கதறகதற முரட்டு அடி! 1008 ரன்களை விளாசி உலகசாதனை படைத்த இந்திய உள்ளூர் அணி – முழு விவரம்

Ranji Trophy
- Advertisement -

இந்தியாவின் பிரபல உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரஞ்சி கோப்பையின் 2021/22 சீசன் கடந்த பிப்ரவரி 17-ஆம் தேதியன்று இந்தியாவின் பல்வேறு நகரங்களில் தொடங்கியது. கடந்த வருடம் இந்த தொடர் ரத்து செய்யப்பட்ட நிலையில் இந்த வருடம் பல தடைகளை கடந்து நடைபெற்றதால் பல உள்ளூர் இந்திய கிரிக்கெட் வீரர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த தொடரின் லீக் சுற்று போட்டிகள் மட்டும் இப்போது நடைபெற்று முடிந்துள்ள நிலையில் நாக்-அவுட் சுற்று போட்டிகள் வரும் ஐபிஎல் 2022 தொடருக்குப் பின் நடைபெற உள்ளது.

Baba Abarajith Baba Indrajith Ranji Trophy 2022

- Advertisement -

இந்த தொடரில் ஆல்ரவுண்டர் விஜய் சங்கர் தலைமையில் எலைட் குரூப் ஹச் பிரிவில் இடம் பிடித்திருந்த தமிழ்நாடு லீக் சுற்றில் சுமாராக செயல்பட்டதால் நாக்-அவுட் சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் முன்கூட்டியே வெளியேறியது. மறுபுறம் லீக் சுற்றில் அசத்திய ஜார்கண்ட் மற்றும் நாகாலாந்து ஆகிய அணிகள் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு போட்டியில் மோதின.

நாகாலாந்தை வதம் செய்த ஜார்கண்ட்:
கடந்த மார்ச் 12-ஆம் தேதி உலக புகழ்பெற்ற கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் துவங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற நாகாலாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. பொதுவாகவே ரஞ்சிக் கோப்பையை பொருத்தவரை ஜார்கண்ட் அணியை விட நாகாலாந்து சற்று பலம் குறைந்த அணியாக அறியப்படுகிறது.

ranji

அப்படிப்பட்ட நிலையில் துவங்கிய இப்போட்டியில் நாகாலாந்தை ஜார்கண்ட் வீரர்கள் வதம் செய்தார்கள் என்றே கூறலாம். ஏனெனில் டாஸ் வென்று பந்துவீச்சை தொடங்கிய அந்த அணி ஜார்கண்ட் அணியின் டாப் 4 வீரர்களை பெரிய ரன்கள் அடிக்க விடாமல் அவுட் செய்தனர். ஆனால் மிடில் ஆர்டரில் களமிறங்கிய விராட் சிங் 107 (153), குஷாக்ரா 266 (270), சபாஸ் நதீம் 177 (304) ஆகியோர் கருணையே இல்லாமல் அந்த அணியை பந்தாடி அடுத்தடுத்து சதம் விளாசினார். குறிப்பாக ஜார்கண்ட் அணி சார்பில் 11-வது பேட்ஸ்மேனாக களமிறங்கிய ராகுல் சுக்லா கூட நாகலாந்து பந்துவீச்சாளர்களை புரட்டி எடுத்து 85* (149) ரன்கள் விளாசினார். இத்தனை வீரர்கள் இவ்வளவு பெரிய ரன்களை அடித்ததால் ஜார்கண்ட் தனது முதல் இன்னிங்சில் 880 ரன்களை மலைபோல் குவித்தது.

- Advertisement -

கருணை இல்லாத ஜார்கண்ட்:
அதை தொடர்ந்து தனது பேட்டிங்கை துவக்கிய நாகலாந்து அணி ஜார்கண்ட் அணியின் நல்ல பந்து வீச்சுக்கு ஈடு கொடுக்க முடியாமல் முதல் இன்னிங்சில் வெறும் 289 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணிக்கு அதிக பட்சமாக சேட்டன் பிஸ்ட் 122* (253) ரன்கள் எடுத்தார். இதன் காரணமாக 591 ரன்கள் என்ற இமாலய ரன்களை முன்னிலையாக பெற்ற ஜார்கண்ட் நாகலாந்து அணிக்கு பாலோ – ஆன் கொடுத்து இன்னிங்ஸ் வெற்றிபெற முயற்சிக்கும் என அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் 591 ரன்கள் முன்னிலை போதாது என நினைத்த அந்த அணி மீண்டும் பேட்டிங் செய்ய முடிவு எடுத்து மீண்டும் நாகலாந்து பந்துவீச்சாளர்களை கருணையே இல்லாமல் பந்தாடியது.

Ranji Trophy

சுருக்கமாக சொல்ல வேண்டுமெனில் 2-வது இன்னிங்ஸ்சில் அந்த அணியின் உட்கர்ஸ் சிங் 73, நஜிம் சிட்திக் 42, குமார் குஷாக்ரா 89, அங்குல் ராய் 153 என களமிறங்கிய அனைத்து பேட்ஸ்மேன்களும் வேண்டிய ரன்களை அடித்துக்கொண்டே இருந்தார்கள். ஆனால் அதற்குள் போட்டியின் 5 நாட்களும் நிறைவு பெற்றதால் இந்தப் போட்டி டிராவில் முடிந்தது.

- Advertisement -

இந்த போட்டி டிராவில் முடிந்த போதிலும் ஜார்கண்ட் அபாரமாக விளையாடியதன் காரணமாக காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் ஒரு கத்துக்குட்டியான நாகாலாந்தை இந்த அளவுக்கு கதறக்கதற அடிப்பதா என பல கிரிக்கெட் வல்லுனர்கள் ஜார்கண்ட் அணிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். குறிப்பாக ஜார்க்கண்ட் மாநிலத்தில் பிறந்து இந்தியாவிற்கு கேப்டன்ஷிப் செய்து எதிரணிகளிடம் எப்படி மரியாதை செய்ய வேண்டும் என பலருக்கும் கற்றுக்கொடுத்த ஜாம்பவான் எம்எஸ் தோனியை அந்த மாநில அணி பின்பற்ற வேண்டாமா என பலரும் கேட்கிறார்கள். இருப்பினும் அணியில் உள்ள இதர வீரர்களுக்கு பேட்டிங் செய்ய வாய்ப்பளிப்பதற்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டது என ஜார்கண்ட் அணியின் கோச் எஸ் எஸ் ராவ் தெரிவித்தார்.

MSdhoni

உலகசாதனை:
எது எப்படியோ இந்த போட்டியில் ரன் மழை பொழிந்த ஜார்கண்ட் அணி 2 இன்னிங்சிலும் சேர்த்து மொத்தம் 1008 ரன்களை நொறுக்கியது. இதன் வாயிலாக உலக அளவிலான உள்ளூர் முதல் தர கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் அதிக ரன்கள் குவித்த அணி என்ற மாபெரும் உலக சாதனையை அந்த அணி படைத்துள்ளது.

இதற்கு முன் கடந்த 1948/49-ஆம் ஆண்டு மகாராஷ்டிரா அணிக்கு எதிராக பாம்பே கிரிக்கெட் அணி 958 ரன்கள் எடுத்திருந்ததே முதல்தர கிரிக்கெட்டில் பதிவு செய்யப்பட்ட அதிகபட்ச ஸ்கோராக இருந்தது. இது மட்டுமல்லாமல் இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் 880 ரன்களைக் குவித்த ஜார்கண்ட் ரஞ்சி கோப்பை வரலாற்றில் 4-வது அதிகபட்ச ஸ்கோரையும் பதிவு செய்து சாதனை படைத்தது.

Advertisement