இந்திய டெஸ்ட் அணியில் எப்படியாவது ஒருமுறை விளையாடிவிட வேண்டும். அதுவே எனது ஆசை – இளம்வீரர் ஓபன் டாக்

IND-2

யுஸ்வேந்திர சாகல் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளராக இருக்கிறார். தோனியின் தலைமையில் 2016 ஆம் ஆண்டு அறிமுகமானவர். இதுவரை 52 ஒருநாள் போட்டிகளிலும், 42 டி20 போட்டிகளும் ஆடியிருக்கிறார். மொத்தம் ஒருநாள் போட்டிகளில் 91 விக்கெட்டுகளும், டி20 போட்டிகளில் 56 விக்கெட்டுக்களை வீழ்த்தி இருக்கிறார்.

Chahal

ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோருக்கு மாற்றாக இவர் விராட் கோலியால் கொண்டு வரப்பட்டவர். ஆனால் தற்போது வரை இவர் டெஸ்ட் போட்டிகளில் களமிறங்கியதில்லை. தற்போது 30 வயதாகும் இவர் எப்படியாவது டெஸ்ட் போட்டியில் ஆடி விட வேண்டும் என்ற தனது ஆசையை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்..

நான் கடைசியாக நடைபெற்ற 8 ரஞ்சி கோப்பை போட்டிகளில் 46 விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கிறேன். இந்த போட்டிகளில் எல்லாம் ஒவ்வொரு முறையும் 25 ஓவர்கள் தொடர்ந்து வீசி இருக்கிறேன். சிவப்புப் பந்தில் விளையாடுவது எனக்கு மிகவும் பிடிக்கும். இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டியில் விளையாடுவது எனது விருப்பம்.

ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் நன்றாக விளையாடிவிட்டு, டெஸ்ட் போட்டிகளில் எப்படியாவது இடம் பிடித்து ஆட வேண்டும். இதுதான் என் ஆசையாக இருக்கிறது என்று கூறியுள்ளார் யுஸ்வேந்திர சாகல். என்னால் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடுவது போன்று டெஸ்ட் போட்டிகளிலும் சிறப்பாக விளையாடமுடியும் என்று கூறியுள்ளார்.

- Advertisement -

Chahal

டெஸ்ட் போட்டிகளை விளையாட தேவையான பொறுமையும், நிதானமும் என்னுள் இருக்கிறது. எனவே விரைவில் இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடித்து விளையாடுவேன் என்று தெரிவித்துள்ளார். எனக்கு நிச்சயம் கேப்டன் கோலி ஆதரவளிப்பார் என்று சாஹல் தெரிவித்துள்ளார்.