மும்பை அணியில் இருந்த ஒரு பிரச்சனையும் இவரின் வருகையால் இப்போது தீர்ந்தது – ஜாஹீர் கான் ஓபன்டாக்

Zaheer
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் வீரரான பார்த்திவ் படேல் மும்பை இந்தியன்ஸ் அணியை பற்றி சமீபத்தில் பேசியுள்ளார். அதில் அவர் மும்பை இந்தியன்ஸ் அணி இந்த முறை மிகச் சிறந்த விதத்தில் தயாராகி வருகிறது. தன்னிடமிருந்த ஒரு குறையை அது தீர்த்து விட்டது. இந்த ஆண்டும் மும்பை இந்தியன்ஸ் அணி கோப்பையை வெல்ல தகுதிவாய்ந்த பலமான அணியாக உருவாகி வருகிறது என்று குறிப்பிட்டு இருந்தார். தற்போது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மிகப் பெரும் தலைவலியாக இருப்பது ஸ்பின் பிரச்சனை தான்.

mi

- Advertisement -

க்ருனால் பாண்டியா மற்றும் ராகுல் சஹார் ஆகியோர் ஒரு வகையில் சிறப்பாக பந்து வீசினாலும் அனுபவம் வாய்ந்த வீரரை மும்பை இந்தியன்ஸ் அணி தேடிவந்தது.இருப்பினும் சென்ற ஆண்டு தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி கோப்பையை கைப்பற்றி சாம்பியன் அணியாக உண்மை இந்தியன்ஸ் வலம் வந்தது. இந்த ஆண்டு அந்த குறையை அந்த அணி நிவர்த்தி செய்து விட்டது. ஏலத்தில் அனுபவம் வாய்ந்த பியூஸ் சாவ்லாவை மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியுள்ளது. பியூஸ் சாவ்லா மும்பை அணிக்கு மிகப் பெரிய தூணாக இருப்பார்.

ஏனெனில் இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் மும்பை அணி முதல் 9 போட்டிகளில் சென்னை மற்றும் டெல்லி ஆகிய ஊர்களில் விளையாட உள்ளது. இந்த இரண்டு மைதானங்களும் ஸ்பின் பந்து வீச்சுக்கு சாதகமான மைதானங்கள் ஆகும். எனவே அனுபவம் வாய்ந்த பியூஸ் சாவ்லா நன்றாக பந்து வீசிய மும்பை அணிக்கு பலத்தைச் சேர்ப்பார் இன்றும் இந்த ஆண்டும் கோப்பையை வெல்லும் முனைப்போடு மும்பை இந்தியன்ஸ் அணி களம் இறங்கும் என்றும் பார்த்தீவ் பட்டேல் கூறியுள்ளார்.

பியூஷ் சாவ்லா இந்திய அணிக்காக ஆடி உள்ளவர். உலக கோப்பை தொடர்களில் அவர் ஆடியுள்ளார். உலக கோப்பை தொடர்களில் தொடக்கம் முதலே சிறப்பாக ஆட வேண்டும் அப்படியானால் மட்டுமே தொடரில் நாம் நிலைக்க முடியும். இது பியூஸ் சாவ்லாவுக்கு நன்றாகவே தெரியும். பல போட்டிகளில் விளையாடியுள்ள அவருக்கு ஒவ்வொரு போட்டியும் முக்கியம் என்பது நன்கு தெரியும். மேலும் அவரது ஸ்பின் பந்துவீச்சு மிக அபாரமாக இருக்கும். இவையெல்லாம் கணக்கில் கொண்டே அவரை நாங்கள் ஏலத்தில் எடுத்தோம்.

Chawla

எங்கள் அணிக்கு நிச்சயம் அவர் வெற்றியை தேடி தருவார் என்று ஜாகீர் கான் நம்பிக்கை தெரிவித்தார்.இதுவரை 163 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி உள்ள பியூஸ் சாவ்லா 156 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார் இவரது எக்கானமி விகிதம் 7.87 ஆகும். இவரது பந்து வீச்சு ஆவரேஜ் விகிதம் 27.33ஆம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement