டி20 உலககோப்பை தொடரில் இந்த 15 பேருக்கு தான் வாய்ப்பளிக்கனும் – ஜாஹீர் கான் தேர்வு செய்த அணி இதோ

Zaheer
- Advertisement -

இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற இருந்த ஏழாவது டி20 உலகக்கோப்பை தொடரானது இங்கு நடைபெறயிருந்த நிலையில் இங்கு பரவி வரும் கொரோனா தொற்று காரணமாக ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் நாடுகளில் நடைபெறும் என ஏற்கனவே ஐசிசி அறிவித்து இருந்தது. அதன்படி தற்போது அனைத்து அணிகளும் இந்த டி20 உலக கோப்பையில் விளையாடுவதற்கான அணியை தேர்வு செய்து வருகின்றன.

cup

- Advertisement -

மேலும் 2007 ஆம் ஆண்டு முதலாவது டி20 உலக கோப்பை தொடரை வென்ற இந்திய அணி ஆனது அதன் பிறகு ஒரு முறை கூட டி20 கோப்பையை கைப்பற்றவில்லை. வெஸ்ட் இண்டீஸ் அணி 2 முறை உலகக்கோப்பையை கைப்பற்றி முதலிடத்தில் இருக்கும் நிலையில் இம்முறை உலகக் கோப்பையை கைப்பற்றி இரண்டாவது முறையாக டி20 கோப்பையை வென்ற பெருமையை பெற இந்திய அணி கடுமையாக முயற்சிக்கும் என்று தெரிகிறது.

இந்நிலையில் இந்த டி20 உலககோப்பை தொடருக்கான இந்திய அணியில் எந்தெந்த வீரர்கள் இடம் பெறப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஏனெனில் தற்போது இந்திய அணியில் ஏகப்பட்ட வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் இந்த தொடருக்கான அணியில் தேர்வு எவ்வாறு அமையப் போகிறது என்பது பலரது எதிர்பார்ப்பாக உள்ளது.

IND

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான ஜாகிர்கான் இந்த உலகக் கோப்பை டி20 தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்து வெளியிட்டுள்ளார். அதில் முக்கிய வீரர்களான தவான் மற்றும் ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோருக்கு இடமளிக்காமல் அணியை தேர்வு செய்துள்ளார். மேலும் இந்த அணியில் ரோகித் மற்றும் ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாகவும், மிடில் ஆர்டரில் விராத் கோலி, சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன் ஆகியயோரையும் தேர்வு செய்துள்ளார்.

- Advertisement -

அதேபோன்று விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட்டை தேர்வு செய்த அவர் ஆல்ரவுண்டர்களாக ஹார்டிக் பாண்டியா மற்றும் ஜடேஜாவை தேர்வு செய்துள்ளார். பந்துவீச்சாளர்களில் தீபக் சாஹர், பும்ரா, ஷமி, புவனேஷ்வர் குமார், வருன் சக்ரவர்த்தி, சாஹல், நடராஜன் ஆகியோரை தேர்வு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Varun

ஜாஹீர் கான் தேர்வு செய்த அணி இதோ :

1) ரோஹித் சர்மா, 2) கே.எல் ராகுல், 3) விராட் கோலி, 4) சூரியகுமார் யாதவ், 5) இஷான் கிஷன், 6) ரிஷப் பண்ட், 7) ஹார்டிக் பாண்டியா, 8) ரவீந்திர ஜடேஜா, 9) பும்ரா, 10) தீபக் சாகர், 11) புவனேஷ்வர் குமார், 12) முகமது ஷமி, 13) சாஹல், 14) வருண் சக்ரவர்த்தி, 15) நடராஜன்/வாஷிங்க்டன் சுந்தர்

Advertisement