ஐபிஎல் 2023 : அணிகளின் பயிற்சியாளர் குழுவில் இணைந்து பணியாற்றும் 3 மகளிர்கள் – லிஸ்ட் இதோ

jamieson
- Advertisement -

இந்தியாவின் நம்பர் ஒன் விளையாட்டு தொடராக உருவெடுத்துள்ள ஐபிஎல் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 2008ஆம் ஆண்டு 8 அணிகளுடன் சாதாரண தொடராக துவங்கப்பட்டது. ஆனால் கடந்த 15 வருடங்களில் தன்னைத் தானே மெருகேற்றி கொண்டு பல புதிய பரிணாமங்களை கடந்துள்ள ஐபிஎல் இன்று தரத்தில் ஐசிசி நடத்தும் உலக கோப்பையை மிஞ்சி உலகின் நம்பர் ஒன் கிரிக்கெட் தொடராக முன்னேறியுள்ளது. அத்துடன் வருமானத்தையும் கோடிக்கணக்கில் கொட்டிக் கொடுக்கும் ஐபிஎல் தொடர் ஒட்டுமொத்த விளையாட்டு உலகில் அதிக வருமானத்தை பெற்றுக் கொடுக்கும் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடராகவும் உயர்ந்துள்ளது.

அப்படி பல்வேறு பரிணாமங்களைக் கடந்து விஸ்வரூப வளர்ச்சி கண்டுள்ள ஐபிஎல் தொடரில் மகளிர் பணியாற்றத் துவங்கிய பரிணாமம் ஏற்பட்டுள்ளது. பொதுவாக ஆடவர் அணிகளில் ஆடவர் பயிற்சியாளர்களே இருக்கும் நிலை நவீன கிரிக்கெட்டில் பிக்பேஷ் போன்ற வெளிநாட்டு தொடர்களில் ஆரம்ப காலத்திலேயே மாறி விட்டது. மேலும் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற ஆடவர் கிரிக்கெட்டில் மகளிர் நடுவர்களாகவும் பயிற்சிளாகவும் செயல்படுவது சர்வ சாதாரணமாகி விட்டது. அந்த வரிசையில் ஐபிஎல் தொடரிலும் பயிற்சியாளர் குழுவில் மகளிர் அணியினர் இணைந்து வெற்றிக்கு பணியாற்ற துவங்கியுள்ளார்கள். அந்த வகையில் ஐபிஎல் அணிகளில் பயிற்சியாளர் குழுவில் செயல்படும் மகளிரைப் பற்றி பார்ப்போம்:

- Advertisement -

3. கினிதா கட்கியா பட்டேல்: தொழில்முறை விளையாட்டு ஊட்டச்சத்து அதாவது நியூட்ரிஸ்ட் நிபுணரான இவர் கடந்த சில வருடங்களாக மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இணைந்து பணியாற்றி வருகிறார். ஊட்டச்சத்து பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி அதற்கான குறிப்புகளை வழங்கி தேவைப்படும் மும்பை அணி வீரர்களுக்கு செயல் முறையாகவும் உதவி புரிந்து வரும் அவர் நல்ல உடல் தகுதியுடன் இருப்பதற்கு உதவி செய்து வருகிறார்.

அத்துடன் இந்திய கபடி வீரர் விஷால் மானேவுடன் இதர நாட்களில் பணியாற்றி வரும் அவர் இந்திய கிரிக்கெட் அணியின் ரசிகையாகவும் உள்ளார். அவரது ஊட்டச்சத்து குறிப்புகளை பின்பற்றுவதற்காக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 40000+ ரசிகர்கள் பின் தொடர்கிறார்கள்.

- Advertisement -

2. ஹரிணி பிரியதர்ஷினி: பயிற்சியாளர் குழுவில் அணி மருத்துவர் என்பவர் மிகவும் முக்கியமானவராக பார்க்கப்படுகிறார். அந்த வகையில் இதர 9 ஐபிஎல் அணிகளில் மருத்துவராக ஆடவர் இருக்கும் நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் மட்டும் மருத்துவராக இந்த மகளிர் மருத்துவர் கடந்த சில வருடங்களாக செயல்பட்டு வருகிறார்.

தற்போது 30 வயதாகும் அவர் பெங்களூருவில் சில விளையாட்டு துறை அணிகளில் இது போன்ற வேலைகளை ஏற்கனவே செய்த அனுபவத்தால் ஐபிஎல் தொடரில் விராட் கோலி போன்ற சூப்பர் ஸ்டார்கள் விளையாடும் அணிக்கு மருத்துவராகும் அளவுக்கு முன்னேறியுள்ளார்.

- Advertisement -

1. நவ்னிதா கெளதம்: பெரும்பாலான பெங்களூரு ரசிகர்கள் இவரை நன்றாகவே அறிந்து வைத்திருப்பார்கள் என்று சொல்லலாம். ஏனெனில் கடந்த 2019 முதல் பெங்களூரு அணியின் தெரப்பிஸ்டாக செயல்பட்டு வரும் இவரை அந்த அணி ரசிகர்கள் பெரும்பாலான போட்டிகளில் களத்திலும் பார்த்திருக்க முடியும்.

இருப்பினும் ஆடவர்களுக்கு மத்தியில் எப்படி ஒரே மகளிராக இவர் செயல்படுகிறார் என்று சில சலசலப்புகள் இருந்த போது பெங்களூரு அணியில் இருக்கும் 20 வீரர்களும் தன்னுடைய சகோதரர்கள் என்று அவர் அளித்த பேட்டி பின்வருமாறு. “கண்டிப்பாக நான் அவ்வாறு நினைக்கவில்லை. இங்கே எல்லா நேரங்களிலும் 20 சகோதரர்கள் இருப்பது போன்ற உணர்வு உள்ளது. வீரர்கள் மற்றும் ஆதரவு ஊழியர்கள் உங்கள் வேலையை நம்பும் வரை பாலினம் ஒரு பிரச்சினையாக இருக்கக்கூடாது என்று நான் நம்புகிறேன். ஏனெனில் நாங்கள் அனைவரும் சுகாதார நிபுணர்கள்” என்று கூறினார்.

இதையும் படிங்கIND vs SL : சஞ்சு சாம்சனுக்கு பதிலாக இன்று அறிமுகமாகப்போகும் வீரர் இவர்தான் – உறுதியான வாய்ப்பு

கனடாவில் பிறந்த இவர் இந்தியாவுக்கு குடி பெயர்ந்து இது போன்ற விளையாட்டு அணிகளில் தெரபிஸ்டாக செயல்பட்டு வருகிறார். குறிப்பாக 2021இல் துபாயில் நடைபெற்ற ஐசிசி டி20 உலக கோப்பையில் நெதர்லாந்து அணியின் பயிற்சியாளர் குழுவிலும் அவர் செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement