சூரியகுமார் மாதிரி அவரும் வரலாம்.. வெய்ட் பண்ணுங்க.. சொதப்பல் இளம் வீரருக்கு ஜாஹீர் கான் ஆதரவு

Zaheer Khan 3
- Advertisement -

இந்திய அணிக்காக விளையாட ஏராளமான வீரர்கள் தொடர்ந்து உள்ளூர் கிரிக்கெட்டில் கடுமையாக போட்டியிட்டு வருகிறார்கள். அந்த வரிசையில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த இளம் வீரர் ரியான் பராக் இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்ற கனவுடன் உள்ளூர் போட்டிகளில் விளையாடி வருகிறார். கடந்த 2018 அண்டர்-19 உலகக் கோப்பை வென்ற இந்திய அணியில் இடம் பிடித்திருந்த அவர் 2019 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தானுக்கு அறிமுகமானார்.

அதில் ஒரு போட்டியில் இளம் வயதில் ஐபிஎல் அரை சதமடித்த வீரர் என்ற சாதனை படைத்து வெற்றியை பெற்றுக் கொடுத்த அவரிடம் ஏதோ ஒரு திறமை இருப்பதாக நம்பும் ராஜஸ்தான் அணி நிர்வாகம் கடந்த 5 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து வாய்ப்பளித்து வருகிறது. ஆனால் அந்த வாய்ப்பில் 54 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் வெறும் 600 ரன்களை 16.22 என்ற மோசமான சராசரியில் எடுத்து வருவதால் ரசிகர்களின் கிண்டல்களுக்கு உள்ளாகியுள்ளார்.

- Advertisement -

சூரியகுமார் மாதிரி:
ஆனால் என்னமோ பெரிய சாதனைகளை செய்தது போல் சமூக வலைதளங்களில் பேசுவதை வழக்கமாக வைத்துள்ள அவர் 2023 சயீத் முஸ்டாக் அலி கோப்பை தொடரில் தொடர்ந்து 6 அரை சதங்கள் அடித்தார். அதன் வாயிலாக டி20 கிரிக்கெட்டில் 6 தொடர்ச்சியான போட்டிகளில் 50க்கும் மேற்பட்ட ரன்கள் அடித்த முதல் வீரர் என்ற உலக சாதனை படைத்த அவர் இங்கே உள்ள மற்ற வீரர்களை விட நான் உயர்ந்தவன் என்பது போல் சைகை செய்தது ரசிகர்களை கடுப்பாக வைத்தது.

அதனால் இந்தியாவுக்கு விளையாடுவதற்கு முன் முதலில் நன்னடத்தையை கற்றுக் கொள்ளுங்கள் என்று ரசிகர்கள் அவரை விமர்சிப்பது வாடிக்கையாகி வருகிறது. இந்நிலையில் ஆரம்பத்தில் தடுமாறினாலும் 30 வயதிற்கு பின் அசத்திய சூரியகுமார் யாதவ் போல ரியான் பராக் வருங்காலங்களில் அசத்துவதற்கு வாய்ப்புள்ளதாக ஜாகிர் கான் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “சூரியகுமார் யாதவ் ஒரு எடுத்துக்காட்டு. இதைச் சொல்வதற்கு நீங்கள் 5 வருடங்கள் பின்னோக்கி செல்ல வேண்டும் என்பதை அறிவீர்கள். எனவே ரியான் பராக் தனக்குள் மகத்தான வீரர்களை கொண்டுள்ளார். நிறைய நல்ல இன்னிங்ஸ் விளையாடியுள்ள அவர் இந்த சீசனில் அதிக ரன்கள் அடித்துள்ளார். இந்திய அணியில் தற்போது நிறைய வீரர்கள் வாய்ப்புக்காக காத்திருக்கின்றனர்”

இதையும் படிங்க: காலத்துக்கும் அவங்க இந்தியாவுக்கு விளையாட முடியாது.. கழற்றி விட நேரம் வந்தாச்சு.. கங்குலி கருத்து

“எனவே நீங்கள் ஒவ்வொரு வருடமும் தொடர்ந்து பெரிய ரன்கள் குவித்துக் கொண்டே இருக்க வேண்டும். உதாரணமாக சூரியகுமார் யாதவ் அறிமுகமாவதற்கு முன்பாக ஒவ்வொரு வருடமும் நிறைய ரன்கள் அடித்ததால் இவரை புறக்கணிக்க முடியாது என்ற நிலைமை உருவானது. அப்படி தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டதன் காரணமாக அவருக்கு இந்திய கிரிக்கெட் அணியில் தகுதியான வாய்ப்பும் கிடைத்தது” என்று கூறினார்.

Advertisement