டி20 லீக் பைனல்ஸ்ல இப்படி ஒரு மோசமான ஆட்டமா? இதைவிட மோசமான சாதனை இருக்காது – விவரம் இதோ

ZIM
- Advertisement -

ஒருநாள் போட்டி மற்றும் டெஸ்ட் போட்டிகளை விட டி20 போட்டிகளுக்கான வரவேற்பு உலக கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிகளவில் காணப்படும் வேளையில் உலகெங்கிலும் டி20 லீக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இங்கிலாந்து என சர்வதேச போட்டிகளில் விளையாடும் நாடுகளை தவிர்த்து இதர வளர்ந்து வரும் நாடுகளும் அவர்களது நாட்டில் டி20 லீக் போட்டிகளை நடத்தி வருகின்றனர். அந்த போட்டிகளும் ஓரளவு சுவாரஸ்யத்தை வழங்கி வருகின்றன.

அந்த வகையில் ஜிம்பாபேவில் நடைபெற்ற டி20 கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியானது நேற்று நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் ஈகிள்ஸ் மற்றும் டர்ஹாம் அணிகள் மோதினா. லீக் போட்டிகளில் இரண்டு அணிகளுமே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் இறுதிப் போட்டியிலும் அதிக சுவாரசியம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் இறுதிப் போட்டியில் ஈகில்ஸ் அணி 16 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி உள்நாட்டு கிரிக்கெட்டில் மோசமான சாதனைக்கு ஆளாகியுள்ளது. அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த இறுதிப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்த டர்ஹாம் அணி 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 229 ரன்களை குவித்தது.

அந்த அணி சார்பாக அதிகபட்சமாக நெதர்லாந்து வீரர் பாஸ் டி லீட் 58 ரன்கள் அடித்தார். பின்னர் 230 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு ஈகிள்ஸ் அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது. இரு அணிகளுமே சமமான பலம் வாய்ந்த அணிகள் என்பதால் போட்டி விறுவிறுப்பாக நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் போட்டியின் முதல் ஓவரிலேயே ஜிம்பாப்வே கேப்டன் கிரேக் இர்வின் உட்பட இரண்டு விக்கெட் விழுந்தன.

- Advertisement -

அதனை தொடர்ந்து இரண்டாவது ஓவரிலும் மேலும் இரண்டு விக்கெட், மூன்றாவது ஓவரில் ஒரு விக்கெட் என அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்தன. இதனால் ஈகிள்ஸ் அணி 2.3 ஓவரில் 5 ரன்களுக்கு 5 விக்கெட் என்கிற மோசமான நிலையை எட்டியது. பின்னர் எளிதில் சுருண்டு விடும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் ஈகிள்ஸ் அணி 8 ஆவது ஓவரிலேயே 16 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து படுதோல்வியை சந்தித்தது.

இதையும் படிங்க : பயிற்சியின் இடையே சி.எஸ்.கே அணி வீரர்களுடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாடிய தோனி – எதற்கு தெரியுமா?

இதன் காரணமாக டர்ஹாம் அணி 213 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. உள்நாட்டு கிரிக்கெட்டில் ஈகிள்ஸ் அணி எடுத்த 16 ரன்கள் மூலம் டி20 கிரிக்கெட்டில் குறைந்த ரன்களுக்கு ஆல் அவுட்டான மூன்றாவது அணியாக ஈகிள்ஸ் அணி மோசமான சாதனையில் 3 ஆவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2022-ஆம் ஆண்டு சிட்னி தண்டர்ஸ் அணி 15 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. அதேபோன்று ஈகிள்ஸ் அணி கடந்த ஆண்டு 10 ரன்களில் ஆல் அவுட்டானது குறிப்பிடத்தக்கது.

Advertisement