கேர் லெஸ்ஸா இருக்காதீங்க. அவங்களும் டேஞ்சர் தான் – இந்திய அணியை எச்சரித்த ஜாஹீர் கான்

Zaheer
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் t20 உலகக்கோப்பை தொடரில் கோப்பையை கைப்பற்றும் என்று அனைவராலும் கணிக்கப்பட்ட அணியாக விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இருந்தது. இந்நிலையில் தற்போது நடைபெற்று வரும் சூப்பர் 12 சுற்றின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடிய இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் படு மோசமான தோல்வியை சந்தித்தது. அதனைத் தொடர்ந்து வருகின்ற ஞாயிற்றுக்கிழமை நியூசிலாந்து அணிக்கு எதிராக இரண்டாவது போட்டியில் விளையாடவுள்ளது.

pak

- Advertisement -

நியூசிலாந்து அணியை தவிர்த்து ஆப்கானிஸ்தான், ஸ்காட்லாந்து, நமீபியா ஆகிய மூன்று சிறிய அணிகளுடன் இந்திய அணி மோத இருப்பதால் நியூசிலாந்து அணிக்கு எதிரான வெற்றி மிகவும் முக்கியமான ஒன்று. ஏனெனில் நியூசிலாந்து அணியை வீழ்த்தினால் இந்திய அணிக்கு அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பு பிரகாசமாகும் என்கிற காரணத்தினால் தற்போது ரசிகர்களின் மத்தியில் இந்த இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டி மிகபெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் பாகிஸ்தான் அணிக்கு எதிராக தோல்வி அடைந்துள்ளதால் இவ்விரு அணிகளுக்குமே இது முக்கியமான போட்டியாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான இந்த போட்டிக்கு முன் விளையாட இருக்கும் இந்திய அணிக்கு ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளார் இந்திய அணியின் முன்னாள் வீரரான ஜாஹீர் கான். இதுகுறித்து அவர் கூறுகையில் :

NZvsIND

நியூசிலாந்து அணி எப்போதுமே அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற முனைப்போடு தீவிரமாக விளையாடும் ஒரு அணி. ஏற்கனவே அவர்கள் பாகிஸ்தான் அணிக்கு எதிராக தோல்வி அடைந்துள்ளதால் இந்த போட்டியில் மீண்டுவர முயற்சிப்பார்கள். அதுமட்டுமின்றி பாகிஸ்தானிடம் அவர்கள் பெரிய போராட்டத்தை அளித்த பின்னரே தோல்வி அடைந்தார்கள். எனவே நியூசிலாந்து அணியை எளிதாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்று கூறியுள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : அவங்க 2 பேர் மட்டும் சூப்பரா ஆடிட்டாங்களா ? முகமது ஷமிக்காக வரிந்து கட்டி நின்ற – கவுதம் கம்பீர்

மேலும் தொடர்ந்து பேசிய அவர் : இந்திய அணிக்கு சற்றும் குறைவில்லாத அணியாக நியூசிலாந்து அணி இருக்கிறது, அது நம் அனைவருக்குமே தெரியும். எனவே நிச்சயம் நியூசிலாந்து அணியை எளிதாக எடுத்துக் கொள்ளாமல் கவனத்துடன் கையாள வேண்டியது அவசியம் என இந்திய அணிக்கு அறிவுரை கூறியுள்ளார் ஜாஹீர் கான் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement