இந்திய அணியில் சீக்கிரம் இவர் புகழின் உச்சத்திற்கு செல்வார். அவரோட பேர் நிலைத்திருக்கும் – ஜாஹீர் கான் புகழாரம்

Zaheer
- Advertisement -

இந்திய அணியின் அதிரடி வீரர் ஹர்திக் பாண்டியா சமீபகாலமாக ருத்ர தாண்டவம் ஆடி வருகிறார். குறிப்பாக கடந்த 15 மாதங்களாக காயம் காரணமாக இந்திய அணிக்கு வெளியே இருந்தார். மேலும் அதற்கு முன்னதாக பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டு பெரும் சர்ச்சை வீரராக இருந்தார். அதனை தொடர்ந்து காயத்திலிருந்து மீண்டு வந்து கடுமையாக பயிற்சி செய்து தற்போது இந்திய அணியின் மிகச்சிறந்த வீரராக மாறிவிட்டார். சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் பட்டையை கிளப்பிய ஹர்திக் பாண்டியா பெரும்பாலான போட்டிகளில் அணிக்கு வெற்றியை தேடிக் கொடுத்தார்.

Pandya-3

- Advertisement -

அப்படியே அதே தீவிரத்துடன் இந்திய அணிக்காக விளையாடிய பாண்டியா தற்போதுவரை 5 போட்டிகளில் விளையாடி இரண்டு அரை சதங்கள் அடித்து இருக்கிறார். அதில் தன்னந்தனியாக 2 போட்டிகளில் தனியாளாக நின்று அணியை வெற்றி பெற வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா பந்து வீசவில்லை என்றாலும் மிகச் சிறப்பாக பேட்டிங் செய்து வருகிறார் என்று தெரிவித்திருக்கிறார் ஜாஹிர் கான்.

மேலும் தனக்கான ஒரு மிகப்பெரிய பெயரை உருவாக்கப் போகிறார் என்று தெரிவித்திருக்கிறார் ஜாஹிர் கான். இதுகுறித்து அவர் கூறுகையில் “எந்த ஒரு கட்டத்திலும் ஹர்திக் பாண்டியா சிறப்பாக விளையாடும் மனநிலையை கொண்டிருக்கிறார். மிகவும் சாந்தமாக நன்றாக ஆடுகிறார். ஏனெனில் அவர் மீது அவருக்கு அதீத நம்பிக்கை இருக்கிறது.

pandya 2

அவரால் எந்த நேரத்திலும் சிக்ஸர் அடிக்க முடியும் என்று அவருக்கு தெரிகிறது. இதன் காரணமாக பந்துவீச்சாளர்கள் எப்போது தவறு செய்வார்கள் என்று கழுகு போல் காத்துக் கொண்டிருப்பார்.
பந்துவீச்சாளர்களுக்கு எப்போதும் நெருக்கடி கொடுத்துக் கொண்டே இருப்பார். அவரது ஆட்டம் செல்ல செல்ல கிரிக்கெட் வாழ்க்கை நகர நகர அவருக்கென ஒரு மிகப்பெரிய நற்பெயரை உருவாக்கப் போகிறார். எந்த ஒரு பந்து வீச்சாளரும் அவருக்கு பந்துவீச பயப்படுவார்கள்” என்று தெரிவித்திருக்கிறார் ஜாஹிர் கான்.

Pandya-4

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக தற்போது நடைபெற்று முடிந்த டி20 தொடரில் கூட தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹர்டிக் பாண்டியா தொடர் நாயகன் விருதினை தட்டிச்சென்றார். அதுமட்டுமின்றி தோனியின் பினிஷர் இடத்தை வெகு விரைவில் இவர் கைப்பற்றுவார் என்று பலரும் கூறிவருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement