ஐ.பி.எல் வரலாற்றில் முதல் அணியாக மும்பை இந்தியன்ஸ் அணி நிகழ்த்திய சரித்திர சாதனை – விவரம் இதோ

MI vs LSG
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 45-வது லீக் போட்டியானது நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஹார்டிக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் மோதின. அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாசில் வெற்றி பெற்ற லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் தங்களது அணி முதலில் பந்துவீசும் என்று அறிவித்தார்.

மும்பை இந்தியன்ஸ் அணி நிகழ்த்திய சரித்திர சாதனை :

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 215 ரன்கள் குவித்தது. மும்பை அணி சார்பாக அதிகபட்சமாக அந்த அணியின் துவக்க வீரரான ரிக்கல்டன் 58 ரன்களையும், சூரியகுமார் யாதவ் 54 ரன்களையும் குவித்து அசத்தினர்.

- Advertisement -

லக்னோ அணி சார்பாக மாயங்க் யாதவ் மற்றும் ஆவேஷ் கான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தனர். பின்னர் 216 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய லக்னோ அணி 20 ஓவர்களின் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 161 ரன்களை மட்டுமே குவித்ததால் மும்பை அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பெற்றது.

மும்பை அணி சார்பாக பும்ரா 4 விக்கெட்டுகளையும், ட்ரென்ட் போல்ட் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். நேற்றைய போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் தற்போது மும்பை இந்தியன்ஸ் அணியானது ஆறாவது வெற்றியுடன் புள்ளி பட்டியலில் மூன்றாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்நிலையில் நேற்றைய போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் ஐபிஎல் வரலாற்றில் முதல் அணியாக மும்பை இந்தியன்ஸ் ஒரு மாபெரும் சரித்திர சாதனையை நிகழ்த்தியுள்ளது.

- Advertisement -

அது குறித்த விவரம் வெளியாகி தற்போது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்து வருகிறது. அந்த வகையில் நேற்றைய போட்டியின் போது பெற்ற வெற்றி மும்பை அணிக்கு 150-வது வெற்றியாக பதிவாகியுள்ளது. இதன் மூலம் ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் 150 வெற்றிகளை பெற்ற முதல் அணி என்ற சரித்திர சாதனையை மும்பை இந்தியன்ஸ் அணி நிகழ்த்தியுள்ளது.

இதையும் படிங்க : யார்கிட்ட மோதுறீங்க.. கேஎல் ராகுலுக்கு டெல்லியில் அதிர்ந்த பதிலடி.. காரசாரமாக கலாய்த்த கிங் கோலி

இந்த தொடரின் முதல் ஐந்து போட்டிகளின் முடிவில் நான்கு தோல்விகளை சந்தித்த மும்பை அணி எவ்வாறு இந்த சரிவில் இருந்து மீண்டு வரப்போகிறது என்று எதிர்பார்த்த வேளையில் கடைசி ஐந்து போட்டிகளாக அவர்கள் தொடர்ச்சியாக வெற்றி பெற்று மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement