2023 உ.கோ குவாலிபயர் : ஜிம்பாப்வே மாஸ் வெற்றி – ரசிகர்களை சோகமாக்கிய 2 முறை சாம்பியன் வெ.இ கதை முடிந்ததா?

- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்கும் 2023 ஐசிசி உலகக் கோப்பை வரும் அக்டோபர் மாதம் இந்தியாவில் கோலாகலமாக துவங்குகிறது. அதில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் தொடரை நடத்தும் இந்தியா உட்பட 8 அணிகள் நேரடியாக தகுதி பெற்றுள்ள நிலையில் எஞ்சிய 2 அணிகளை தீர்மானிக்கும் குவாலிபயர் சுற்று தற்போது ஜிம்பாப்வே நாட்டில் நடைபெறுகிறது. கடந்த ஜூன் 18ஆம் தேதி துவங்கிய அந்த தொடரில் ஜிம்பாப்வே, நெதர்லாந்து, வெஸ்ட் இண்டீஸ், நேபால், அமெரிக்கா ஆகிய அணைகள் ஏ பிரிவிலும் இலங்கை, ஸ்காட்லாந்து, ஓமன், அயர்லாந்து, அமீரகம் ஆகிய அணிகள் பி பிரிவிலும் மோதின.

அந்த வகையில் கடந்த 2 வாரமாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் அந்த தொடரில் ஏ பிரிவில் ஜூன் 24ஆம் தேதி நடைபெற்ற 2 போட்டிகளில் முதல் போட்டியில் நெதர்லாந்திடம் 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்ற நேபால் மொத்தமாக பங்கேற்ற 4 போட்டிகளில் 3 தோல்வியை பதிவு செய்ததால் லீக் சுற்றுடன் வெளியேறியது. அந்த நிலைமையில் நடைபெற்ற 2வது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை ஜிம்பாப்வே தங்களுடைய சொந்த மண்ணில் எதிர்கொண்டது.

- Advertisement -

கதை முடிந்ததா:
ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற அந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதை தொடர்ந்து களமிறங்கிய ஜிம்பாப்வே அணி 49.5 ஓவரில் 268 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் கிரைக் எர்வின் 47, நட்சத்திரம் சிக்கந்தர் ராசா 68 (58), ரியன் புர்ல் 50 (57), ரன்களும் எடுத்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அதிகபட்சமாக கிமோ பால் 3 விக்கெட்கள் சாய்த்தார்.

அதை தொடர்ந்து 269 ரன்களை துரத்திய வெஸ்ட் இண்டீஸ்க்கு ப்ரெண்டன் கிங் 20, ஜான்சன் சார்லஸ் 1 என முக்கிய பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டான நிலையில் நங்கூரமாக விளையாடிய கெய்ல் மேயர்ஸ் 56 (72) ரன்கள் குவித்து பெவிலியன் திரும்பினார். அதை விட மிடில் ஆர்டரில் கேப்டன் சாய் ஹோப் 30, நிக்கோலஸ் பூரான் 34, ராஸ்டன் சேஸ் 44, ரோவ்மன் போவல் 1, ஜேசன் ஹோல்டர் 19 என முக்கிய பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்களை எடுக்க தவறியதால் 44.4 ஓவரிலேயே வெஸ்ட் இண்டீஸ் 233 ரன்களுக்கு சுருண்டது.

- Advertisement -

அதனால் வழக்கம் போல ஜிம்பாப்வே ரசிகர்கள் வெறித்தனமாக கூச்சலிட்டு வெற்றியை கொண்டாடும் அளவுக்கு பந்து வீச்சில் மிரட்டிய அந்த அணி சார்பில் அதிகபட்சமாக சத்தாரா 3 விக்கெட்டுகளையும் ரிச்சன் ங்கரவா, முசர்பானி, சிக்கந்தர் ராசா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் எடுத்தனர். அதன் காரணமாக 35 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற ஜிம்பாப்வே இதுவரை பங்கேற்ற 3 லீக் போட்டிகளிலும் 3 வெற்றிகளை பெற்று குரூப் ஏ புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்து சூப்பர் 6 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

அந்த அணியின் வெற்றிக்கு ஆல் ரவுண்டராக அசத்திய சிக்கந்தர் ராசா ஆட்டநாயகன் விருதை வென்றார். மறுபுறம் நட்சத்திர வீரர்கள் இருந்தும் சுமாராக செயல்பட்டு தோற்ற வெஸ்ட் இண்டீஸ் 3 போட்டிகளில் 2 வெற்றி 1 தோல்வியை பதிவு செய்து 4 புள்ளிகளுடன் 3வது இடத்தை பிடித்து நெதர்லாந்துடன் சேர்ந்து சூப்பர் 6 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. அதே போல குரூப் பி பிரிவில் இலங்கை, ஸ்காட்லாந்து மற்றும் ஓமன் ஆகிய அணிகள் சூப்பர் 6 சுற்றுக்கு தகுதி பெற போராடுகின்றன.

- Advertisement -

அதில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் பைனலுக்கு மட்டுமில்லாமல் இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பைக்கும் கடைசி 2 அணிகளாக தேர்வாக உள்ளன. தற்போது லீக் சுற்றில் ஜிம்பாப்வேவிடம் தோற்ற வெஸ்ட் இண்டீஸ் அந்த சுற்றில் மேஜிக் நிகழ்த்தி டாப் 2 இடத்தைப் பிடித்தால் மட்டுமே ஃபைனலுக்கு தகுதி பெற முடியும் என்ற இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:இந்திய அணியில் நான் மீண்டும் கம்பேக் கொடுக்க அவரே காரணம். அவ்ளோ சப்போர்ட் பண்ணாரு – யுவ்ராஜ் சிங் உருக்கம்

குறிப்பாக 1975, 1979 ஆகிய அடுத்தடுத்து உலக கோப்பைகளை கிளைவ் லாயிட் தலைமையில் வென்று 80களில் உலகையே மிரட்டிய அசுரனாக பார்க்கப்பட்ட வெஸ்ட் இண்டீஸ் 2022 டி20 உலக கோப்பையில் முதல் சுற்றுடன் வெளியேறிய நிலையில் தற்போது 50 ஓவர் உலகக் கோப்பையின் தகுதி சுற்றில் கூட வெற்றி பெறுவதற்கு திணறுவதை பார்ப்பது ஒட்டுமொத்த ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Advertisement