ஜிம்பாப்வே கிரிக்கெட் அணிக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் இலங்கை 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகின்றது. அந்தத் தொடரின் முதல் போட்டியில் இலங்கை வென்ற நிலையில் 3வது போட்டி செப்டம்பர் 6ஆம் தேதி ஹராரே நகரில் நடைபெற்றது. இந்திய நேரப்படி மாலை 5.00 மணிக்கு துவங்கிய அந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது.
அதைத் தொடர்ந்து களமிறங்கிய இலங்கை மோசமாக பேட்டிங் செய்து 17.4 ஓவரில் 80 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக முதல் முறையாக 100 ரன்களுக்குள் ஆல் அவுட்டான இலங்கை குறைந்தபட்ச ஸ்கோரை பதிவு செய்து அவமான சாதனைப் படைத்தது. மேலும் ஒட்டுமொத்தமாக இலங்கை தங்களுடைய 2வது குறைந்தபட்ச ஸ்கோரை பதிவு செய்து மோசமான சாதனைப் படைத்தது.
ஜிம்பாப்வே அசத்தல்:
அந்த அணிக்கு நிசாங்கா 8, குஷால் மெண்டிஸ் 1, பெர்னாண்டோ 1, கமிண்டு மெண்டிஸ் 0 என முக்கிய பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்கள் எடுக்கவில்லை. அதிகபட்சமாக கமில் மிஸ்ரா 20, கேப்டன் அசலங்கா 18, சனாகா 15 ரன்கள் எடுத்தனர். ஜிம்பாப்வே அணிக்கு அதிகபட்சமாக கேப்டன் சிகந்தர் ராசா 3, ப்ராட் ஏவான்ஸ் 3 விக்கட்டுகளை எடுத்தார்கள்.
அடுத்து விளையாடிய ஜிம்பாப்வே அணிக்கு ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் ப்ரையன் பெனட் 19, மருமணி 17 ரன்களில் அவுட்டானார்கள். அடுத்து வந்த அனுபவ வீரர்கள் சீன் வில்லியம்ஸ் 0, கேப்டன் ராசா 2 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தனர். அதே போல டோனி முன்யோங்கா 3 ரன்களில் அவுட்டானதால் ஜிம்பாப்வே தடுமாறியது.
ஜிம்பாப்வே சாதனை வெற்றி:
இருப்பினும் மிடில் ஆர்டரில் தசிங்கா முசிக்வா அதிரடியாக 21* (14), ரியன் பர்ல் 20* (22) ரன்கள் எடுத்தார்கள். அதனால் 14.2 ஓவரில் 84/5 ரன்களை எடுத்த ஜிம்பாப்வே 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்று 1 – 1* (3) என்ற கணக்கில் இத்தொடரை சமன் செய்து இலங்கைக்கு பதிலடி கொடுத்தது. அத்துடன் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இலங்கைக்கு எதிராக ஜிம்பாப்வே தங்களுடைய 2வது வெற்றியைப் பெற்று இலங்கைக்கு சாதனைப் படைத்தது.
இதையும் படிங்க: சுப்மன் கில் இல்லை.. இந்திய டெஸ்ட் அணியின் உண்மையான மேட்ச் வின்னர் அவர்தான் – முன்னாள் இங்கி வீரர் கருத்து
குறிப்பாக தங்களுடைய சொந்த மண்ணில் முதல் முறையாக டி20 போட்டியில் இலங்கையை தோற்கடித்து ஜிம்பாப்வே அசத்தியது. இந்த வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய கேப்டன் சிக்கந்தர் ராசா ஆட்டநாயகன் விருதை வென்றார். மறுபுறம் அதிகபட்சமாக துஷ்மந்தா சமீரா 3 விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியைத் தவிர்க்க முடியவில்லை.



