அவங்க 2 பேர் மட்டும் சூப்பரா ஆடிட்டாங்களா ? முகமது ஷமிக்காக வரிந்து கட்டி நின்ற – கவுதம் கம்பீர்

Shami
Advertisement

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் t20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி முதல் போட்டியாக பாகிஸ்தான் அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணியின் சிறப்பான பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இந்திய அணி 151 ரன்களை மட்டுமே குவிக்க அடுத்ததாக விளையாடிய பாகிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 152 ரன்கள் விளாசி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்ததை அடுத்து முகமது ஷமி இணையத்தின் வாயிலாக அதிகளவு விமர்சனங்களை பெற்றிருந்தார்.

Shami

இந்த போட்டியில் 3.5 ஓவர்கள் வீசிய ஷமி 43 ரன்கள் விட்டுக் கொடுத்ததால் அவரை ரசிகர்கள் அனைவரும் இணையதளத்தின் வாயிலாக கடுமையாக விமர்சித்தனர். இந்நிலையில் அவர்களது விமர்சனத்திற்கு எதிராக சச்சின், ஹர்பஜன் சிங் போன்ற முன்னாள் வீரர்கள் முகமது ஷமிக்கு ஆதரவாக தங்களது கருத்தினை தெரிவித்திருந்தனர்.

- Advertisement -

இந்நிலையில் தற்போது இந்திய அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீரும் முகமது ஷமிக்கு ஆதரவாக தனது கருத்தினை வெளிப்படுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : இந்தியா அந்த போட்டியில் தோற்றத்தைப் பற்றி எல்லாம் பேசுகிறீர்கள். ஆனால் பாகிஸ்தான் சிறப்பாக விளையாடியதை ஏன் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதே போன்று முகமது ஷமி மட்டும்தான் அந்த போட்டியில் மோசமாக பந்து வீசினாரா ? அவரை தவிர்த்து புவனேஸ்வர் குமார், பும்ரா ஆகியோர் சிறப்பாக வீசி விட்டனரா ? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

shami

மேலும் மத ரீதியாக முகமது ஷமி தாக்கப்படுவது தவறு என்றும் குறிப்பிட்ட சில வீரர்களை இப்படி மதத்தின் அடிப்படையில் விமர்சிப்பது தவறான ஒன்று என தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் : ஷமி குறித்து எனக்கு நன்றாக தெரியும். கொல்கத்தா அணியின் கேப்டனாக விளையாடிய போது ஷமி எனது அணியில் இணைந்திருந்தார்.

இதையும் படிங்க : பஞ்சாப் அணியால் தக்கவைக்கப்படுவாரா கே.எல் ராகுல் ? – பஞ்சாப் அணியின் ஓனர் நெஸ்வாடியா பேட்டி

அப்போது மிகவும் கடினமான பயிற்சியை மேற்கொள்ளும் ஒரு பவுலராகவே அவர் இருந்து வந்தார். அது மட்டுமின்றி சர்வதேச கிரிக்கெட்டில் அவர் நிறைய சாதனைகளை படைத்துள்ளார். இந்நிலையில் அவரை இப்படி விமர்சிப்பது தவறு என்றும் கம்பீர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement