டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நேற்று ஏப்ரல் 27-ஆம் தேதி நடைபெற்ற நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 46-வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் ஆகிய அணிகள் மோதின. ஏற்கனவே இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற லீக் போட்டியில் டெல்லி அணியானது பெங்களூரு அணியை அதன் சொந்த மைதானத்தில் வீழ்த்தி இருந்தது.
கே.எல் ராகுலை கிண்டல் செய்த விராட் கோலி :
அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக நேற்று நடைபெற்ற போட்டியில் அருண் ஜேட்லி மைதானத்தில் டெல்லி அணியை வீழ்த்தி பெங்களூரு அணியானது பழி தீர்த்துக் கொண்டது. அந்த வகையில் நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதனைத்தொடர்ந்து முதலில் விளையாடிய டெல்லி அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்களை குவித்தது. பின்னர் 163 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பெங்களூரு அணி 18.3 ஓவர்களிலேயே 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 165 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றிக்கு பின்னர் டெல்லி அணியின் முன்னணி வீரரான கே.எல் ராகுலை ஜாலியாக கிண்டல் செய்யும் விதமாக விராட் கோலி ரீகிரியேட் செய்த சம்பவம் ஒன்று தற்போது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வகையில் ஏற்கனவே பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற போட்டியின் போது டெல்லி அணியின் நட்சத்திர வீரரான கே.எல் ராகுல் 93 ரன்கள் அடித்து பெங்களூரு அணியை வீழ்த்தியிருந்தார்.
அந்த போட்டிக்கு பின்னர் தனது பேட்டை தரையில் வட்டமிட்டு குத்தி இது தன்னுடைய ஹோம் கிரவுண்ட் என ஆக்ரோஷமான செலிப்ரேஷனில் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில் நேற்றைய போட்டியில் விராட் கோலி தனது சொந்த ஊரான டெல்லியில் விளையாடிய வேளையில் இந்த போட்டியில் பெற்ற வெற்றிக்கு பின்னர் கே.எல் ராகுல் அருகில் சென்று பேட்டை தரையில் குத்துவது போல் சைகை காட்டி அவரை ஜாலியாக கிண்டல் செய்யும் வகையில் விராட் கோலி வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : ஐ.பி.எல் வரலாற்றில் முதல் அணியாக மும்பை இந்தியன்ஸ் அணி நிகழ்த்திய சரித்திர சாதனை – விவரம் இதோ
டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கெதிரான இந்த பிரமாதமான வெற்றியின் மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது இந்த தொடரில் தங்களது 7 ஆவது வெற்றியை பதிவுசெய்து புள்ளிபட்டியலில் முதலிடத்திற்கு சென்றுள்ளது. மேலும் எஞ்சியுள்ள 4 போட்டிகளில் ஒரு வெற்றியை பெற்றால் கூட அந்த அணி எளிதாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.



