இத்தனை ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவே முதல்முறை – இந்திய வீரர்களால் ஏற்பட்ட அரிதான நிகழ்வு

Jaiswal-and-Jadeja
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியானது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி ஹைதராபாத் நகரில் துவங்கியது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்று முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்க அணியானது இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 246 ரன்களுக்கு சுருண்டது.

அதனை தொடர்ந்து தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடிய இந்திய அணியானது நேற்றைய இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 421 ரன்கள் குவித்திருந்த வேளையில் இன்று மூன்றாம் நாள் ஆட்டம் துவங்கியதும் விரைவாக ரன் குவிப்பில் ஈடுபடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

ஆனால் மூன்றாம் நாள் ஆட்டம் துவங்கியதும் மேலும் 15 ரன்கள் மட்டுமே சேர்த்த நிலையில் இந்திய அணியின் எஞ்சிய வீரர்கள் விரைவாக ஆட்டமிழந்தனர். அதன் காரணமாக இந்திய அணி தங்களது முதல் இன்னிங்சில் 436 ரன்களுக்கு சுருண்டது.

இதன் காரணமாக தற்போது 190 ரன்கள் பின்தங்கிய நிலையில் இங்கிலாந்து அணி தங்களது இரண்டாவது இன்னிங்சை விளையாடி வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு கிட்டத்தட்ட உறுதியாகியுள்ள வேளையில் இதுவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியின் வீரர்கள் செய்யாத ஒரு சாதனை இந்த போட்டியில் நிகழ்த்தப்பட்டதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

அந்த வகையில் இந்திய அணியைச் சேர்ந்த மூன்று வீரர்கள் 80 ரன்களில் ஆட்டமிஷந்தனர். இந்த போட்டியில் இந்திய வீரர்களில் ஒருவர் கூட சதம் அடிக்காமல் மூன்று வீரர்கள் இப்படி 80 ரன்களில் ஆட்டமிழந்துள்ளது இந்திய அணி சார்பாக இதுவே முதல் முறை. அதேபோன்று ஒட்டுமொத்தமாக சர்வதேச கிரிக்கெட்டில் இது போன்ற நிகழ்வு ஏழாவது முறையாக நிகழ்ந்துள்ளது.

இதையும் படிங்க : பாகிஸ்தான் மாதிரி இல்ல.. இந்தியாவில் அது அதிகமா இருக்கு.. வாக்கை மீறி இங்கிலாந்து வீரர் பேட்டி

இந்த போட்டியில் இந்திய அணியின் வீரர்களான யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 74 பந்துகளில் 80 ரன்களையும், கே.எல் ராகுல் 123 பந்துகளில் 86 ரன்களையும், ஜடேஜா 180 பந்துகளை சந்தித்து 87 ரன்களையும் குவித்து ஆட்டம் இழந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement