147 வருடத்தில் இல்லாத உச்சம்.. 90 வருட பரிதாபத்தை உடைத்த ஜிம்பாப்வே கீப்பர்.. மோசமான உலக சாதனை

IRE vs ZIM
- Advertisement -

அயர்லாந்து நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜிம்பாப்வே அங்கு ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. அப்போட்டி ஜூலை 25ஆம் தேதி பெல்ஃபாஸ்ட் நகரில் துவங்கியது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய ஜிம்பாப்வே அணிக்கு துவக்க வீரர்கள் கும்பி 49 ரன்களும் பிரின்ஸ் மஸ்வைர் அரை சதமடித்து 74 ரன்களும் குவித்து நல்ல துவக்கத்தை கொடுத்தனர்.

ஆனால் மிடில் ஆர்டரில் டியோன் மேயர்ஸ் 10, கேப்டன் கிரைட் எர்வின் 5, பிரையன் பெனட் 8, க்ளைவ் மடண்டே 0, முசர்பாணி 4 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அதனால் சீன் வில்லியம்ஸ் 35 ரன்கள் எடுத்தும் ஜிம்பாப்வே தங்களுடைய முதல் இன்னிங்ஸில் வெறும் 210 ரன்கள் மட்டுமே எடுத்தது. அயர்லாந்து சார்பில் அதிகபட்சமாக பேரி மெக்கார்த்தி, ஆன்ட்டி மெக்பிரின் தலா 3 விக்கெட்டுகளை எடுத்தனர்.

- Advertisement -

பரிதாப சாதனை:
அதைத்தொடர்ந்து களமிறங்கிய அயர்லாந்து அணிக்கு துவக்க வீரர் பீட்டர் மோர் சிறப்பாக விளையாடி அரை சதமடித்து 79 ரன்கள் குவித்தார். ஆனால் கேப்டன் ஆண்டி பால்பரின் 19, குர்ட்டிஸ் கேம்பர் 8, ஹேரி டெக்டர் 4, லர்கன் டுக்கெர் 0 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். இருப்பினும் அனுபவ வீரர்கள் பால் ஸ்டர்லிங் 22, ஆண்டி மெக்பிரின் 28 ரன்கள் எடுத்து ஓரளவு கை கொடுத்தனர்.

கடைசியில் 11வது வீரராக களமிறக்கிய மேத்தியூ ஹம்பிரஸ் 27* ரன்கள் எடுத்ததால் 250 ரன்கள் குவித்த அயர்லாந்து 40 ரன்கள் முன்னிலையும் பெற்றது. ஜிம்பாப்வே சார்பில் அதிகபட்சமாக முஸர்பானி, சிவாங்கா தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர். ஆனால் ஜிம்பாப்வே பவுலர்கள் தாறுமாறாக அகலமான மற்றும் பவுன்சர் பந்துகளை போட்டதால் அதை விக்கெட் கீப்பர் க்ளைவ் மடாண்டே பிடிக்க முடியாமல் திண்டாடினார்.

- Advertisement -

அந்த வகையில் நிறைய பவுண்டரிகளை விட்ட அவர் மொத்தமாக 42 பைஸ் ரன்களை கொடுத்தார். இப்படி 147 வருட டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு விக்கெட் கீப்பர் 40க்கும் மேற்பட்ட பைஸ் ரன்களை கொடுப்பது இதுவே முதல் முறையாகும். அதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்ஸில் அதிக பைஸ் ரன்கள் கொடுத்த விக்கெட் கீப்பர் என்ற மோசமான உலக சாதனையும் க்ளைவ் மடண்டே படைத்துள்ளார்.

இதையும் படிங்க: நான் விளையாடியதிலேயே அவர் தான் சுயநலமற்ற கிரிக்கெட்டர்.. வாழ்த்திய ஜாம்பவானை பாராட்டிய கம்பீர் நெகிழ்ச்சி

இதற்கு முன் 1934ஆம் ஆண்டு லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து விக்கெட் கீப்பர் லெஸ் அமிஸ் 37 ரன்கள் கொடுத்ததே முந்தைய சாதனையாகும். ஒருவேளை விக்கெட் கீப்பிங்கில் அவர் கொஞ்சம் நன்றாக செயல்பட்டிருந்தால் இப்போட்டியில் அயர்லாந்து 40 ரன்கள் முன்னிலை பெற்றிருக்காது என்றே சொல்லலாம். இதைத்தொடர்ந்து 40 ரன்கள் பின்னிலையுடன் விளையாடும் ஜிம்பாப்வே 2வது நாள் முடிவில் 12/0 ரன்கள் எடுத்துள்ளது.

Advertisement