அந்த வேலைய மட்டும் இந்தியா செய்யாம இருந்தா, அடித்து நொறுக்கி நாங்க ஜெயிப்பது உறுதி – இளம் இங்கிலாந்து வீரர் சவால் பேட்டி

Zak Crawley
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற வரலாற்று சிறப்புமிக்க ஆஷஸ் 2023 டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 2 – 2 (5) என்ற கணக்கில் இங்கிலாந்து தொடரை சமன் செய்தது. கடந்த வருடம் புதிதாக பொறுப்பேற்ற பென் ஸ்டோக்ஸ் – ப்ரெண்டன் மெக்கல்லம் தலைமையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் டி20 என்ற அதிரடியான ஆட்டத்தை பின்பற்றும் இங்கிலாந்து இதுவரை எந்த தொடரிலும் தோல்வியை சந்திக்காமல் வெற்றி நடை போட்டு வருகிறது. அதாவது நியூசிலாந்துக்கு எதிராக 2 – 0 (2) இந்தியாவுக்கு எதிராக 2 – 2 (5) தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 2 – 0 (2) பாகிஸ்தானுக்கு எதிராக 3 – 0 (3) நியூசிலாந்துக்கு எதிராக 1 – 1 (2) என்ற கணக்கில் வெற்றி அல்லது சமன் செய்துள்ள இங்கிலாந்து தோல்வியை சந்திக்காமல் அசத்தி வருகிறது.

அதன் தொடர்ச்சியாக உலக சாம்பியனான ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆரம்பத்தில் ஒய்ட் வாஷ் தோல்வியை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட இங்கிலாந்து அதிலிருந்து மீண்டு சமன் செய்துள்ளது. இதை தொடர்ந்து 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் அங்கமாக வரும் பிப்ரவரி மாதம் வலுவான இந்தியாவை அதன் சொந்த மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து எதிர்கொள்கிறது.

- Advertisement -

அடித்து நொறுக்குவோம்:
கடைசியாக கடந்த 2012ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக தோற்ற இந்தியா அதன் பின் 11 வருடங்களாக தொடர்ந்து உலகின் எந்த அணிக்கு எதிராகவும் சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரில் தோல்வியை சந்திக்காமல் வெற்றி நடை போட்டு வருகிறது. அந்த சூழ்நிலையில் இதற்கு முன் பெரும்பாலும் வேகம் அல்லது ஃபிளாட்டான பேட்டிங்க்கு சாதகமான பிட்ச்களில் அசத்திய இங்கிலாந்து சுழலுக்கு சாதகமான இந்திய மைதானங்களில் ரவிச்சந்திரன் அஸ்வின், ரவிந்திர ஜடேஜா போன்ற தரமான ஸ்பின்னர்களை அதே அதிரடியான அணுகு முறையுடன் எதிர்கொண்டு வெல்ல முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இருப்பினும் கடந்த காலங்களில் வெளிநாடுகளில் சாதிக்க முடியுமா என்ற கேள்விகளுக்கு பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து மண்ணில் சிறப்பாக செயல்பட்டு பதிலடி கொடுத்தது போலவே இந்தத் தொடரிலும் அதிரடியாக விளையாடுவோம் என்று இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்திருந்தார். இந்நிலையில் சுழலுக்கு சாதகமான மைதானங்களை கொண்டிருந்தாலும் இந்தியாவிலும் தங்களுடைய அணுகு முறையில் எந்த மாற்றமும் இருக்கப் போவதில்லை என்று இங்கிலாந்து தொடக்க வீரர் ஜாக் கிராவ்லி கூறியுள்ளார்.

- Advertisement -

பொதுவாக இந்தியா எளிதாக வெற்றி பெறுவதற்காக வேண்டுமென்றே சுழலுக்கு சாதகமான மைதானங்களை அமைத்து இரண்டரை நாட்களில் தங்களை தோற்கடிப்பதாக முன்னாள் கேப்டன் மைக்கல் வாகன் போன்ற இங்கிலாந்தினர் விமர்சிப்பது வழக்கமாகும். அந்த வரிசையில் இத்தொடரில் இந்தியாவில் எந்த வகையான மைதானங்கள் இருக்கும் என்று தெரியாது என ஜாக் கிராவ்லி கூறியுள்ளார். ஒருவேளை தங்களுக்கு சாதகமான மைதானங்களை அமைக்கும் வேலையை இந்தியா செய்யாமல் இருந்தால் இங்கிலாந்தால் வெல்ல முடியும் என்று நம்பிக்கை தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

“இந்தியாவில் இருக்கும் மைதானங்கள் பற்றி எனக்கு உண்மையாக எதுவும் தெரியாது. சில நேரங்களில் இந்தியாவில் லேசான வேகம் மற்றும் ஸ்விங் ஆகியன இருக்கும் என்று நினைக்கிறேன். அதில் அசத்தும் அளவுக்கு அவர்களிடம் நல்ல வேகப்பந்து வீச்சாளர்களும் இருக்கின்றனர். எனவே அதற்கு சாதகமாக இருக்கக்கூடிய சில பிட்ச்கள் அத்தொடரில் இருக்கும் என்று நம்புகிறேன். அது தான் எங்களுக்கு அதிகமாக பொருந்தும். மேலும் சில உள்ளூர் டி20 தொடர்களில் விளையாடி நாங்கள் இந்தியாவுக்கு செல்ல உள்ளோம்”

- Advertisement -

“இந்த வாய்ப்பில் அங்குள்ள சூழ்நிலைகளில் எங்களுடைய அணி எப்படி அசத்தப்போகிறது என்பதை பார்க்க அவருடன் காத்திருக்கிறேன். ஒருவேளை சுழலுக்கு சாதகமாக அங்குள்ள மைதானங்கள் இருந்தால் நாங்கள் அதை சிறப்பாக எதிர்கொள்வோம் என்று கருதுகிறேன். எனவே அத்தொடரின் வெற்றி என்பது இந்தியாவின் மைதானங்களுக்கு நாங்கள் எப்படி உட்படுத்திக் கொள்கிறோம் என்பதை பொறுத்தமையும்”

இதையும் படிங்க:இந்திய பேட்ஸ்மேன்களிடம் அந்த இயற்கையான டேலண்ட் காணாம போச்சு, 2023 உ.கோ வெல்ல அனுபவம் தேவை – சல்மான் பட் பேட்டி

“ஆனால் இந்தியாவில் அடையாளம் தெரியாத மைதானங்கள் இருக்கின்றன. மேலும் கடந்த முறை தாறுமாறாக சுழன்ற அகமதாபாத், சென்னை போன்ற மைதானங்கள் இம்முறை இருக்குமா என்பது எனக்கு தெரியாது” எனக் கூறினார். இம்முறை ஹைதெராபாத், விசாகப்பட்டினம், ராஜ்கோட், ராஞ்சி, தரம்சாலா என பெரும்பாலும் சுழலுக்கு சாதகமான மைதானங்களில் இத்தொடர் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement