- Advertisement -
இந்திய கிரிக்கெட்

2023 உலக கோப்பையில் சொந்த மண் சாதகம்லாம் கிடையாது – 8400 கி.மீ ஆப்புடன் இந்தியாவுக்கு காத்திருக்கும் 3 சவால்கள் இதோ

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் 2023 ஐசிசி உலகக் கோப்பை வரும் அக்டோபர் 5 முதல் இந்தியாவில் கோலாகலமாக துவங்குகிறது. சர்வதேச கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்கும் இந்த 50 ஓவர் போட்டிகளைக் கொண்ட தொடரை 1987, 2011 ஆகிய வருடங்களில் இலங்கை போன்ற அண்டை நாடுகளுடன் இணைந்து நடத்திய இந்தியா முதல் முறையாக இப்போது தங்கள் நாட்டிலேயே நடத்துவது ஸ்பெஷலாக பார்க்கப்படுகிறது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் பொதுவாகவே சொந்த மண்ணில் வலுவான செயல்பாடுகளை வெளிப்படுத்தும் இந்தியா 2011 போலவே சாம்பியன் பட்டம் வென்று 2013க்குப்பின் ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் தொடர் தோல்விகளையும் விமர்சனங்களையும் உடைக்குமா என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

பொதுவாக எந்த ஒரு போட்டியிலும் வெளிநாட்டு அணியை விட பிறந்து வளர்ந்து கிரிக்கெட் விளையாட கற்று பழகிய தாய் மண்ணில் எந்த மாதிரியான சூழ்நிலைகள் நிலவும் என்பது போன்ற நுணுக்கமான அம்சங்கள் தெரிந்த சொந்த மண்ணில் விளையாடும் அணிகளுக்கு சொந்த ரசிகர்களின் ஆதரவு இருக்கும் என்பதால் வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்புகளும் ஏற்படும்.

- Advertisement -

3 பெரிய சவால்கள்:
சொல்லப்போனால் அந்த காரணங்களாலேயே கடந்த 2011 உலகக் கோப்பையை சொந்த மண்ணில் வென்ற முதல் அணி என்ற மிகப்பெரிய சரித்திர உலக சாதனையை எம்ஸ் தோனி தலைமையிலான இந்தியா படைத்தது. ஆனாலும் இந்த தொடரில் மற்ற அணிகளை காட்டிலும் இந்தியாவுக்கு காத்திருக்கும் 3 சவால்களைப் பற்றி பார்ப்போம்:

1. ஐபிஎல் பாதகம்: பெரிய விளையாட்டு திருவிழாவாக கருதப்படும் ஐபிஎல் தொடரில் பெரும்பாலான வெளிநாட்டு வீரர்கள் விளையாடி இந்தியாவின் கால சூழ்நிலைகளையும் இந்திய வீரர்களின் பலம் மற்றும் பலவீனங்களையும் நன்றாக தெரிந்து வைத்துள்ளனர். சொல்லப்போனால் 2011 சீசனை விட இப்போதெல்லாம் இந்தியாவின் சூழ்நிலைகளை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக நிறைய வெளிநாட்டு வீரர்கள் வேண்டுமென்றே விருப்பத்துடன் ஐபிஎல் தொடரில் விளையாடுகின்றனர்.

- Advertisement -

அதனால் கிடைக்கும் அனுபவத்தை சர்வதேச அளவில் இந்தியாவுக்கு எதிராகவே பயன்படுத்தும் அவர்கள் அடித்து நொறுக்கி தங்களது அணியை வெற்றி பெற வைக்கின்றனர். எனவே இந்தியாவின் கால சூழ்நிலைகள் உலகின் அனைத்து நாடுகளுக்கும் சமமாகியுள்ளதால் அவை அனைத்தையும் சமாளித்து கோப்பையை வெல்ல வேண்டிய சவால் இந்திய அணிக்கு காத்திருக்கிறது.

2. 8400 கி.மீ: இந்த உலகக் கோப்பைக்காக அறிவிக்கப்பட்ட அட்டவணையில் இந்தியா மட்டுமே அதிகபட்சமாக தன்னுடைய 9 லீக் போட்டிகளையும் 9 வெவ்வேறு நகரங்களில் உள்ள மைதானங்களில் விளையாட உள்ளது. இந்திய ரசிகர்களை மகிழ்விப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டாலும் அது இந்திய அணிக்கு அதிக தூரங்கள் பயணிக்கும் நிலைமையை ஏற்படுத்துகிறது.

- Advertisement -

அதனால் போட்டிக்கு எக்ஸ்ட்ராவாக வலைப்பயிற்சி செய்து புத்துணர்ச்சியுடன் களமிறங்குவதற்கான நேரம் இந்தியாவுக்கு குறையும் என்று சொல்லலாம். குறிப்பாக சென்னையில் நடைபெறும் முதல் போட்டியை முடித்துக் கொண்டு 1761 கி.மீ தூரம் பயணித்து டெல்லியில் நடைபெறும் அடுத்த போட்டியில் இந்தியா விளையாட வேண்டியுள்ளது. அத்துடன் வங்கதேசம் மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகளுக்கு எதிரான போட்டிகளுக்கு இடையே இருக்கும் 3 நாட்களில் இந்தியா புனேவிலிருந்து 1936 கி.மீ தரம்சாலாவுக்கு பயணிக்க வேண்டியுள்ளது.

மேலும் கடைசி 3 போட்டிகளில் விளையாடுவதற்காக மும்பையிலிருந்து கொல்கத்தாவுக்கு சென்று பின்னர் பெங்களூரு திரும்பும் இந்தியா 3100 கி.மீ தூரம் பயணிக்க உள்ளது. இந்த வகையில் மொத்தமாக இந்த உலகக் கோப்பையில் இந்தியா 8400 கி.மீ பயணிக்க வேண்டியுள்ளது சாவலாகவாகவே பார்க்கப்படுகிறது. இந்தியாவுக்கு அடுத்தபடியாக 8 மைதானங்களில் விளையாடும் ஆஸ்திரேலியா 8100 கி.மீ தூரமும் 7 மைதானங்களில் விளையாடும் பாகிஸ்தான் 6800 கி.மீ தூரமும் பயணிக்க உள்ளன.

இதையும் படிங்க:ரொம்ப வெய்ட்டா இருந்தாரு, சச்சினை 2011 ஃபைனலில் விராட் கோலி தூக்கியது ஏன்? கலகலப்பான பின்னணியை பகிர்ந்த சேவாக்

3. ஆதரவும் எதிர்ப்பும்: இத்தொடரில் இந்தியாவுக்கு எந்தளவுக்கு ரசிகர்களிடம் ஆதரவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறதோ அதே அளவுக்கு சுமாராக செயல்படும் பட்சத்தில் எதிர்ப்பும் கிடைக்கலாம். குறிப்பாக 10 வருடங்களாக ஐசிசி தொடர்களில் தொடர்ந்து தோற்று வரும் இந்தியா மற்ற அணிகளை காட்டிலும் இம்முறை நிச்சயம் சொந்த ரசிகர்களுக்கு முன் வென்றாக வேண்டும் என்ற அழுத்தத்தில் விளையாட உள்ளது. ஒருவேளை சுமாராக செயல்படும் பட்சத்தில் கடந்த காலங்களில் மைதானத்தை எரித்தது முதல் பாட்டில்களை வீசி எறிந்தது போன்ற எதிர்ப்புகளை ரசிகர்கள் வெளிப்படுத்த வாய்ப்புள்ளது.

- Advertisement -