27 கோடிக்கு வெறும் 110 ரன்ஸ் அடித்த ரிஷப் பண்ட்டை.. ராகுல் போல லக்னோ கழற்றி விடுமா? ஜஹீர் கான் பதில்

Zaheer Khan
- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 27ஆம் தேதி நடைபெற்ற 45வது போட்டியில் மும்பை அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோவை தோற்கடித்தது. அதையும் சேர்த்து லக்னோ 10 போட்டிகளில் 5 வெற்றி 5 தோல்விகளை சந்தித்து புள்ளிப்பட்டியலில் 6வது இடத்திற்கு சரிந்தது. அந்த அணியின் இந்த தடுமாற்றமான ஆட்டத்திற்கு கேப்டன் ரிஷப் பண்ட் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறார்.

இந்த வருடம் 27 கோடி என்ற வரலாறு காணாத தொகைக்கு லக்னோ அணிக்காக வாங்கப்பட்ட அவர் அசத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் டெல்லிக்கு எதிராக ஸ்டம்பிங் செய்யும் வாய்ப்பை கோட்டை விட்ட அவர் தோல்விக்கு காரணமாக அமைந்தார். அத்துடன் இந்த வருடம் 10 போட்டிகளில் அவர் வெறும் ஒரு அரை சதம் மட்டுமே அடித்துள்ளார்.

- Advertisement -

27 கோடிக்கு சொதப்பல்:

ஒட்டுமொத்தமாக ரிஷப் பண்ட் இந்த வருடம் 9 இன்னிங்ஸில் வெறும் 110 ரன்களை 12.22 என்ற மோசமான சராசரியில் 98.21 என்ற படுமோசமான ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்துள்ளார். அதன் காரணமாக கடந்த வருடம் கேஎல் ராகுலை கழற்றி விட்டதைப் போல இந்த வருடத்துடன் லக்னோ அவரையும் கழற்றி விடலாம் என்று சில ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். அதற்குத் தகுந்தார் போல் ரிஷப் பண்ட் டி20 கிரிக்கெட்டில் எப்போதுமே தொடர்ச்சியாக அசத்தியதில்லை.

இந்நிலையில் ரிஷப் பண்ட்டை ஒரு கேப்டனாக அடையாளம் கண்டறிந்தப் பின்பே 27 கோடிக்கு வாங்கியதாக லக்னோ அணியின் ஆலோசகர் ஜஹீர் கான் தெரிவித்துள்ளார். எனவே அவர் லக்னோ கேப்டனாக தொடர்வார் என்று ஜஹீர் கான் ஆதரவு தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “சம்பளத்திற்கும் செயல்பாடுகளுக்கும் சம்பந்தம் இருக்கும் என்று நான் சம்பந்தப்படுத்த மாட்டேன்”

- Advertisement -

ஜஹீர் ஆதரவு:

“அவர் ஒரு லீடர். ஒரு லீடராக அருமையாக செயல்பட்டு வருகிறார் என்று நான் உறுதியாகச் சொல்வேன். ஒரு கேப்டனாக அவர் அனைத்து கட்டங்களையும் நிரப்புகிறார். ஒரு பேட்ஸ்மேனாக மிடில் ஆர்டரில் ரிஷப் பண்ட் ஏற்படுத்தக் கூடிய தாக்கம் வரும் என்று நான் தன்னம்பிக்கையுடன் இருக்கிறேன். இவை சரியான நேரத்தில் கிளிக் செய்வது பற்றியதாகும்”

இதையும் படிங்க: கே.எல் ராகுலுக்கு பதிலடி கொடுத்த விராட் கோலி.. டெல்லி அணிக்கெதிரான வெற்றிக்கு பின் – கிங் கோலி செய்த செயல்

“கடந்தப் போட்டியில் நடந்தது முடிந்துப் போனது. அவர் மிகவும் நம்பிக்கை மற்றும் நேர்மறையாக இருக்கிறார். இவை அனைத்தும் அதே மனநிலையுடன் தொடர்வதைப் பற்றியதாகும். ரிஷப் பண்ட்டை நாங்கள் லக்னோ அணியை முன்னோக்கி எடுத்துச் செல்லக்கூடிய ஒரு கேப்டனாக கண்டறிந்துள்ளோம். எனவே அதில் எப்போதும் எங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை. இவை அனைத்தும் எங்கள் வீரர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து மீண்டும் ஸ்பார்க்கை கண்டறிவதைப் பற்றியதாகும்” என்று கூறினார்

Advertisement