இது அநியாயம் – மும்பைக்கு பிரீயா கப் கொடுக்க சதி நடக்கிறது ! பிசிசிஐயிடம் புகார் செய்யும் 9 ஐபிஎல் அணிகள்

MI
- Advertisement -

ஐபிஎல் 2022 கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் 26-ஆம் தேதி முதல் கோலாகலமாக துவங்கி 2 மாதங்கள் நடைபெற உள்ளது. இந்த வருடம் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய புதிய 2 அணிகளையும் சேர்த்து 10 அணிகள் பங்கு பெறுவதால் 74 போட்டிகள் கொண்ட பிரம்மாண்ட ஐபிஎல் தொடர் 65 நாட்கள் ரசிகர்களை மகிழ்விக்க உள்ளது. இதில் வரும் மார்ச் 26 முதல் மே 22 வரை நடைபெற உள்ள 70 போட்டிகள் கொண்ட லீக் சுற்றுக்கான முழு அட்டவணை மட்டும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாட உள்ளன.

ipl

- Advertisement -

மும்பையில் ஐபிஎல் 2022:
கடந்த ஐபிஎல் 2021 தொடர் இந்தியாவிலேயே நடத்தப்பட்டு வந்த நிலையில் அதில் பங்கேற்ற அணிகளில் ஏற்பட்ட கரோனா பரவல் காரணமாக திடீரென்று பாதியில் நிறுத்தப்பட்டு ரத்து செய்யப்பட்டது. குறிப்பாக 29 போட்டிகள் நடைபெற்று முடிந்த நிலையில் யாரும் எதிர்பாராத வண்ணம் திடீரென ஐபிஎல் தொடர் நிறுத்தப்பட்டதால் அதை நடத்தும் பிசிசிஐக்கு சுமார் 2000 கோடி ரூபாய் மாபெரும் நஷ்டம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டது. அதன் காரணமாக மீதி ஐபிஎல் போட்டிகளை எப்படியாவது நடத்தியே தீரவேண்டும் என்ற நிலைக்கு பிசிசிஐ தள்ளப்பட்டது.

அதன்பின் பல முயற்சிகளை எடுத்த பிசிசிஐ ஒருவழியாக எஞ்சிய 31 போட்டிகளை துபாயில் வெற்றிகரமாக நடத்தி நிம்மதிப் பெருமூச்சு விட்டது. அதே நிலைமை இந்தியாவில் இப்போதும் தொடர்வதால் இந்த வருடம் ஐபிஎல் தொடர் இந்தியாவில் நடைபெறுமா என்ற கேள்வி இருந்து வந்தது. அதற்கு பதிலளித்த பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி இந்த வருடத்திற்கான ஐபிஎல் தொடர் இந்தியாவில்தான் நடைபெறும் என அறிவித்திருந்தார்.

wankhede

மேலும் வீரர்களின் நலன் கருதி வழக்கமாக நடைபெறும் 7 – 8 நகரங்களுக்கு பதிலாக மும்பை, புனே, அகமதாபாத் ஆகிய 3 நகரங்களில் மட்டுமே நடைபெறும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. குறிப்பாக ஐபிஎல் தொடரின் 95% போட்டிகள் அதாவது 70 போட்டிகள் கொண்ட லீக் சுற்று தொடர் மும்பை மற்றும் புனே ஆகிய 2 நகரங்களில் மட்டும் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டு அதற்கான அட்டவணையும் வெளியிடப் பட்டுள்ளது.

- Advertisement -

பிரீயா கப் கொடுக்கும் செயல்:
அதிலும் குறிப்பாக இந்த லீக் சுற்றுப் போட்டிகள் மும்பையில் உள்ள வான்கடே, டிஒய் பாட்டில், நவிமும்பையில் உள்ள ப்ராபோர்ன் மற்றும் புனே நகரில் உள்ளே எம்சிஏ ஆகிய 4 மைதானங்களில் மட்டும் நடைபெற உள்ளது. மொத்தத்தில் இந்த வருடத்தின் பெரும்பாலான ஐபிஎல் மும்பை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற உள்ளது புதிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

ஏனெனில் இதன் காரணமாக இந்த ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மட்டும் சொந்த ரசிகர்களுக்கு முன்னிலையில் சொந்த மண்ணில் விளையாடும் ஒரு பொன்னான அரிதான வாய்ப்பு கிடைத்துள்ளது என்றே கூறலாம். அதாவது மேலே குறிப்பிடப்பட்டுள்ள 4 மைதானங்களை சுற்றிய பகுதிகளில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு லட்சகணக்கில் ரசிகர் பட்டாளங்கள் உள்ளனர்.

- Advertisement -

அப்படி இருக்கும்போது வான்கடே போன்ற மும்பையை சுற்றியிருக்கும் சொந்த மைதானங்களில் மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடினால் நிச்சயமாக அந்த அணிக்கு ரசிகர்களின் ஆதரவும் பெரிய அளவில் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அதிலும் வான்கடே மைதானத்தில் மும்பை அணி இந்த வருடம் 4 போட்டிகளில் விளையாடவுள்ளது. பொதுவாகவே ஒரு அணிக்கு ரசிகர்களின் ஆதரவு இருந்தால் அது வெற்றி பெறுவதற்கு ஒரு எக்ஸ்ட்ரா உத்வேகத்தை அளிக்கும் என அனைவரும் அறிவார்கள்.

MIvsDC

புகார் செய்யும் அணிகள்:
அப்படிப்பட்ட நிலையில் இந்த வருடம் ஐபிஎல் தொடர் மும்பையில் நடைபெறுவதால் அந்த அணியை தவிர்த்து எஞ்சி இருக்கும் 9 அணிகளுக்கு ரசிகர்களின் ஆதரவு பெரிய அளவில் கிடைக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்த தொடரில் பங்கேற்கும் இந்திய 9 அணிகளும் மிகவும் அதிருப்தி அடைந்துள்ளது. குறிப்பாக ராஜஸ்தான், டெல்லி போன்ற அணிகள் இதுபற்றி ஐபிஎல் நிர்வாகத்திடம் முறையிடப் போவதாகவும் தெரிய வருகிறது.

- Advertisement -

எது எப்படி இருந்தாலும் இந்த ஒரு விஷயத்திற்காக இந்த முடிவிலிருந்து பிசிசிஐ பின்வாங்கப் போவதில்லை என தெரியவருகிறது. இந்நிலையில் சொந்த மண்ணில் விளையாடுவது பற்றி எதிரணிகள் எழுப்பும் புகாருக்கு மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளர் ஜாஹீர் கான் பதிலளித்துள்ளார். இதுபற்றி அவர் பேசியது பின்வருமாறு.

இதையும் படிங்க : கதறகதற முரட்டு அடி! 1008 ரன்களை விளாசி உலகசாதனை படைத்த இந்திய உள்ளூர் அணி – முழு விவரம்

“ஆம். மும்பை எங்களின் சொந்த வீடாகும். இருப்பினும் அதற்காக நாங்கள் அனைத்து போட்டிகளிலும் ஒரே இடத்தில் விளையாடுவதில்லை. அதேசமயம் இத்தொடரில் பங்கேற்கும் எஞ்சிய அணிகளும் அதே அளவிலான போட்டிகளில் விளையாடவுள்ளன. எனவே இதில் எந்த ஒரு அணிக்கும் சாதகம் அல்லது பாதகம் என எதுவும் இல்லை” என்று கூறிய அவர் இதர அணிகளின் குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.

Advertisement