால் இந்த டெஸ்டும் வீரர்களுக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சச்சின் உட்பட யாராக இருந்தாலும் ரிஷப் பண்ட்டை பார்க்க முடியாது – டெல்லி வாரியம் அதிரடி நடவடிக்கை

வீரர்களின் இடுப்பு மற்றும் முதுகு தண்டில் எடுக்கப்படும் இந்த பரிசோதனையின் முடிவு 10 நிமிடத்தில் கிடைத்து விடுமாம். அதோடு ஒரு வீரருக்கு எத்தனை முறை இந்த சோதனையை செய்தாலும் அவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்பதால் யோ – யோ டெஸ்ட் கூடவே இந்த டெக்ஸா சோதனையும் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement