34 வயதில் டெஸ்ட்டில் அறிமுகமானது மட்டுமின்றி முதல் போட்டியிலேயே மோசமான வரலாற்று சாதனையை – படைத்த பாக் வீரர்

Zahid-Mahmood
Advertisement

பாகிஸ்தான் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணியானது தற்போது பாகிஸ்தான் அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. அதன்படி நேற்று தொடங்கிய இந்த டெஸ்ட் தொடரின் முதலாவது ஆட்டத்தில் முதல் நாளிலேயே இங்கிலாந்து வீரர்கள் தங்களது மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி பல்வேறு உலக சாதனைகளை நிகழ்த்தி கிரிக்கெட் உலக ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்தனர்.

ENG Test

ஏனெனில் நேற்று நடைபெற்ற முதலாம் நாள் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சாளர்களை பாரபட்சம் பார்க்காமல் ரன்களை அதிரடியாக குவித்த இங்கிலாந்து அணியானது முதல் செசனிலேயே 175 ரன்கள் அடித்து அசத்தியது. அதுமட்டுமின்றி முதல் இன்னிங்சின் முதல் நாளிலேயே நான்கு இங்கிலாந்து வீரர்கள் சதம் அடித்து சாதனை படைத்தனர். அதோடு முதல்நாள் ஆட்ட நேர முடிவில் 506 ரன்கள் அடித்து ஒரு டெஸ்ட் கிரிக்கெட்டின் முதல் நாளில் 500 ரன்களை கடந்த முதல் அணியாக இங்கிலாந்து ரெக்கார்டினை பதிவு செய்திருந்தது.

- Advertisement -

அதேபோன்று இங்கிலாந்து சார்பாக மிடில் ஆர்டரில் விளையாடிய ஹரி ப்ரூக் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு ஓவரின் 6 பந்துகளையும் பவுண்டரி அடித்த முதல் இங்கிலாந்து வீரர் என்ற பெருமையையும் பெற்றார். இப்படி முதல்நாள் முடிவில் 506 ரன்களை அடித்து நான்கு விக்கெட்டுகளை இழந்து இருந்த இங்கிலாந்து அணியானது தற்போது முதல் இன்னிங்சில் 657 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

Zahid Mahmood 2

இந்நிலையில் இந்த போட்டியில் பாகிஸ்தான் அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகிய வலதுகை லெக் ஸ்பின்னரான ஷாகித் முகமூத் என்பவர் தனது அறிமுக போட்டியிலேயே யாரும் படைக்காத மோசமான சாதனையை நிகழ்த்தியுள்ளார். அந்த வகையில் தனது 34-ஆவது வயதில் நேற்று பாகிஸ்தான அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் மொத்தம் 33 ஓவர்கள் வீசி 7.10 என்ற எக்கானிமியில் 235 ரன்கள் விட்டுக் கொடுத்தார்.

- Advertisement -

இதன்மூலம் அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே அதிக ரன்களை விட்டுக் கொடுத்த மோசமான பவுலர் என்ற சாதனையை படைத்தார். இதற்கு முன்னதாக 2015 ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிராக அறிமுகமான இங்கிலாந்து வீரர் அடில் ரசித் 163 ரன்கள் விட்டுக் கொடுத்ததே மோசமான சாதனையாக இருந்தது.

இதையும் படிங்க : ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வு பெற்ற ப்ராவோ – அடுத்ததாக என்ன செய்ய போகிறார்? சிஎஸ்கே ரசிகர்களுக்கு மகிழும் செய்தி இதோ

அதனை தற்போது பாகிஸ்தான் வீரரான ஷாகித் முகமூத் கடந்து மோசமான சாதனையை பதிவு செய்துள்ளார். இந்த போட்டியில் அவர் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தாலும் இவ்வளவு ரன்களை விட்டுக் கொடுத்தது அவரை இந்த மோசமான சாதனைக்கு சொந்தக்காரராக மாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement