யார்கிட்ட மோதுறீங்க.. கேஎல் ராகுலுக்கு டெல்லியில் அதிர்ந்த பதிலடி.. காரசாரமாக கலாய்த்த கிங் கோலி

- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரின் 45வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி டெல்லியை 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. அந்தப் போட்டியில் தங்களுடைய சொந்த ஊரில் முதலில் விளையாடிய டெல்லி 163 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அதைத் துரத்திய பெங்களூரு அணிக்கு ஜேக்கப் பேத்தல் 12, படிக்கல் 0, கேப்டன் ரஜத் படிதார் 6 ரன்னில் அவுட்டானதால் 26/3 என ஆரம்பத்திலேயே திணறியது.

அப்போது நங்கூரமாக விளையாடிய விராட் கோலி 51 (48) ரன்கள் அடித்து வெற்றியை உறுதி செய்தார். அவருடன் சேர்ந்து விளையாடிய க்ருனால் பாண்டியா 73* (47) ரன்கள் அடித்து அசத்தினார். அதனால் 18.3 ஓவரில் இலக்கைத் தொட்ட பெங்களூரு தங்களுடைய ஏழாவது வெற்றியைப் பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது.

- Advertisement -

ரசிகர்கள் பதிலடி:

மறுபுறம் சொந்த மண்ணில் தடுமாற்றமாக விளையாடிய டெல்லி தங்களுடைய மூன்றாவது தோல்வியை சந்தித்தது. முன்னதாக இந்த வருடம் டெல்லி மற்றும் பெங்களூரு அணிகள் சின்னசாமி மைதானத்தில் மோதின. அந்தப் போட்டியில் பெங்களூருவைச் சேர்ந்த கேஎல் ராகுல் 93* ரன்கள் அடித்து பெங்களூரு அணியை தோற்கடித்து ஆட்டநாயகன் விருதை வென்று டெல்லியை வெற்றி பெற வைத்தார்.

அந்தப் போட்டியின் முடிவில் “இது என்னுடைய மைதானம்” என்ற வகையில் ராகுல் காந்தாரா படத்தில் வருவது போல் வித்தியாசமாக கொண்டாடினார். அத்துடன் தாம் பிறந்து வளர்ந்த பெங்களூரு மைதானத்தைப் பற்றி ஆர்சிபி அணி உள்ளிட்ட மற்றவர்களைக் காட்டிலும் தமக்கு நன்றாகத் தெரியும் என்று ராகுல் கூறினார். அந்த சூழ்நிலையில் இந்தப் போட்டி விராட் கோலியின் சொந்த ஊரான டெல்லியில் நடைபெற்றது.

- Advertisement -

கலாய்த்த கோலி:

அங்கே “இது விராட் கோலியின் மைதானம்” என்று ஏராளமான ரசிகர்கள் பதாகைகளில் எழுதி வைத்து ராகுலுக்கு பதிலடி கொடுத்தனர். குறிப்பாக விராட் கோலி பேட்டிங் செய்யும் போது கீப்பராக ராகுல் பின்னே நின்றார். அந்த தருணங்களில் ரசிகர்கள் “இது விராட் கோலியின் மைதானம்” என்று சத்தமிட்டு ராகுலுக்கு பதிலடி கொடுத்தனர்.

இதையும் படிங்க: நாங்க செய்ஞ்ச இந்த சின்ன தப்பு தான் ஆர்.சி.பி அணிக்கெதிரான தோல்விக்கு காரணம் – அக்சர் படேல் வருத்தம்

அது ஒருபுறமிருக்க ஓவர் மாற்றும் போது ஏதோ ஒரு விஷயம் பற்றி கேஎல் ராகுலிடம் விராட் கோலி காரசாரமாக பேசினார். அதற்கு ராகுலும் தன் பக்கம் இருந்த விசைகளை பதிலாக கொடுத்தார். இறுதியில் போட்டி முடிந்த பின் ராகுல் அருகே சென்று “இது என்னுடைய மைதானம்” என்று சிரித்துக்கொண்டே செய்து காட்டிய விராட் கோலி கலாய்த்து பதிலடி கொடுத்தார். அந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement