கேப் டவுன் மைதானத்தில் தெறித்து ஓடிய பேட்ஸ்மேன்கள்.. 122 வருடம் கழித்து நிகழ்ந்த வித்தியாச சாதனை

IND vs RSA Capte Town 2
- Advertisement -

தென் ஆப்பிரிக்கா மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகள் மோதிய 2வது டெஸ்ட் போட்டி ஜனவரி 3ஆம் தேதி கேப் டவுன் நகரில் துவங்கியது. அதில் ஏற்கனவே முதல் போட்டியில் இன்னிங்ஸ் வெற்றி பெற்று ஆரம்பத்திலேயே முன்னிலை வகிக்கும் தென்னாபிரிக்கா டாஸ் வென்ற முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்த போதிலும் சுமாராக விளையாடி வெறும் 55 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

அந்த அணிக்கு அதிகபட்சமாக கெயில் வேர்ரின் 15 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக முகமது சிராஜ் 6 விக்கெட்டுகள் சாய்த்தார். அதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணியும் ஆரம்பம் முதலே தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெறும் 153 ரன்களுக்கு சுருண்டது.

- Advertisement -

தெறிக்கும் பேட்ஸ்மேன்கள்:
இந்திய அணிக்கு அதிகபட்சமாக விராட் கோலி 46 ரன்கள் எடுக்க தென்னாப்பிரிக்கா சார்பில் அதிகபட்சமாக நன்ரே பர்கர், லுங்கி நிகிடி, ரபாடா தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர். அதைத்தொடர்ந்து 98 ரன்கள் பின்தங்கிய நிலைமையில் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா முதல் நாள் முடிவில் 62/3 ரன்கள் எடுத்து இன்னும் 36 ரன்கள் பின்தங்கியுள்ளது. அந்த வகையில் இப்போட்டியின் முதல் நாளிலேயே 23 விக்கெட்டுகள் விழுந்து கிட்டத்தட்ட பாதிக்கும் மேற்பட்ட போட்டி முடிந்து போயுள்ளது என்றே சொல்லலாம்.

குறிப்பாக டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்காவுக்கு 8 பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டான நிலையில் 2 பேர் மட்டுமே இரட்டை இலக்க ரன்களை தொட்ட போதிலும் 20 ரன்களை கூட தாண்ட முடியவில்லை. அதை விட இந்தியாவுக்கு கேப்டன் ரோஹித் சர்மா 39, கில் 36, விராட் கோலி 46, ராகுல் 8 ஆகிய 4 பேட்ஸ்மேன்கள் மட்டுமே ரன்கள் எடுத்தார்கள். எஞ்சிய 6 பேட்ஸ்மேன்கள் டக் அவுட்டாகி பெரிய ஏமாற்றத்தை கொடுத்தார்கள்.

- Advertisement -

குறிப்பாக 153/4 என்ற நிலையில் இருந்த இந்தியா அடுத்த 11 பந்துகளில் மேற்கொண்டு ஒரு ரன் கூட எடுக்காமல் 6 விக்கெட்களை இழந்து மோசமான சாதனை படைத்தது. அந்த வகையில் மலை தொடர்களைக் கொண்ட அழகான கேப் டவுன் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக பேட்ஸ்மேன்கள் தெறித்து ஓடினார்கள் என்றே சொல்லலாம்.

இதையும் படிங்க: முதல் டெஸ்டில் இவர விட்டிங்களேப்பா.. முதல் இந்திய பவுலராக தனித்துவ சாதனை படைத்த முகேஷ் குமார்

மொத்தத்தில் 147 வருட வரலாறு கொண்ட டெஸ்ட் கிரிக்கெட்டில் 122 வருடங்கள் கழித்து முதல் நாளிலேயே அதிக விக்கெட்கள் விழுந்த 2வது போட்டி என்ற வித்தியாசமான சாதனையை இந்த தென் ஆப்பிரிக்கா மற்றும் இந்தியா டெஸ்ட் போட்டி படைத்துள்ளது. அந்த பட்டியல்:
1. 25 விக்கெட்கள், ஆஸ்திரேலியா – இங்கிலாந்து, மெல்போர்ன், 1902
2. 23 விக்கெட்கள், தென்னாப்பிரிக்கா – இந்தியா, கேப் டவுன், 2023
3. 22 விக்கெட்கள், இங்கிலாந்து – ஆஸ்திரேலியா, ஓவல், 1890
4. 22 விக்கெட்கள், ஆஸ்திரேலியா – வெஸ்ட் இண்டீஸ், அடிலெய்ட், 1951
5. 21 விக்கெட்கள், தென்னாபிரிக்கா – இங்கிலாந்து, போர்ட் எலிசபெத், 1896

Advertisement