நாங்க செய்ஞ்ச இந்த சின்ன தப்பு தான் ஆர்.சி.பி அணிக்கெதிரான தோல்விக்கு காரணம் – அக்சர் படேல் வருத்தம்

Axar Patel
- Advertisement -

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நேற்று நடைபெற்ற நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 46-வது லீக் போட்டியில் விளையாடிய அக்சர் பட்டேல் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணியானது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியிடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்து இந்த தொடரில் தங்களது மூன்றாவது தோல்வியை பதிவுசெய்து புள்ளி பட்டியலில் நான்காவது இடத்திற்கு பின் தங்கியது.

பெங்களூரு அணிக்கு எதிரான தோல்விக்கு இதுதான் காரணம் : அக்சர் படேல்

அதேவேளையில் டெல்லி அணியை வீழ்த்திய பெங்களூரு அணியானது ஏழு வெற்றிகளுடன் தற்போது முதல் இடத்திற்கு சென்றுள்ளது. அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய டெல்லி அணியானது :

- Advertisement -

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்களை குவித்தது. பின்னர் 163 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு பெங்களூரு அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பெங்களூரு அணியானது 18.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 165 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் அடைந்த தோல்வி குறித்து பேசிய டெல்லி அணியின் கேப்டன் அக்சர் பட்டேல் கூறுகையில் : உண்மையிலேயே இந்த போட்டியில் 10 முதல் 15 ரன்கள் வரை குறைவாக எடுத்து விட்டதாக நினைக்கிறோம். முதல் இன்னிங்ஸில் விக்கெட் சற்று பேட்டிங் செய்ய கடினமாக இருந்தது. ஆனால் இரண்டாவது பாதியில் ஆடுகளும் முற்றிலுமாக மாறியது.

- Advertisement -

இந்த போட்டியில் சில முக்கியமான கேட்ச்களை நாங்கள் தவறவிட்டோம். அந்த கேட்ச்கள் எல்லாம் நிச்சயம் பிடித்திருக்க வேண்டும். அதேபோன்று இந்த மைதானம் பனிப்பொழிவுக்கு பிறகு பேட்டிங் செய்ய மிகவும் எளிதாக மாறியது. முதலில் நாங்கள் பேட்டிங் செய்யும்போது அடுத்தடுத்து விக்கெட்டுகளை சீரான இடைவெளியில் விழுந்ததால் பெரிய பார்ட்னர்ஷிப்பை அமைக்க முடியவில்லை.

இதையும் படிங்க : எந்த கிரவுன்ட்ங்குறது முக்கியம் இல்ல.. இதுதான் முக்கியம்.. டெல்லி அணியை வீழ்த்திய பின்னர் – ரஜத் பட்டிதார் மகிழ்ச்சி

ஒரு 10 முதல் 15 ரன்கள் வரை இந்த போட்டியில் கூடுதலாக அடித்திருந்தால் எங்களுக்கு சாதகமாக இருந்திருக்கும் என அக்ஸர் பட்டேல் கூறினார். டெல்லி அணி நாளை ஏப்ரல் 29-ஆம் தேதி தங்களது அடுத்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக விளையாட இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement