IND vs SL : சஞ்சு சாம்சனுக்கு பதிலாக இன்று அறிமுகமாகப்போகும் வீரர் இவர்தான் – உறுதியான வாய்ப்பு

Samson-IND
- Advertisement -

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணியானது இங்கு தற்போது மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. அதன்படி ஜனவரி 3-ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்திய இந்திய அணியானது இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது இன்று புனே மைதானத்தில் நடைபெற உள்ளது.

IND vs SL

- Advertisement -

இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்புடன் இந்திய அணியும், இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்யும் முறைப்புடன் இலங்கை அணியும் களமிறங்க இருப்பதினால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு தற்போது ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த முதலாவது போட்டியின்போது கேட்ச் பிடிக்க சென்று டைவ் அடித்த சஞ்சு சாம்சன் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக இரண்டாவது போட்டியை தவற விடுவார் என்று ஏற்கனவே கூறப்பட்டதால் இன்றைய இரண்டாவது போட்டியில் அவருக்கு பதிலாக யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

tripathi

இந்நிலையில் அதற்கு விடை கிடைக்கும் வகையில் இன்றைய இரண்டாவது டி20 போட்டிக்கான இந்திய அணியில் முதல் முறையாக சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான ராகுல் திரிப்பாதி அறிமுகவீரராக களமிறங்க போவது உறுதியாகி உள்ளது. ஏனெனில் எப்பொழுதுமே பாண்டியா புதுவீரர்களுக்கு தேவையான அறிமுக வாய்ப்பு நிச்சயம் கிடைக்கும் என்று ஏற்கனவே தனது கருத்தினை வெளிப்படையாக பகிர்ந்திருந்தார்.

- Advertisement -

அதோடு நடைபெற்று முடிந்த முதல் டி20 போட்டியிலும் கூட (சுப்மன் கில், ஷிவம் மாவி) இரண்டு வீரர்களை அறிமுகம் செய்து வைத்தார். இந்நிலையில் இந்த இரண்டாவது போட்டியில் நிச்சயம் நான்காவது இடத்தில் சஞ்சு சாம்சனுக்கு பதிலாக அதே இடத்தில் களமிறங்கி சிறப்பாக விளையாடி வரும் ராகுல் திரிப்பாதியை அவர் அறிமுகவீரராக களமிறக்க அதிக வாய்ப்பு உள்ளது.

இதையும் படிங்க : IND vs SL : சஞ்சு சாம்சனுக்கு பதிலாக அணியில் இணைந்த ஜிதேஷ் சர்மா – யார் இவர்? அப்படி என்ன ஸ்பெஷல்

ஏற்கனவே ஐபிஎல் தொடர் மற்றும் உள்ளூர் தொடர் என அசத்தி வரும் ராகுல் திரிப்பாதி தொடர்ச்சியாக இந்திய அணியில் இடம்பெற்று வந்தாலும் அவருக்கு இன்னும் பிளேயிங் லெவனில் இதுவரை வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில் சஞ்சு சாம்சனுக்கு ஏற்பட்ட காயம் காரணமாக ராகுல் திரிப்பாதி நிச்சயம் அறிமுகவீரராக இன்றைய இரண்டாவது டி20 போட்டியில் களம் இறங்குவார் என்பது உறுதி.

Advertisement