இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முடிந்த முதலாவது டி20 போட்டியில் இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்ற இந்திய அணியானது இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது ஜனவரி 5-ஆம் தேதி இன்று புனே மைதானத்தில் நடைபெற இருக்கிறது.
இந்நிலையில் இந்த தொடரின் முதலாவது போட்டியின் போது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக சஞ்சு சாம்சன் இரண்டாவது போட்டிக்கான அணியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார் என ஏற்கனவே இந்திய அணியின் கிரிக்கெட் நிர்வாகமான பி.சி.சி.ஐ தகவலை வெளியிட்டது. அதன்படி மும்பையில் நடைபெற்ற முதல் போட்டியில் காயமடைந்த சஞ்சு சாம்சன் ஸ்கேன் செய்வதற்காக தற்போது மும்பையிலேயே தக்கவைக்கப்பட்டுள்ளார்.
அதன் காரணமாக இன்று நடைபெறவுள்ள இரண்டாவது டி20 போட்டியை அவர் தவற விடுகிறார். இந்நிலையில் சஞ்சு சாம்சனுக்கு பதிலாக இந்திய அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ஜித்தேஷ் சர்மா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இப்படி ஒரு வீரரை புதிதாக இணைத்ததும் அவர் குறித்த தகவல் தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிக அளவில் தேடப்படும் விடயமாக மாறியுள்ளது.
இந்நிலையில் அவர் குறித்த தெளிவான தகவலை நாங்கள் இங்கே உங்களுக்காக தொகுத்து வழங்கியுள்ளோம். அதன்படி 29 வயதான ஜித்தேஷ் சர்மா விதர்பா அணிக்காக கடந்த 2015-16ஆம் ஆண்டு ரஞ்சி கிரிக்கெட்டில் அறிமுகமானார். ஆரம்பத்தில் மும்பை அணியில் அவர் ஐபிஎல் தொடரில் அறிமுகமாகி இருந்தாலும் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை.
இந்நிலையில் கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்காக அறிமுகமாகிய அவர் 12 போட்டிகளில் 30 ரன்கள் சராசரியுடன் 234 ரன்கள் குவித்தார். அதிலும் குறிப்பாக அவரது ஸ்ட்ரைக் ரேட் 163-ஆக இருப்பதினால் அவர் ஒரு அதிரடியான வீரராக பார்க்கப்படுகிறார்.
இதையும் படிங்க : புரியாம பேசாதீங்க, 2023 உ.கோ வெல்ல விராட் – ரோஹித் இந்தியாவுக்கு தேவை, கெளதம் கம்பீர் சொல்லும் காரணம் என்ன
பவர் ஹிட்டராக இருக்கும் இவர் பஞ்சாப் அணிக்காக பின் வரிசையில் களமிறங்கி அதிரடி காட்டிய விதம் மிக அற்புதமாக இருந்ததாலும், உள்ளூர் தொடர்களிலும் அவர் தனது அதிரடியை தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வருவதால் அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.