வேற லெவல் திறமை : ஐபிஎல் 2022 ஏலத்தில் குறைந்த விலைக்கு வந்து கோடிகளில் செல்லப்போகும் – 2 இளம் வீரர்கள்

auction-1
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரை நடத்துவதற்கான அனைத்து வேலைகளும் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்த சீசனில் லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய 2 புதிய அணிகள் தோற்றுவிக்கப்பட்டுள்ளதால் இந்த ஆண்டு வீரர்களுக்கான ஏலம் மெகா அளவில் நடைபெற உள்ளது. இந்த மெகா ஏலலத்துக்கு முன்பாக இத்தொடரில் பங்கேற்கும் 10 அணிகளும் தாங்கள் விரும்பிய வீரர்களை தேர்வு செய்து அதற்கான விவரங்களை ஏற்கனவே வெளியிட்டுள்ளன. இதையடுத்து 1214 வீரர்கள் பங்குபெறும் ஐபிஎல் 2022 மெகா ஏலம் வரும் பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் பெங்களூரில் நடைபெற உள்ளது.

IPL

- Advertisement -

2 தரமான வீரர்கள் :
இந்த ஏலத்தில் டேவிட் வார்னர், ரவிச்சந்திரன் அஷ்வின் உள்ளிட்ட உலகின் பல தலைசிறந்த வீரர்கள் அதிகபட்ச அடிப்படை விலையான 2 கோடி ரூபாய்களுக்கு பங்கேற்க உள்ளார்கள். இத்துடன் 1.5 கோடி, 1 கோடி, 50 லட்சம், 20 லட்சம் ஆகிய 5 அதிகபட்ச அடிப்படை விலை பிரிவுகளில் ஐபிஎல் 2022 மெகா ஏலம் நடைபெற உள்ளது.

இந்நிலையில் இந்த ஏலத்தில் பங்கேற்க உள்ள 1214 வீரர்களில் அபார திறமை கொண்டுள்ள 2 இளம் இந்திய வீரர்கள் வெறும் 20 லட்சம் அடிப்படை விலை தொகைக்கு விண்ணப்பித்து உள்ளார்கள். ஆனால் அவர்கள் இருவரும் பல கோடிகளுக்கு ஏலத்தில் செல்ல வாய்ப்புள்ளது அப்படிப்பட்ட 2 வீரர்கள் பற்றி பார்ப்போம்:

shahrukh

1. ஷாருக்கான் : தமிழகத்தைச் சேர்ந்த வளர்ந்து வரும் இளம் வீரர் சாருக்கான் கடந்த 2021ஆம் ஆண்டில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக ரூபாய் 5.25 கோடிகளுக்கு வாங்கப்பட்டார். அந்த சீசனில் ஒரு சில போட்டிகளிலேயே அவருக்கு வாய்ப்பு கிடைத்த போதிலும் அந்தப் போட்டிகளில் அபாரமாக பேட்டிங் செய்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

- Advertisement -

அதன்பின் கடந்த வருடம் இறுதியில் நடைபெற்ற சையது முஷ்டாக் அலி டி20 கோப்பையின் மாபெரும் இறுதிப்போட்டியில் கர்நாடகாவை தமிழ்நாடு எதிர்கொண்டது. பரபரப்பாக நடந்த அந்த பைனலில் கடைசி பந்தில் வெற்றிக்கு 5 ரன்கள் தேவைப்பட்ட போது மெகா சிக்ஸர் விளாசிய ஷாருக்கான் தமிழகத்திற்கு சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்தார்.

அப்போட்டியில் வெறும் 15 பந்துகளில் 33* ரன்கள் விளாசிய அவர் அதன்பின் நடந்த விஜய் ஹசாரே உள்ளூர் ஒருநாள் கோப்பை தொடரிலும் அபாரமாக பேட்டிங் செய்தார். இப்படி வளர்ந்து வரும் வீரராக இருக்கும் இவர் வெறும் 20 லட்சத்துக்கு விண்ணப்பித்துள்ளது பல ரசிகர்களையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. எப்படி இருந்தாலும் இவ்வளவு திறமை கொண்டுள்ள இவர் கண்டிப்பாக பெரிய தொகைக்கு ஏலம் போவார் என்பதில் சந்தேகமில்லை.

2. அவேஷ் கான்: டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்காக கடந்த சில வருடங்களாக விளையாடி வரும் இளம் இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஆவேஷ் கான் கடந்த 2021 ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் எடுத்த 2வது பவுலர் ஆவார். தனது அபார திறமையால் ககிசோ ரபாடா, அன்றிச் நோர்ட்ஜெ ஆகிய தென்ஆப்பிரிக்க பந்து வீச்சாளர்களுடன் 3வது பவுலராக டெல்லி அணியில் அவர் விளையாடி வந்தார்.

ஐபிஎல் 2021இல் வெறும் 70 லட்சத்துக்கு டெல்லி அணியால் வாங்கப்பட்ட இவரை தற்போது அந்த அணி நிர்வாகம் தக்க வைக்கவில்லை. தற்போது முன்பைவிட இவரின் மவுசு கூடி உள்ளதால் விரைவில் நடைபெற உள்ள ஏலத்தில் இவரும் கோடிகளில் விலை போவார் என நம்பலாம்.

Advertisement