- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இதெல்லாம் இருந்தும் தோத்தா ரசிகர்கள் திட்டமா என்ன செய்வாங்க கம்பீர்.. வெளிப்படையாக இருங்க.. ஜஹீர் அறிவுரை

இந்திய கிரிக்கெட் அணி தென்னாபிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 25 வருடங்கள் கழித்து சொந்த மண்ணில் படுதோல்வியைச் சந்தித்தது. ஏற்கனவே கடந்த வருடம் நியூசிலாந்துக்கு எதிராகவும் இந்தியா சொந்த மண்ணில் வரலாறு காணாத ஒயிட்வாஷ் தோல்வியை சந்தித்தது. அதனால் இந்திய அணிக்கு சொந்த மண்ணில் எப்படி விளையாட வேண்டும் என்பதே மறந்து விட்டதா என்று ரசிகர்கள் வேதனையை வெளிப்படுத்துகின்றனர்.

அந்த தோல்விக்கு இந்திய பேட்ஸ்மேன்கள் சுழல் பந்துகளை நன்றாக எதிர்கொள்ளாதது முக்கிய காரணமானது. அதே போல ஒருதலைபட்சமாக சுழலுக்கு சாதகமாக அமைக்கப்பட்டிருந்த பிட்ச்கள் மற்றொரு காரணமானது. மேலும் சோதனை என்ற பெயரில் பயிற்சியாளர் கெளதம் கம்பீர் செய்யும் மாற்றங்கள் மற்றும் தவறான தேர்வுகளும் தோல்விக்கு காரணமாகிறது.

- Advertisement -

திட்டாம என்ன செய்வாங்க:

அது பற்றி கேட்டதற்கு தாங்கள் தான் அப்படிப்பட்ட பிட்ச்சுகள் வேண்டுமென்று கேட்டு வாங்கியதாக கம்பீர் தெரிவித்தார். அந்த பிட்ச்களில் இந்திய அணி நன்றாக விளையாடாததே தோல்வியை கொடுத்ததாகவும் அவர் தெரிவித்திருந்தார். அதனால் கோபமடைந்த இந்திய ரசிகர்கள் கௌதம் கம்பீர் டெஸ்ட் அணியின் பயிற்சியாளர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று விமர்சித்து வருகிறார்கள்.

அதற்கு 2025 சாம்பியன்ஸ் ட்ராபி, ஆசியக் கோப்பையை வென்று கொடுத்ததை மறந்த ரசிகர்கள் தம்மை விமர்சிப்பதாக கம்பீர் ஆதங்கத்தை தெரிவித்திருந்தார். இந்நிலையில் அடிப்படை வசதிகள், திறமையான வீரர்கள் போன்ற அனைத்தும் இருந்தும் வெற்றியைப் பெற்றுக் கொடுக்காவிட்டால் ரசிகர்கள் திட்டாமல் என்ன செய்வார்கள? என்று கௌதம் கம்பீரை முன்னாள் வீரர் ஜஹீர் கான் விமர்சித்துள்ளார்.

- Advertisement -

வெளிப்படையா இருங்க:

அத்துடன் அணியின் தேர்வுகள், முக்கியமான முடிவுகள் ஆகியவற்றில் கம்பீர் வெளிப்படையாக நடந்து கொண்டால் ரசிகர்கள் விமர்சிக்க மாட்டார்கள் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “உணர்வுகள் உச்சமாக ஓடுகின்றன. நீங்கள் ஒவ்வொரு போட்டியிலும் வெல்வீர்கள் என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. ஏனெனில் நீங்கள் நிலையாக வெற்றிகளைப் பெற்றுள்ளீர்கள்”

“அந்த வெற்றிகளையும் சாதனைகளையும் தொடர்ந்து பெறுவதற்கு தேவையான பலம் உங்களிடம் இருக்கிறது. எனவே உங்கள் மீது பொறுப்புணர்வும் மதிப்பீடும் எப்போதும் இருக்கும். இந்த வகையான விமர்சனங்களை சமாளிக்க நீங்கள் தடிமனான தோலை கொண்டிருக்க வேண்டும். உங்களிடம் போதுமான திறமை இருப்பதால் நீங்கள் வெற்றி பெறுவீர்கள் என்ற எதிர்பார்ப்பும் சேர்ந்து வருகிறது”

இதையும் படிங்க: அடுத்த போட்டியில் அவருக்கு சேன்ஸ் தரலனா அது பெரிய முட்டாள் தனம் – ரவிச்சந்திரன் அஷ்வின் கருத்து

“உங்களால் இன்னும் நன்றாக செயல்பட முடியும் என்று தெரியும் போது ஏமாற்றம் வருகிறது. அதுவே விரக்தியாகவும் விமர்சனங்களாகவும் வெளிப்படுகிறது. எனவே நீங்கள் வெளிப்படையாக பேசும் போது ரசிகர்கள் அதைப் புரிந்து கொள்வார்கள். நீங்கள் மறைமுகமாக சொல்லப்படும் சிந்தனை செயல்முறைகளை வெளிப்படையாகக் காட்டினால் அதை ரசிகர்கள் புரிந்து கொள்வார்கள். அவர்கள் அலைக்கழிக்கப்படாமல் இருப்பது முக்கியம்” என்று கூறினார்.

- Advertisement -