புரியாம பேசாதீங்க, 2023 உ.கோ வெல்ல விராட் – ரோஹித் இந்தியாவுக்கு தேவை, கெளதம் கம்பீர் சொல்லும் காரணம் என்ன

Gautam Gambhir Rohit Sharma Virat Kohli
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் உலகின் டாப் அணியாக திகழும் இந்தியா கடந்த 2013க்குப்பின் ஐசிசி கோப்பையை வெல்ல முடியாமல் தடுமாறி வருகிறது. இத்தனைக்கும் உலகத்தரம் வாய்ந்த வீரர்களை கொண்டிருந்தும் சமீப காலங்களாகவே லீக் சுற்றில் அசத்தும் இந்தியா நாக் அவுட் சுற்றில் சொதப்பி வெளியேறுவதை வழக்கமாக வைத்துள்ளது. அதிலும் குறிப்பாக ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 2022 டி20 உலக கோப்பையில் ரோகித் சர்மா உள்ளிட்ட பெரும்பாலான சீனியர்கள் சுமாராக செயல்பட்டதால் கடுப்பான ரசிகர்களைப் போலவே அதிருப்தியடைந்த பிசிசிஐ 2024 டி20 உலக கோப்பைக்கு முன்பாக இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்து புதிய அணியை உருவாக்கும் வேலைகளை துவங்கியுள்ளது.

INDia

- Advertisement -

இருப்பினும் 2023 அக்டோபர் மாதம் சொந்த மண்ணில் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பையில் கடைசி வாய்ப்பாக ரோகித் சர்மா தலைமையிலான முதன்மை சீனியர் நட்சத்திர வீரர்கள் அடங்கிய அணி விளையாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் சமீப காலங்களாகவே தடவலாக செயல்படும் அவர்களுக்கு பதிலாக இஷான் கிசான் போன்ற அதிரடியாக விளையாடும் இளம் ரத்தங்களை கொண்ட துடிதுடிப்பான வீரர்களுக்கு வாய்ப்பளித்தால் மட்டுமே 2011க்குப்பின் சொந்த மண்ணில் நடைபெறும் இந்த கோப்பையை இந்தியா வெல்ல முடியும் என்ற கருத்துக்கள் பரவலாக காணப்படுகிறது.

நங்கூரத்துக்கு வேண்டும்:
குறிப்பாக ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற சீனியர் கிரிக்கெட் வீரர்கள் உலகக்கோப்பையை வென்று கொடுப்பார்கள் என்று நினைத்தால் அது நிச்சயம் நடைபெறாது என்று முன்னாள் ஜாம்பவான் கேப்டன் கபில் தேவ் வெளிப்படையாக விமர்சித்திருந்தார். அதற்கேற்றார் போல் 2019க்குப்பின் குறிப்பாக கேப்டனாக பொறுப்பேற்ற பின் ரோகித் சர்மா அதிரடியாக ரன்களை குவிக்கத் திண்டாடுகிறார். இருப்பினும் அதே 2019க்குப்பின் சதமடிக்க முடியாமல் தடுமாறிய விராட் கோலி ஒரு வழியாக ஃபார்முக்கு திரும்பியுள்ளார்.

Virat Kohli Rohit Sharma

இந்நிலையில் இங்கிலாந்து போல அனைத்து நேரங்களிலும் அதிரடியாக விளையாடினால் அனைத்து நேரங்களிலும் சாதிக்க முடியாது என்று தெரிவிக்கும் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் இந்தியாவின் கால சூழ்நிலைகளை அவ்வப்போது நங்கூரமிட்டு பேட்டிங் செய்யும் திறமை வாய்ந்த பேட்ஸ்மேன்களும் தேவை என்று கூறியுள்ளார். அதை விராட், ரோஹித் ஆகியோர் கச்சிதமாக செய்வார்கள் என்று தெரிவிக்கும் அவர் அதிரடியாக விளையாடும் இளம் வீரர்களுக்கும் வாய்ப்பளித்து இளமையும் அனுபவமும் கலந்த அணியை உருவாக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற வீரர்கள் தடுமாற்றமான நேரங்களில் நங்கூரமாக விளையாடும் தன்மை கொண்டவர்கள் என்று நான் கருதுகிறேன். குறிப்பாக அவர்களால் சுழல் பந்து வீச்சை சிறப்பாக எதிர்கொள்ள முடியும் என்பது உலகக் கோப்பை வெற்றியில் மிகவும் முக்கியமானதாகும். அத்துடன் முதலில் நீங்கள் அதிரடியாக விளையாடும் வீரர்களை கண்டறிந்து வாய்ப்பு கொடுக்க வேண்டும். குறிப்பாக 50 ஓவர் கிரிக்கெட்டில் நீங்கள் அதிரடி மற்றும் நிதான அணுகு முறையில் விளையாடும் வீரர்களை கலவையாக கொண்டிருக்க வேண்டும்”

Gautam Gambhir Rohit Sharma.jpeg

“நமது அணியில் சில வீரர்களால் நங்கூரமாகவும் விளையாட முடியும். அந்த வகையில் வீரர்கள் தங்களது வேலையில் மாற்றங்களை சந்திப்பது முக்கியமாகும். மேலும் எங்களது காலத்தில் 1 இன்னிங்ஸில் 1 பந்து மட்டுமே பயன்படுத்தப்பட்டது. ஆனால் தற்போது 1 இன்னிங்சில் 2 பந்துகளும் உள்வட்டத்திற்கு உள்ளே 5 பீல்டர்களும் அனுமதிக்கப்படுகிறார்கள். அதனாலேயே இப்போதெல்லாம் பகுதி நேர பந்து வீச்சாளர்கள் இந்திய அணியிலிருந்து காணாமல் போய்விட்டனர். மேலும் அப்போதிருந்த ஸ்விங் இப்போதெல்லாம் பார்க்க முடிவதில்லை. மணிக்கட்டு ஸ்பின்னருக்கும் தேவையான சேசிங் கிடைப்பதில்லை”

இதையும் படிங்கவீடியோ : இது நம்ம ஊர்ல அவுட்டா? எங்களுக்கு எதிரா சதி பண்ணாதீங்க, வெற்றிக்கு எதிராக அமைந்த அம்பயரை திட்டும் பாக் ரசிகர்கள்

“இருப்பினும் தற்போது அதிரடியாக விளையாடும் அணுகுமுறையை பின்பற்ற நினைக்கும் இந்தியா முதலில் அதற்கு தகுந்த வீரர்களை கண்டுபிடித்து தேர்ந்தெடுக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன். ஏனெனில் சில வீரர்களால் அந்த அணுகுமுறைக்கு இயற்கையாகவே உட்படுத்திக் கொள்ள முடியாமல் தவிப்பார்கள். எனவே அவர்களை ஏன் நீங்கள் தேர்ந்தெடுத்து அழுத்தம் கொடுக்க வேண்டும். அதனால் என்னை பொறுத்த வரை அதிரடி அணுகுமுறையை பின்பற்ற நினைக்கும் நீங்கள் அதற்காக ஒரே மாதிரியாக விளையாடும் வீரர்களை தேர்ந்தெடுக்காமல் அதிரடியையும் நிதானத்தையும் வெளிப்படுத்தக்கூடிய வீரர்களை கொண்ட கலவையான அணியை உருவாக்க வேண்டும்” என்று கூறினார்.

Advertisement