நான் விளையாடியதிலேயே அவர் தான் சுயநலமற்ற கிரிக்கெட்டர்.. வாழ்த்திய ஜாம்பவானை பாராட்டிய கம்பீர் நெகிழ்ச்சி

Gautam Gambhir
- Advertisement -

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பை வெற்றியுடன் ஜாம்பவான் ராகுல் டிராவிட் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து ஓய்வு பெற்றார். ஒரு வீரராக சச்சினுக்கு நிகராக இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றிய அவர் உலகக் கோப்பையை மட்டும் வென்றதில்லை. ஆனால் தற்போது ஒரு பயிற்சியாளராக உலகக் கோப்பையை வென்ற அவர் சாம்பியனாக ஓய்வு பெற்றது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்தது.

அதைத் தொடர்ந்து 2007 மற்றும் 2011 உலகக் கோப்பைகளை இந்தியா வெல்வதற்கு உதவிய கௌதம் கம்பீர் புதிய தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருடைய தலைமையில் ஜூலை 27ஆம் தேதி இந்தியா தங்களுடைய முதல் தொடரில் இலங்கையை சந்திக்கிறது. இந்த நிலையில் புதிய பயிற்சியாளர் கௌதம் கம்பீருக்கு ஜாம்பவான் ராகுல் டிராவிட் வாழ்த்து செய்தி தெரிவித்தார்.

- Advertisement -

சுயநலமற்ற கிரிக்கெட்டர்:
அதனால் கேட்டு நெகிழ்ச்சியடைந்த கெளதம் கம்பீர் தம்முடன் விளையாடிய வீரர்களிலேயே ராகுல் டிராவிட் தான் மிகவும் சுயநலமற்றவர் என்று பாராட்டியுள்ளார். இது பற்றி பிசிசிஐ வெளியிட்டுள்ள வீடியோவில் அவர் பேசியது பின்வருமாறு. “இந்த வாழ்த்துக்கு எப்படி ரியாக்ட் செய்வது என்பது எனக்கு தெரியவில்லை. ஏனெனில் இந்த மெசேஜ் எனக்கு மிகவும் பெரியது. அது வெற்றிகரமாக செயல்பட்டவரிடமிருந்து வந்துள்ளது என்பதால் மட்டுமல்ல”

“நான் விளையாடும் போது பார்த்த ஒருவரிடமிருந்து எனக்கு வாழ்த்து வந்துள்ளது மிகவும் பெரியது. இந்த விஷயத்தை நான் எப்போதும் உணர்ந்துள்ளேன். அதை பல்வேறு பேட்டிகளிலும் நான் நிறைய சொல்லியுள்ளேன். அதாவது நான் சேர்ந்து விளையாடியதிலேயே ராகுல் பாய் மிகவும் சுயநலமற்ற கிரிக்கெட்டர். இந்திய கிரிக்கெட்டுக்கு தேவையான அனைத்தையும் ராகுல் பாய் செய்துள்ளார்”

- Advertisement -

“நான் மட்டுமல்ல தற்போதைய தலைமுறையும் அடுத்த தலைமுறையும் அவரிடமிருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது. அந்தளவுக்கு அவர் இந்திய கிரிக்கெட்டுக்கு மிகவும் முக்கியமானவர். பொதுவாக நான் அதிகமாக உணர்ச்சி வசப்பட மாட்டேன். ஆனால் அவருடைய இந்த மெசேஜ் என்னை உணர்ச்சி வசப்படுத்தியுள்ளது. அவருடைய இடத்தை நிரப்புவது என்பது மிகப் பெரியது. முழுமையான நேர்மறையுடன், வெளிப்படைத் தன்மையுடன் அதைச் செய்ய முடியும் என்ற நம்புகிறேன்.

இதையும் படிங்க: அந்த நேரத்தில் சிரிச்சுடுங்க.. புதிய பயிற்சியாளர் கெளதம் கம்பீருக்கு ஜாம்பவான் டிராவிட் நெகிழ்ச்சியான வாழ்த்து

“இந்தப் பணியில் மொத்த இந்தியா மட்டுமின்றி நான் எப்போதும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நபரான ராகுல் டிராவிட்டையும் பெருமைப்பட வைப்பேன்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து 2027 டிசம்பர் வரை கௌதம் கம்பீர் இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்பட உள்ளார். அந்த காலகட்டங்களில் அவர் ஒரு உலகக் கோப்பையாவது பயிற்சியாளராக வென்று கொடுக்க வேண்டும் என்பதே இந்திய ரசிகர்களின் எதிர்பார்ப்பாகும்.

Advertisement