சரிந்து கிடக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட்டை தூக்க இந்தியா இந்த ஹெல்ப் பண்ணனும்.. ஜஹீர் அப்பாஸ் கோரிக்கை

Zaheer Abbas
- Advertisement -

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தற்சமயத்தில் மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளது. 1992 சாம்பியனான பாகிஸ்தான் 2022, 2023, 2024 ஐசிசி தொடர்களில் முறையே ஜிம்பாப்பே, ஆப்கானிஸ்தான், அமெரிக்கா போன்ற 2வது தர அணிகளிடம் அவமானத் தோல்விகளை சந்தித்தது. அதன் உச்சமாக வங்கதேசத்துக்கு எதிராக சொந்த மண்ணில் முதல் முறையாக 2 – 0 (2) என்ற கணக்கில் டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் மற்றுமொரு தோல்வியை சந்தித்தது.

இந்நிலையில் பாகிஸ்தான் வீரர்கள் அதிகப்படியான டி20 கிரிக்கெட்டில் விளையாடி டெஸ்ட் கிரிக்கெட்டை மறந்து விட்டதாக முன்னாள் வீரர் ஜஹீர் அப்பாஸ் கடுமையாக விமர்சித்துள்ளார். அந்த வகையில் பணத்துக்காக டி20 கிரிக்கெட்டில் கவனம் செலுத்துவதாலேயே பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் வீழ்ச்சியை சந்தித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த சூழ்நிலையில் அடுத்த பிப்ரவரி மாதம் பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி நடைபெறுகிறது.

- Advertisement -

பாகிஸ்தானின் வீழ்ச்சி:

அந்தத் தொடரில் இந்தியா விளையாட வந்து சரிந்து கிடக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட்டை முன்னோக்கி எடுத்துச் செல்ல உதவ வேண்டும் எனவும் ஜஹீர் அப்பாஸ் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் 1978இல் தம்முடைய விக்கெட்டை சுனில் கவாஸ்கர் எடுத்தது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “பாகிஸ்தானில் அதிகப்படியான டி20 போட்டிகள் விளையாடப்படுகிறது. அதனால் டெஸ்ட் கிரிக்கெட்டின் முக்கியத்துவத்தை நம்முடைய வீரர்கள் மறந்து விட்டனர்”

“அதனாலேயே டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர்கள் சிறப்பாக செயல்படவில்லை. டி20 கிரிக்கெட்டில் நிறைய பணம் கிடைக்கிறது. அதனால் அவர்கள் பணத்தை சம்பாதிப்பதற்காக அதில் கவனத்தை செலுத்துகிறார்கள். போதாக்குறைக்கு கிரிக்கெட்டை சரியாக புரிந்து கொள்ளாதவர்கள் பாகிஸ்தான் வாரியத்தை நடத்துவது மேலும் துரதிஷ்டவசத்தை ஏற்படுத்தியுள்ளது”

- Advertisement -

இந்தியாவுக்கு கோரிக்கை:

“நாங்கள் பாகிஸ்தான் கிரிக்கெட்டை சிறந்த உயரத்துக்கு எடுத்துச் சென்றோம். அதனால் இந்த உலகம் நம்முடைய கிரிக்கெட்டை ரசித்தது. ஆனால் இன்று நிர்வாகத்தில் இருப்பவர்கள் தங்களுடைய சொந்த விஷயங்களை மட்டுமே பார்க்கின்றனர். பாகிஸ்தான் கிரிக்கெட்டையும் வீரர்களையும் பார்ப்பதில்லை. இந்திய அணி கிரிக்கெட்டின் சிறந்த அம்பாசிடர். எனவே அவர்கள் பாகிஸ்தானுக்கு விளையாட வந்தால் அது கிரிக்கெட்டை எங்களுடைய நாட்டில் முன்னோக்கி எடுத்துச் செல்ல உதவும்”

இதையும் படிங்க: உ.கோ ஜெய்க்கலனாலும் இந்த நெருப்பை.. எதுக்கும் குறையாத விராட் கோலி தான் உண்டாக்குனாரு.. ஹர்பஜன் பாராட்டு

“1978 போட்டியில் சுனில் கவாஸ்கர் எனக்கு எதிராக பந்து வீச வந்தார். அவருக்கு எதிராக நான் அடித்த ஷாட் காற்றில் சென்று கேட்ச்சாக மாறியது. அதனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜஹீர் அப்பாஸ் என்னுடைய முதல் மற்றும் ஒரே விக்கெட் என்று சுனில் கவாஸ்கர் எப்போதும் பெருமையுடன் சொல்வார்” என்று கூறினார். இருப்பினும் பாதுகாப்பு பிரச்சனைகளால் பாகிஸ்தானுக்கு சென்று இந்தியா விளையாடாது என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement